Showing posts with label கந்தசாமி. Show all posts
Showing posts with label கந்தசாமி. Show all posts

Saturday, August 22, 2009

கந்தசாமி படக்குழு 30 கிராமங்களைத் தத்து எடுத்திருப்பதாகச் செய்தி.

இந்த மாதிரி படத்தை எடுத்ததற்குப் பதிலாக இன்னும் சில கிராமங்களை தத்து எடுத்திருக்கலாம்தான் !

சிங்கிள் ஸ்க்ரீனில் (ஊர்வசி) கந்தசாமியை குடும்ப சமேதராகப் பார்த்தோம். மழை பெய்த மாலையில் அனைவரையும் உள்ளே அனுமதித்தாலும், திரையரங்குக்குள் (முந்தைய காட்சி முடியவில்லை!) நுழைய அரை மணிக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. அரங்கைச் சுத்தம் செய்யக்கூட நேரமில்லாது அனைவரையும் அனுமதித்தது, ஏஸியைப் போடாமல் 'வேக' வைத்ததைக் கண்டபோது ஏனோ சென்னை தியேட்டர்கள் நினைவுக்கு வந்தன. கொஞ்சம் அதிகமாகப் போனாலும் இனி மல்ட்டிப்ளக்ஸ்-ல் பார்ப்பதாக உத்தேசம்.