Saturday, July 30, 2005

வில்லியம் ஆர்ச்சிபால்டு ஸ்பூனர் என்னும் பாதிரியார் (1844-1930) பேசும்போது பல தவறுகள் செய்வாராம். Take a shower என்பதற்கு shake a tower என்பாராம். இதை 'டிப் ஆ·ப் தி ஸ்லங்'...ஸாரி.."ஸ்லிப் ஆ·ப் தி டங்' என்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உண்டு. I came by the down train என்பதற்குப் பதில், I came by the town drain என்பது ஓர் அடிக்கடி உதாரணம்.

இந்த ஸ்பூனரிசம் (Spoonerism) தமிழில் இருக்கிறது என்று ஹ்யூமர் கிளப் சீதாராமன் இரண்டு உதாரணங்கள் கொடுத்தார். வண்ண உடை என்பதற்கு உண்ண வடை என்று சொல்வடு. தம்பி கடை என்பதற்கு கம்பி தடை என்பதும் ஸ்பூனரிசம்தான்.

வசந்த் சொன்ன இரண்டு உதாரணங்களை சீதாராமன் ரசித்திருக்க மாட்டார். "பாஸ்! 'மக்கள் குடிக்கக் கஞ்சியில்லாமல் தவிக்கிறார்கள்' என்று ஒரு சொற்பொழிவாளர் பேசியபோது, ஏன் சிரித்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை.

விழா முடிந்து, பந்தியில் சாப்பிட உட்கார்ந்தார். பாயசம் பரிமாறும்போது, அது இலையில் சொட்டுவதைக் கண்டு, 'ஆப்பை ஓட்டையா?' என்று கேட்டபோது, சர்வர் ஏன் கன்னத்தில் அறைந்தார் என்பதும் அவருக்குப் புரியவில்லை' என்றான்.
-கற்றதும் பெற்றதும், சுஜாதா, விகடன்.காம்

Friday, July 29, 2005

நயாகரா நீர் வீழ்ச்சி (கனடா)
தரும் மன மகிழ்ச்சிக்கு ஈடேது?

Tuesday, July 26, 2005

பரிசுகளில் என்றுமே 'நம்பிக்கை' இல்லாததால்........
இவை 'வாசிப்பவர்களுக்கு' மட்டும்!

பரமனை நோக்கித் தவமிருந்தேன்...
வரம் கிடைக்கும் நம்பிக்கையில்!

--------------------------

பாவை பார்வை பட
வழி நெடுக, விழி நோகத்
தவம் கிடந்தேன்........
காதல் கனியும்
நம்பிக்கையில்!

--------------------------

கவிதை எழுதிப் பார்த்தேன்
'பரிசு விழும்' நம்பிக்கையில்!

--------------------------

'கவிதைக்கு பரிசு' என்றார்
'ஓவர் நைட்'-ல் பாப்புலராவோம்
நம்பிக்கையில்!

--------------------------

இரவு படுத்தால் விழித்தெழுவது
உன் கையில் இல்லை எனும்போது
'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!

--------------------------

பரிசு விழுந்தால்
நம்பிக்கை ஜயிக்கும்........!
தோற்றுப் போனால்
கவிதை நிலைக்கும்!

--------------------------

'நம்பிக்கை' மீது
காதலாகி,
கசிந்து,
கண்ணீர் மல்கி,
கவிதை எழுதினேன்....
'பரிசுக்காக'!

--------------------------

'ப்ரீயாய்க் கொடுத்தால் பினாயிலும் அடிக்கும்'
தமிழனுக்குப் பரிசு வைத்தால்..........
'சும்மா இருக்க மாட்டான்' என்ற
நம்பிக்கை வீண் போகத் தான் இல்லை!

Monday, July 25, 2005

கத வுடறத படி........இல்ல நான் சொல்றத கேளு!
காந்தி இளவயதில் உடல் வலுவில்லாதவராய்த்தான் வளர்ந்தார். அவரது பயந்தாங்கொள்ளித்தனமே பின்னால் அஹிம்சையாய் வளர்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல.

காந்தி எழுதுகிறார் தனது சுயசரிதத்தில்: "நான் என் அண்ணனின் தங்கக் காப்பிலிருந்து சிறிது தங்கத்தை வெட்டி எடுத்தேன். கடைசியில் என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து எனக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தேன். நோய்ப் படுக்கையில் இருந்த என் தந்தை, கடிதத்தைப் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையைக் காண முடிந்தது. அஹிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்கு சரியானதொரு பாடம் ஆயிற்று. அத்தகைய அஹிம்சை எல்லாவற்றிலும் வியாபிக்கப்படும்போது அது தொட்டதை எல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை."

அனுபவங்கள்தான் நம் வாழ்வை அமைக்கின்றன. அந்த அனுபவங்களுக்கு நாம் கொடுக்கும் விளக்கம், அதை நாம் பயன்படுத்தும் முறை இவை நமது குணநலங்களின் பிரதிபலிப்பு.

-தலைவன் ஒரு சிந்தனை, டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி, கங்கை புத்தக நிலையம்
மிகவும் அமைதியாக ஒன்று + ஒன்று முயற்சி அரங்கேறி வருகிறது. தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வதை விட, படித்து மனதில் பதிவு செய்தால் அதுவே சந்தோஷம்தான்.
இங்குள்ள பெற்றோர்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்புகிறேன். நம் தேசத்தின் எதிர்காலம் நம்ம குழந்தைகள் கிட்ட இல்லை. அவர்கள் பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.

நான் ரொம்ப அடம் பிடிப்பேன். ஏதாவது நினைச்சா செய்வேன். ஏதாவது சொல்லி அதை மாத்திடுவேன். அதற்கு மேக்கப் கலைஞர் முத்தாப்பாண்ணன் சொன்னார் "உங்கள் பெற்றோர்கள் உங்களை அடித்து வளர்க்கலை" என்று.

நான் சொன்னேன் "அடிச்சுதான் வளர்த்தாங்க. ஆனால் அன்பு கொடுத்து வளர்க்கலை. அதுதான் இப்படி ஆயிட்டேன். ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து வளர்க்கிறீங்களோ இல்லையோ, அவங்களுக்கு நல்ல படிப்பு கொடுக்கறீங்களோ இல்லையோ, நல்ல மனிதன் ஆகணும்னா நல்ல அன்பைக் கொடுத்து அவங்களை வளர்த்துங்கள்."

-
'சங்கர் குரு' 100வது நாள் விழாவில் நடிகர் திரு ரஜினிகாந்த் பேசியது

நன்றி: மனதில் நிற்கும் மனிதர்கள், எம் சரவணன், வானதி பதிப்பகம்

Sunday, July 24, 2005


பிரியசகி




அந்நியன் ஆர்ப்பாட்டத்திற்கிடையே அதியமான் இயக்கத்தில் வெளியான 'பிரியசகி' காதலைத் தாண்டிய குடும்பப் படம்.

கதை 'அலைபாயுதே' (இன்ஸ்பிரேஷன் மட்டும்தான்!) என்றாலும் காட்சிகளுக்காகவும், வசனங்களுக்காகவும் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார்கள். இதனால், படம் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

படத்தில் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மாதவன். துபாயில் சதாவை 'சதா'ய்ப்பதில் குறும்புக் காதலனாக, திருமணமானபின் சதாவிடம் வழியும் வழிசல்களில் இயல்பான கணவனாக, கூட்டுக் குடும்ப அன்பில் தன்னைத் தொலைக்கும்போது நல்ல மகனாக, தன் வாரிசு தனக்கு வேண்டுமெனத் தீர்மானமாய்ச் சொல்லும் போது உறுதியான தந்தையாக, என இழைத்து இழைத்துச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிகளில், காதலைக் கண்களாலேயே தெரிவிக்கும்போது........சபாஷ் மாதவன்! எனக்கே பிடிக்கிறதென்றால், பெண்கள் என்றுமே உங்கள் பக்கமிருப்பதற்குக் காரணம் புரிகிறது!

சதா சாதாவா, சோதாவா எனக் குழம்பியது டீக்கடா வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தீர்ப்பு இதோ: சதா நிச்சயம் சோதாதான்!

காட்சிக்குக் காட்சி கலகலப்பு ஐஸ்வர்யாவும், கோவை சரளாவும்தான்; இருவர் செய்யும் அலம்பல்களில் தியேட்டரே சிரித்து வழிகிறது.

பரத்வாஜ் இசையில் 'பிரியசகி', 'சின்ன மகராணி' பாடல்கள் உயர்ரகம். இது தவிர, பாடல் வரிகள் புரியும்படியாயான இசைக்கு ஒரு சலாம்.

துபாயைக் கச்சிதமாய்ப் படம் எடுத்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஜே!

'தொட்டாசிணுங்கி' மூலம் அசைய வைத்த அதியமான் 'பிரியசகி'யில் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Thursday, July 21, 2005

பொதுவாகப் பாடல்களை ரசிப்பது கொஞ்சம்; அதுவும் 'கானா' பாடல்கள்..ஊஹ¤ம்!
இந்தியா சென்றிருந்த சமயம். தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட். மெடிகல் காலேஜ் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த போது ஒலித்த பாடல் 'நச்' என மனதில் பதிந்தது. மிக எளிமையான, ஆனால் லாவகமான, அதே சமயத்தில் அசிங்கமில்லாமல் விழுந்திருந்த வரிகள் என் புருவத்தை உயர்த்தி சிரிக்க வைத்தன. இறுதியில் சொல்லாமல் சொல்லும் 'மெஸேஜ்' ஸிம்ப்ளி சூபர்ப்!
தங்கையிடம் விசாரித்ததில் 'ஆமாம்! இந்தப் பாட்டு நல்லாருக்கும்' என்றாள்; என் மாமிக்கும் கூட பாட்டு பிடித்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
'ஜெயசூர்யா' படத்தில், 'டப்பாங்குத்து' புகழ் தேவா இசையில், அர்ஜுன், வடிவேலு, ஜயலஷ்மி பாடிய பாடல் கட்டுனா அவள கட்டணும்டா உங்களையும் புன்னகைக்க வைத்துத் தாளம் போட வைக்கும்.
காமெடி கார்னர் 3

Wednesday, July 20, 2005

வெங்கிட்டு ஸார், ராம், ஜுனியர் கண்ணதாசன் கவிதைகளைப் படித்த போது 'நானும் எழுதினால் என்ன?'

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...

'ஏன், எதற்கு, எப்படி' என
வியப்பூட்டும் நட்சத்திரங்கள்...

பரந்த விரிந்த உலகின்மேல்
உயர்ந்திருக்கும் நட்சத்திரங்கள்...

வெல்வெட்-ல் பதித்த வைரம்போல்
வானில் மின்னும் நட்சத்திரங்கள்..

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...

பி.கு: இது நம் எல்லோருக்கும் அறிமுகமான பாட்டுதான்:-)

Tuesday, July 19, 2005

அந்நியன்!

என் தம்பி பொண்ணு!

"பெண்ணை - ஆடை கட்டிப் பார்த்தால் கலை;
நிர்வாணமாய்ப் பார்த்தால் கவிதை;
பிணமாகப் பார்த்தால் தத்துவம்."
-கவியரசு கண்ணதாசன்
தமிழ்ல எழுதினேன்பா.......

என்னப்பா தமிழ் படிக்க தெரியாதா?
சரி போ...அதையே
இங்க்லீஷ்ல ·பர்ஸ்ட் காமென்ட்-ஆ போட்டுர்றன்!

என்ன தமிழே தெரியாதா?
இங்க்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிர்றேன்!

அப்போ இங்க்லீஷ்லயே எழுதிருக்கலாமே?!
காமெடி கார்னர் 2
Chilled Beer!

Monday, July 18, 2005

குடும்பம் இந்தியா, நான் கனடா என்றாகிவிட்ட நிலையில் உருவான தனிமைத் தவத்தை விரட்ட என்னை நானே எதிலாவது செலுத்திக் கொள்வதுண்டு.

இறை வணக்கம், பொது நூலகத்தின் தயவில் நல்ல நூல்கள், திரைப்பட ஒளி நாடாக்கள், எழுத்து, புத்தம் புது சினிமா என புதுப்பித்துக் கொண்டாலும் தனிமைத் தீ என்னைச் சமயத்தில் சுட்டெரிக்கிறது.

நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாத பலவீனம், மற்றும் நல்ல நண்பர்களுடன் தொடர்பில்லாத நிலை எனும்போது இது இன்னும் அதிகமாகிறது.

இந்நிலையில்
இந்தப் பாடல்...

நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும
யோசித்துப் பார்க்கும்பொழுது, அழும் அளவிற்கு கண்ணீர் இருக்கிறது; உறங்க நாளும், சாய தோளும் இல்லை......
கண்ணதாசன் எழுதிய பாடல் இது...
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே!
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்......எவ்வளவு பேரை நாம் 'வாழ' வைத்திருக்கிறோம்?

Sunday, July 17, 2005

சின்னா

படம் பாத்துட்டு வந்த நம்மால இப்டி சிரிக்க முடியலையே!

Saturday, July 16, 2005

மிகச் சமீபத்தில் எனக்கு பிரபு அண்ட் ·பெராரி அறிமுகம் கிடைத்தது. மனதாரச் சொல்ல வேண்டுமெனில் படிக்கப் படிக்க உற்சாகம்.
எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத இயல்பு மற்றும் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் புதிது. வித்தியாசமாய்த் தளத்தை அமைத்திருக்கும் அவரது முயற்சியும் எனக்கு மிகவும் புதிது.
அத்தைக்கு மீசை முளைத்தால்.. கேள்வி போட்டு நம்மை யோசிக்க வைப்பது; குழந்தை பிறக்க பத்து மாசம் தவறு என்று சொல்லி அதிர வைப்பது; அந்நியன் நோக்கியாவை அண்ணல் நோக்கியவளாக மாற்றி சிரிக்க வைப்பது; தான் க்ருஷ்ணா க·பேவில் சாப்பிட்டதைக் கூட மேட்டராய்ப் போடும் தைரியம்; ப்ரீபெய்ட்/போஸ்ட்பெய்ட்-ன் சோகத்தை கேப்டன் படம் போட்டு மறக்க வைப்பது; ·பேராரி வேகத்தில் செல்லும்போது தும்மல் வந்தால் என்ன ஆகும் என நிசம்மாகவே அப்பாவியாய் கவலைப்படுவது; முதலிரவு பற்றிய ஹைகூவில் ஆதங்கம்; பெங்களூர் ஆகாயத்தைப் படம் பிடிக்கும்போது தெரியும் "வேலை அவ்வளவாக இல்லை!'; மெனக்கிட்டு மழைக் காலத்தில் மும்பை சென்று அற்புதமாய்ப் படம் பிடிப்பது... எனப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்தான்
மொத்தத்தில் அந்நியனில் வரும் 'ஓ...சுகுமாரி......' பாடலை இனி '·பெராரி உன் எழுத்தில் சிக்கி முக்கி திக்கி விக்குது' என மாற்றி பாடத் தோன்றுகிறது!
பிரபு ஸார்! உங்க தளத்தில் எழுத ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.....ப்ளீஸ்!
என் நண்பர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது
சில நாட்களாகத்தான் அந்தப் பெண்ணை நான் bells road பஸ் ஸ்டாப்பில் பார்க்கிறேன். ரொம்ப simple. நான் போகும் பஸ்(எண் 25)-ஸில்தான் இவளும்! tvs ஸ்டாப்பில் நான் இறங்குவதால், அவள் எங்கு போகிறாள் எனத் தெரியத்தான் இல்லை. (tvs வடபழனியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) அவளும் என்னைக் கவனிக்கிறாளா என்றும் தெரியவில்லை.
ஆனால், மூன்று நாட்களாக எனக்கு மிக அருகாமையில் நின்றதில், எங்கள் கண்கள் எதேச்சையாக(?!) மோதிக் கொண்டன. இதனால், அலுவலகம் இல்லாத ரெண்டாவது சனிக்கிழமையான் இன்றும், டீக்காக உடுத்திக்கொண்டு பஸ் ஸ்டாப் வந்தேன்.
'எப்படியாவது இன்னிக்கு அவகிட்ட ரெண்டு வார்த்தை(ஏன் மூணு வார்த்தைன்னு சொல்லக்க்கூடாது?!)யாவது பேசிடணும்' என்று முடிவு செய்து, எனக்கு முன்பாகவே வந்து 25-க்காகக் காத்துக்கொண்டிருந்தவளின் (எனக்காக என எழுதத்தான் ஆசை!) அருகில் நின்றேன். கொஞ்சம் costlyயான 'கோரா' ஸில்க்/attached short sleeves அணிந்திருந்தாள். இன்னும் நெருங்கியதில், lavender மணம்! (கண்கள் மோதிக்கொண்டன!)
தொண்டையை அவளுக்குக் கேட்காத அளவுக்கு செருமி, நான் "எக்ஸ்க்யூஸ் மீ" என்றதில் நிமிர்ந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தாள். (நான் totally flat!)
"25 போயிடுத்தா?" என்றேன்.
காமெடி கார்னர் 1

Monday, July 11, 2005

'அழகு' பற்றி பேசும்போது எனக்கு நினைவில் நிற்கும் பாடல்கள் இரண்டு.......அதில் ஒன்று இதோ...

படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயது கோலம்
இது யார் மீது பழி வாங்கும் சோதனை?
உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை!


எனத் துவங்கி, நடுவில் நம்மைப் புருவம் உயர்த்த வைக்கும் 'நச்' வரிகள்

உனை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது
அது கோடானு கோடியை ஏய்க்கின்றது!

(என்ன கேப்ரிம்மா இப்போ திருப்திதானே!)

'எல்லோரும் நல்லவரே' படத்தில், வி குமார் இசையில், எஸ்.பி.பியின் இழையும் குரலில், கண்ணதாசன் (என்றுதான் நினைக்கிறேன்) எழுதிய இந்தப் பாடலை ரசனை உள்ள அனைவராலும் ரசிக்க முடியும்.

பி.கு:
1. முதலிரவில் முத்துராமன், ஷோகேஸ் பொம்மையைப் (மஞ்சுளா!) பார்த்துப் பாடும் பாடல் இது!

2. அது சரி, ரெண்டாவது பாட்டு எங்கப்பா? ‘சரியா கண்டுபுடிச்சா’ யு எஸ் டாலர் 100 தருவதாகக் கேப்ரிம்மா சொல்லிருக்காங்க டோய்!