Showing posts with label அரவான். Show all posts
Showing posts with label அரவான். Show all posts

Thursday, March 08, 2012

அரவான்!

அரவான் is a big disappointment, atleast to me.



1. மூன்று மணி நீளப் படம்


சாஹித்ய அகாதமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' படமாய் மாறியிருக்கிறது. நண்பரிடம் பேசியதில் புத்தகத்தின் விலை ரூ 1000-த்திற்கும் மேல், பக்கங்களும் அதிகம். எழுதிய திரு வெங்கடேசன் அவர்களுக்கு இதுதான் முதல் நாவல்! போதாதென்று கூடுதல் கதை வசந்த பாலன்...தாங்கலை!


2 .லாஜிக் பொத்தல்கள் நிறைந்த கதை

களவுக்குப் பொருத்தமான தினம் அமாவாசைதான். ஆனால், இவர்கள் போவதென்னவோ முழு மதி இரவில்!

கோட்டையூர்க்காரன் ஆதியைத் தேடுவதும், முறைப்பதும் எதனால்? அவனுக்கு வேண்டிய நரபலிதான் கிடைத்தாகிவிட்டதே! ஆதியைத் தேடி அலைவதும், அவனை கோட்டையூர்க்காரன் பிடித்துக் கொண்டு போய் ஊரில் ஒப்படைப்பதும் ஒவ்வாத காட்சிகள்.

கடைசி 10 நிமிடங்கள் ஏசுநாதரை சிலுவையில் அறைவதைப் போலக் காட்சி அமைத்த்திருப்பது.


3. மலிவான கிராபிக்ஸ்

காளைகள் மிகுந்து வரும் காட்சிகளில் அப்பட்டமாய் இளிப்பது. அது சரி, எல்லோராலும் ஷங்கரைப் போல செலவழிக்க முடியுமா?!


4 . செருகப்பட்ட பாடல்கள் (இரணடு நன்றாயிருந்தாலும்)

எல்லாப் பாட்டிலும் 'நிலா / சூரியன்' வார்த்தைகள் தான்...இதனாலேயே சுவாரசியம் கம்மி.



பி.கு - ஆதியுடன் ஜோடி போட்ட பெண்ணிடம் கொஞ்சம் நடிப்பும், கூடவே அழகும் தெரிகிறது....(ஹி...ஹி!)  அமலா பால் போச்சி...டும்..டும்...டும்! தன்சிகா வந்தாச்சி டும்..டும்..டும்!