Showing posts with label ஜயராமன். Show all posts
Showing posts with label ஜயராமன். Show all posts

Tuesday, September 27, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 22

லோகத்துல ஒரே 'பேர்' இருக்கறவா நெறைய பேர் இருப்பா...! அந்த ஒரே 'பேர்'ல நமக்குத் தெரிஞ்சவா ரெண்டு, மூணு பேர் இருந்தா....அதுவும் நம்மோட well wishers-ஆ இருந்தா....அவாளப் பத்திதான் கொஞ்சம் பாப்போமே...!

அமெரிக்கா வந்த பின்னாடி பொழுதைப் போக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது. பொழுதைப் போக்க ஒரு வழி hello fm கேக்கறது. சரியா என் அமெரிக்க டயத்துக்கு, அதாவது சாயரட்சை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி விடிய-காலம்பற 5.00 மணிக்கு) டாண்ணு இந்த 'ஜயராமன்' வந்துருவார். அவர் பேச்சுல இருக்குற சாந்தம், அமைதி சொல்லி மாளாதுன்னா! ரெண்டு மணி நேரம் போறதே தெரியாது....ரொம்ப அமைதியா கதை சொல்லுவார், கருத்துக்களை உதிர்ப்பார், நடுவுல ஜோசியரோட ராசி பலனை அலசுவார், திடீர்னு அய்யா ஞானசம்பந்தன்-ஐ கூப்ட்டு கதை சொல்லச் சொல்லுவார்...இதெல்லாம் விட, டெய்லி ஒருத்தரோட கஷ்டத்தைப் படிச்சுட்டு, 'ரெண்டு நிமிஷம் அவாளுக்காக ஜபம் பண்ணலாமே'-ம்பார் பாருங்கோ...உங்களுக்குக் கண்ணுல ஜலம் வந்துரும் போங்கோ...! இந்தியாவுக்குப் போன உடனே...எப்படியாவது இவர பாத்துபிடணும்னு வெச்சுருக்கேன்...! சென்னை-ல இருக்கறவா ரொம்ப கொடுத்து வெச்சுருக்கா...இல்லையா பின்ன..இப்டி ஒரு அம்பி டெய்லி ரேடியோல வந்து பேசறதக் கேக்கறதுக்கு நிச்சயம் போன ஜன்மத்துல புண்ணியம் பண்ணிருக்கணும்...!

அடுத்தவர்...என்னோட 'ஜிகிரி' தோஸ்து... 'நண்பேண்டா' ரகம். இவரும் நானும் ஜனிச்சது ஒரே நாள், ஒரே வருஷம். அவரு காத்தால, நான் ராத்திரி அதான் வித்யாசம். இவரப் பத்தி எழுதி மாளாது. குட்டிகரணம் போட்டு வாழ்க்கைல ஜயிச்சவர் இந்த ஜயராமன் என்கிற ஜே கே. இன்னிக்குக் கூட, ஜாயின்ட் பேமிலில நம்பிக்க வெச்சு, அம்மா/அப்பா/தம்பியோட 'சேர்ந்தே' இருக்கார்னா அது எவ்ளோ பெரிய விஷயம்...? மனுஷர் தமாஷ் பேர்வழி. 'தம்' புடிச்சு டெய்லி கவிதையும் எழுதுவார். ஒரு சின்ன வீக்னெஸ்-ம் உண்டு. சொன்னா அடிக்க வந்துருவார்! சாம்ப்ளுக்கு சில கவிதைகள கொடுத்ருக்கேன்... படிச்சுட்டு...பேஷ் பேஷ் னு சொல்லுவேள் பாருங்கோ...!



ரொம்ப முக்கியமானவாளை லாஸ்ட்லதான் அறிமுகப்படுத்துவா... அந்த மாதிரி அறிமுகம்தான் இவருக்கு. என்னோட மாமா (அம்மாவோட அண்ணா)வோட 'பெரிய' மாப்பிள்ளை இவர். இன்டர்வியு-க்கு பெங்களூரு மொதல் மொதல்ல வந்தப்போ, எனக்கு ரொம்ப தெம்பை கொடுத்து...'நீ இங்க வந்துடு...எல்லாம் நான் பாத்துக்கறேன்' சொன்னவர். அதே மாதிரி பாத்துண்டவர், நான் வளந்ததை தன்னோட வளர்ச்சியா நெனச்சு சந்தோஷப்பட்டவர். அவர் ஆத்து பக்கத்துலையே இன்னொரு ஆம் பாத்து குடி வெச்சவர். ரெகுலர் விசிட் அடிச்சு, நோட்டம் விட்டு, கண்ணாலையே எல்லாம் செரியா இருக்கானு கண்டு பிடிச்சுடுவார்...! சூப்பரா சமைப்பார், ஜயநகர் பிள்ளையார் கோவிலுக்கு வாரா வாரம் அட்டடன்ஸ் கொடுப்பார், அப்பப்போ 'நல்ல' ஹோட்டல்களுக்குப் போய் 'நல்ல' ஐட்டமா தேடிப் பாத்து சாப்டுவார்! என்னோட ரெண்டாவது பையன் மேல அபரிமிதமான பிரியம்...இவர் நம்மாத்துக்கு வந்தவுடனே பையனும் 'ஜயராமன் அங்கிள்'னு ஓடி வந்துருவான்...! அவருக்கு நான் ரொம்ப கடன் பட்ருக்கேன்...கடமைபட்ருக்கேன்!

கடோசி - 1
காஞ்சிப் பெரியவாள் Jayaraman-ங்கற பேர 'ஜெயராமன்'னு எழுதப்படாது... ஜயராமன்-னுதான் எழுதணும்னு சொல்லிருக்கா. அதே மாதிரி, 'ஸ்ரீ ராமஜயம்'னு தான் எழுதணும்...'ஸ்ரீ ராம ஜெயம்'னு எழுதப்படாது!! எனக்கு தெரிஞ்ச 'ஜயராமன்'களைப் பத்தி ஒரு சின்னக் குறிப்பு... அவ்ளோதான்... ஏன்னா..இவாளப் பத்தி எழுத பக்கம் போறாது...வார்த்தைகளும் போறாது!