Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, November 20, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 5

நேற்று சொன்னது போல பொறுமை, பொறுமை, பொறுமை-களோடு ஆடி இந்தியா, இலங்கையை வெறுப்பேற்றியிருக்கிறது!

கம்பீர், கம்பீரமாக ஆடி 114 ஓட்டங்கள் குவிக்க, தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் கொண்டு வந்து சச்சின் சதமடிக்க, எப்போதும் போல ஆபத்துக்கு உதவும் தோழனாய் லக்ஷ்மண் (51) கை கொடுக்க, டல்லாய் முடிந்தது முதல் டெஸ்ட்!

அதிகம் பேச ஒன்றுமில்லை, ஜெண்டில்மேன்! இந்தியா தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டபோது, எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 412!

அடுத்தது நாக்பூர்!!

Thursday, November 19, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 4

மஹிளா 275, ப்ரஸன்னா 154 (அவுட் இல்லை) என 'அடாது மழை' போல 'விடாது அடிக்க' நம்ம ஆட்கள் ஒதுங்கிக்கொள்ள இடம் தேடத் துவங்கினர்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து மிக அதிக ஓட்டங்கள் குவித்த பெருமை மஹிளா / ப்ரஸன்னா ஜோடிக்கு வாய்த்தது. 73 ஆண்டுகளுக்குப் பின் முறியடிக்கப்பட்ட சாதனை இது!

இந்திய அணிக்கு 45 ஓவர்கள் ஆடக் கொடுத்துவிட்டு, இலங்கை ஒதுங்கிக்கொண்டபோது ஸ்கோர் 760, 7 விக்கெட்டுகள் இழப்பு. இந்தியாவின் மூன்று முன்னணி பந்து வீச்சாளர்களும் சதம் அடித்திருந்தனர். மிஸ்ரா முன்னே போய் இரட்டைச் சதங்கள் அடித்திருந்தார்!

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 'முதல்வன்' போல அல்லாமல் அபாரமாய்த் துவங்கியது. ஷேவாக், வழக்கம்போல் 50 ஓட்டங்கள் குவித்தபின், வழக்கம்போல் தேவையில்லாமல் ஆடி அவுட் ஆனார்! நிலவரம் 98, 1 விக்கெட் இழப்புக்கு!

ட்ராவிட்டும், கம்பீரும் ஜோடி சேர்ந்து ஆடிக் கரையேற்றுவார்கள் என நம்பிக்கை விடிவெள்ளி தோன்றும்போது, ட்ராவிட் அவுட் ஆக, வந்து சேர்ந்தார் இரவுக் காப்பாளர் 'மிஸ்ரா'! மேலும் ஸஸ்பென்ஸ்/த்ரில்லர் எதுவும் இல்லாமல் இந்தியா ஆட்டத்தை முடித்தபோது 190, 2 விக்கெட்டுகள் இழப்பு!

இனி, இந்தியாவுக்குத் தேவை நாள் முழுவதும் பொறுமை, பொறுமை, பொறுமை!

Wednesday, November 18, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 3

மீண்டும் இதே வரிகள்! எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ, அது நன்றாகவே நடந்தது! ஒரே ஒரு வித்தியாசம், சமரவீராவுடன் இல்லை...இன்னுமொரு இள ஜயவர்த்தினேவுடன், மஹிளா ஆடிய ஆட்டம், சூப்பர்பா!

மஹிளா ஜயவர்த்தினே எப்போது சதம் அடித்தாலும் அது பெரியதாய்த்தான் இருக்கும். இரு நூறு, முன்னூறு என விரிந்து விளையாடிவிட்டுத்தான் போகும்...நாளை எப்படியோ?!

இந்திய அணியின் பந்துவீச்சை திசை தெரியாமல், தட்டுத் தடுமாற வைத்த, 'இரு சதம்' மஹிளாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! 591 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த இலங்கைக்கு இனி வெற்றி வாய்ப்பு மிக அதிகம்!

தோனி! எப்டிங்க 'தோக்காம ஆடி' மானத்தை காப்பாத்த போறீங்க?!

Tuesday, November 17, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 2

எது நடக்ககூடாது என நினைத்தோமோ, அது நன்றாகவே நடந்தது! திரு ட்ராவிட் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமலேயே ஆட்டமிழந்ததில் இந்தியா சுருண்டு 41 ஓட்டங்களில் இறுதி 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, எடுத்த மொத்த எண்ணிக்கை 426!

களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் தில்ஷான் 'அன்றைய ஷேவாக்' ஸ்டைலில் ஆடி, 112 ஓட்டங்களை 129 பந்துகளில் எடுத்து இலங்கைக்கு உற்சாகமூட்டினார்!

ஹர்பஜன் மற்றும் மிஷ்ரா பந்துவீச்சு பிரமாத வீச்சில்லாததால் இந்தியா சிறிது கவலைக்கிடம்! ஸாகீர் கான் இருந்தாரோ, பிழைத்தோம்!

ஆட்ட நேர இறுதியில் சமரவீரா மற்றும் ஜயவர்த்தினே ஆட்டமிழக்காமல் இருந்ததில் இலங்கை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275! இருவரும் இணைந்து, கடந்த ஆட்டங்களில் 'பின்னு பின்னு' என பின்னியது, ஏனோ தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!!

உஷார் இந்தியா! இருப்பதோ 151 ரன்கள்!!

Monday, November 16, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 1

துவங்கிய ஒரு மணிநேரத்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்தவுடன், மற்றுமொரு 'கௌஹாத்தி' என்கிற அமிலம் வயிற்றில் சுரந்தது!

மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் என்கிற புகழ் பெற்ற கம்பீர், சச்சின், லக்ஷ்மண் 'க்ளீன் பவுல்ட்' என்பதை ஜீரணிக்க முடியவில்லை!

இந்திய அணியின் 'பெருஞ்சுவர்' இறுதிவரை ஆட்டமிழக்காமல் எடுத்த ஓட்டங்கள் 177! கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் 'கர்நாடகா' அணிக்காக ஆடிய கடைசி இரண்டு ஆட்டங்களில், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 50-க்கும் குறையாமல் ஓட்டங்கள் எடுத்திருப்பது தெரியும்! ஆக, லோக்கல் ஆட்டங்கள் ஆடியே ஆக வேண்டும் என்கிற கட்டாயச் சட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் போடலாம்!

யுவராஜ் சிங் (68, ஜோடியாக 125!), தோனி (110, ஜோடியாக 223!) இளைஞர்களின் தயவில் இந்தியா முதல் நாள் இறுதியில் எடுத்த ஓட்டங்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385.