Sunday, October 30, 2005

தலை தீபாவளி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன 'தனி' தீபாவளி? என் நிலைமைதான்.

24X7 ஸப்போர்ட் காரணமாய் தீபாவளி/ரமலான் அன்றும் வேலையில் இருந்தாக வேண்டும்; தவிர்க்க முடியாத சுப நிகழ்ச்சிக்கு வேண்டி குடும்பம் சென்னையில்; நான், ஹோம் அலோன் சிறுவன் அநியாயத்திற்கு நினைவில் வருகிறான்!

'தனி'யாய் வீட்டில் என்ன செய்வது? இதைப் போல சினிமா கவிதை எழுதித்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்!

பம்பரக் கண்ணாலே
சிவகாசிப் பட்டாசுகளுக்குத்
தவமாய்த் தவமிருந்து
பெருசு-களின் ஆசியுடன்
பேரரசு உடைகளுடன்
மஜாவாய் தீபாவளி!
ஹ¤ம்..அது ஒரு கனாக் காலம்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஜீன்ஸில் ஐஸ¤க்கு அப்பாவாய் நடித்த அனுபவம் எப்படி ஸார் இருந்தது?

சோகப் பெருமூச்சுடன் 'அப்பாவா நடிச்சதுல என்னங்க அனுபவம் இருந்திருக்க முடியும்?!'

-குமுதம் வார இதழில் எஸ் வி சேகர்!
நேரமின்மை காரணமாய், மனதுக்கு ஒவ்வாமல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி; மழை மற்றும் பலரால் பேசப்படும் கஜினி படங்களை ஓட்டி ஓட்டி (திருட்டு) விசிடியில் பார்க்க நேர்ந்தது.

திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்றுப்போட்டு, வாழ்க்கையில் (என்னைப் போல!) பொறுப்பில்லாமல் அலையும் ஒரு குடும்பத்தலைவனின் கதை. நடப்பைச் சொல்வதால் ரசிக்க முடிகிறது. டுவிஸ்டு/டர்ன் இல்லாத படம். இருந்தாலும், சொல்ல வந்ததைக் காம்ப்ரமைஸ் செய்யாது, சொல்லியதற்காக தங்கர்பச்சானுக்கு ஒரு ஷொட்டு!

தெலுகு 'வர்ஷம்' தமிழில் 'மழை'; ந்திர வர்ஷம் பதித்தது போல தமிழ்நாட்டு மழை முத்திரை பதிக்காததற்கு முக்கிய காரணம் 'ஜெயம்'தான்; ஒரே கதை; ஒரே கதாநாயகன் இரு முறை செய்தால்? 'ஜெயம்' ரவி தெலுகைத் தவிர்ப்பது அவரது வளர்ச்சிக்கு நல்லது. க்ளாமர் 'கை' கொடுத்தாலும் 'நடிப்பு' முக்கியம் என்பது ஸ்ரேயாவுக்கு யாராவது சொன்னால் தேவலை. தெலுகில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் செய்ததைத் தமிழில் கலாபவன் மணி சொதப்பியிருக்கிறார்! விகடனில் குறிப்பிட்டது போல 'நச நச' மழை! (இதைப் பார்த்து விட்டுத்தான் 'சிவாஜி'க்கு ஸ்ரேயாவைப் 'புக்' செய்தார்களாம்!)

திருட்டு சிடி எப்படியிருக்கும்? உதாரணம் கஜினி. படம் தாவுகிறது. நிச்சயமாய்ச் சிடிக்காகச் சென்ஸார் மறுமுறை செய்திருப்பார்கள் போலும்! ஒரு பாட்டு, சில ஸீன்கள் வெட்டப்பட்டிருப்பது தெளிவாய்த் (அல்லது தெளிவில்லாமல்!) தெரிகின்றன. நமக்குத் தெரிந்த கதையை, க்ரிஸ்ப் திரைக்கதையாய்த் தந்து இருக்கையில் உட்கார்த்தி வைத்ததற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்! அஸின் நடிப்பு, சூர்யா ஜ்வலிப்பு, நயனதாரா/வில்லன் சலிப்பு, மொத்தத்தில் படத்தில் ஒரு பிடிப்பு - இருக்கிறது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் - கஜினி மட்டும் வெள்ளித்திரையில் பாருங்கள்!

Saturday, October 29, 2005

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பின் எனது 'தொழிற்சாலை' வாழ்க்கை திரும்பியிருக்கிறது. இப்படி மொட்டையாய்ச் சொன்னால் புரியாதென்பதால் நிற்க!

திஸம்பர் 1994-ல் துவங்கிய எனது தொழிற்சாலை வாழ்க்கை ஆகஸ்ட் 1997 வரை நீடித்தது; அப்போதுதான் இடப்பட்டிருந்த 100 அடி சாலை, பெருகத்துவங்கிய 70 எண் பேருந்துகள்; இவைகளோடு அந்த வழியே செல்லும் மோட்டார் சைகிள், கார் வைத்திருக்கும், சீருடை அணிந்திருக்கும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள்! இவர்களின் தயவால் கே கே நகரிலிருந்து 7.55-க்குத்தான் கிளம்புவேன்!வாரத்தில் எட்டு நாட்கள் வேலை இருப்பதால், 8 மணிக்குத் துவங்கும் அலுவலகத்திற்கு 9 மணி வரை வரலாம்!

இருந்தாலும் நண்பர் தியாகு 8 மணிக்கு ஆஜர்! எல்லோரும் பார்த்துப் பொறாமைப்படும் சக ஊழியர் ஏ ஜி வி நிதானமாய் 9.50க்கு வருவார்! ஆ•பிஸ் முடிந்து, முன்னிரவில் நண்பர்களின் தயவில்தான் வீடு போய்ச் சேர முடியும்; அதற்கு முன்னால் 'மூச்! ரஜினி பாஷையில் சொன்னால் 'நொந்திடுவீங்க'!' மாலையில் வரும் வெண் பொங்கல் (அ) ரவா உப்புமா (தொட்டுக்கொள்ள சர்க்கரை!)வுக்கு அடிதடி நடக்கும்!

கனடாவில் வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்துவிட்டு, பெங்களூர் திரும்பிய எனக்கு 'வேணும்டா மச்சான்!'; வீட்டிலிருந்து அதிகமில்லை ஜெண்டில்மேன், 25 கிமீ தூரத்தில்தான் ஆபீஸ¤! காலை 7 மணி, 9 மணி, மாலை 2 மணி என ஷிப்ட் முறை! அதற்கேற்றாற் போல காலை 6, 7.55 மற்றும் பகல் 1.50 என அலுவலகத்தின் தயவில் பேருந்து! வீட்டிற்குச் செல்ல முறையே மாலை 4, 6 மற்றும் இரவு 8, 10 அல்லது 11 மணி; உலகின் முதன்மையான நிறுவனமொன்றுக்கு 24x7 (சேனல் இல்லப்பா!) Production Support. வேலை ரொம்பவே ஜாஸ்தி! (நம்புங்கப்பா!)

இதில் 9 மணி ஷிப்ட் இருக்கே......அதுதான் ரொம்ப கொடுமை!

காலை 7.30 மணிக்கே அரக்கப் பறக்க கிளம்ப வேண்டும்; ஈஸ்ட் எண்ட் என அழைக்கப்படும் ஜெயநகர் 9வது ப்ளாக் 'கால் நடை'யாய் நடந்து செல்ல வேண்டும்; 2ஏ என எண்ணிடப்பட்டுள்ள அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசுப் பேருந்தில் தூசு (இருந்தால்) தட்டி, நனைந்து (இருந்தால்) துடைத்து, ஏறி உட்கார்ந்தால்.........போவது நம் கையில் இல்லை. பன்னர்கட்டா ரோடில் ஜாம்; பிடிஎம் உடுப்பி கார்டனில் ஜாம்; வாட்டர் டாங்கில் ஜாம்; பிடிஎம் பஸ் டிப்போவில் ஜாம்;

மெ........து...........வா.............ய் ஊர்ந்தால் ஸிஎஸ்பி என அழைக்கப்படும் சென்ட்ரல் ஸில்க் போர்டில் ஜாம்! இதில் தப்பித்தால் அவுட்டர் ரிங் ரோடில் ஜாம்; என ஜாம்களுக்கிடையே பயணம். ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தால் பிடிஎம்தான் வந்திருக்கும்! முக்கி முனகி ஆபீஸ் வர 9.15 அல்லது 9.30 கிவிடும்!

சரி மாலை 6.00 மணிக்குத் திரும்பும்போதாவது ஓகேயா? இல்லவே இல்லை! ரொம்பவும் மோசம்......சமயத்தில் 8.00 அல்லது 8.30! ண்டவன் நம்மை சோதிக்கத் தொடங்கினால் இரவு மணி பத்து! இப்படித்தான் காலை 9 மணிக்கு வந்த நண்பர் ஒருவர் இரவு 8 மணி வண்டியில் உட்கார்ந்த போது, இன்னொரு நண்பரின் நினைவு வந்திருக்கிறது; செல்பேசியில் அழைத்தபோது நண்பர் பேருந்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்; 'என்னப்பா உன் மொகத்தையே காணுமே?' என இவர் வினவ, 'அட போய்யா! நான் 6 மணிக்கே கிளம்பிட்டேன்; இன்னும் பஸ்லதான் இருக்கேன்!' என்றாரே பார்க்கலாம்!

உள்ளே நுழைந்தாலோ வெளியுலகம் மறந்து போகும்; எல்லாம் சல்லிசாய் கிடைக்கிறது. சமூசாவிற்குச் சட்னி சைட் டிஷ்! பேல் பூரியில் கேரட் துருவித் துருவி போடுவார்கள்! அவ்ளோதான்! என்ன ஏதாவது 'த்திரம், அவசரம்'னு ஓடணும்னா...வேற வழியே கிடையாது...ஓடி(த்தான்) போகணும்! இல்லாட்டி பீஸ் பஸ் வர்ற வரைக்கும் உக்கார்ந்திருக்கணும்; அவ்ளோதான்!'

இதனால்தான் சொன்னேன் 'ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பின் எனது 'தொழிற்சாலை' வாழ்க்கை திரும்பியிருக்கிறது!' என்று!

ஆனால் ஒன்று, ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் வருகை தரும், வைட்•பீல்ட் என அழைக்கப்படும் பகுதி எங்கள் அலுவலகத்திலிருந்து 4 கி மீ தொலைவில் உள்ளது. அதனாலேயே, எல்லா இடர்களையும் தாண்டி ஏதேனும் கொஞ்சம் சாதிக்க முடிகிறது!

Monday, October 10, 2005

Read this mail by sent by Dean IIT Madras.......
Dear Friends,
Here is a personal experience, as well as a moment of national pride, which I want to share with you. Hope you find it worth the time you putin reading it :
"In the middle of 1965 India-Pakistan war, US govt - then a close friend of Pakistan - threatened India with stopping food-aid (remember"PL-480"?).
For a food deficient India this threat was serious and humiliating. So much so that in the middle of war, Prime Minister (Late) Lal BahadurShastri went to Ram Leela Grounds in Delhi and appealed to each Indian to observe one-meal-fast every week to answer the American threat. As aschool boy, I joined those millions who responded to Shastri ji's call. I continued the fast even when the war was over and India became selfsufficient in food.
Hurt deep by the national humiliation suffered at the hands of the US govt, I had vowed to stop my weekly fast only when India starts givingaid to USA.
It took just 40 years. Last week THE day arrived. When Indian ambassador in Washington DC handed over a cheque of US$ 50 million to the US govt,two plane loads of food, medical aid and other relief materials were waiting to fly to the USA.
Time to break the fast? With no bad feeling about the USA, and good wishes for the Katrina victims, this humble Indian feels proud of the distance India has covered in 40 years. Let's celebrate a New India!"
- Vijay Kranti.Dean - IIT Madras

Saturday, October 08, 2005

Aamchi Mumbai

Sunday, October 02, 2005

நான், நீ, அவன்!