Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Saturday, May 22, 2010

twitter பாதிப்பில்....

என் தம்பிக்குத் திருமணமாகி நேற்றோடு 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. என்னுடன் கழித்ததென்னவோ 10 தினங்களுக்கும் குறைவுதான், என்ன செய்வது, அவன் இருப்பதோ அமெரிக்கா!

எனக்கும் மாமிக்கும், மாமிக்கும் அவளுடைய மாமியாருக்கும், அவளுடைய மாமியாருக்கும் எனக்கும், அடிக்கடி 'கருத்து வேறுபாடு' வருகிறது; காரணம் எங்கள் எல்லோருக்கும் தெரிந்த என் கடைசி வாரிசுதான்!

ட்யூஷன் வாத்தியார் 'what is your father?' கேள்விக்கு சிவா பதில் சொல்லாததால் வீட்டில் எனக்கும் மாமிக்கும் டிஷ்யூம்! அது சரி, 'நான் என்ன பண்றேன்'னு எனக்கே தெரியாதே?!

எனக்கு எல்லாப் பெண்களோடேயும் பேசப் பிடிக்குது, என் பொண்டாட்டிய தவிர! - என் நண்பன் உதிர்த்த பொன்மொழி (பேரச் சொன்னா 'குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மியடிச்சா'ப்புல ஆயிரும்!) ; ஆனா, யோசிச்சுப் பாத்தோமுன்னா, பேச/பழக/பாக்க -னு சேத்துகிட்டே போலாம்லா! (அய்யய்யோ! மொத்துறாங்கய்யா என்னிய!)

பங்கனபள்ளிய ·ப்ரிட்ஜுல வெச்சு சாப்டு பாருங்க, அப்டியே தூக்குதுங்ணா!

லைட்டா 'தொந்தி' போட்டதுல, சிவா சைக்கிளை ஓட்டிப் பார்த்தேன்! கொஞ்ச நேரம் ஓட்டி முடிச்சப்புறம் காலை தூக்கிப் போட முடியலைங்க!

சிங்கம் பட ட்ரைலர் சன் டிவில பாத்தப்போ 'விஜய்' படம் பாதிப்பு தெரியுதப்போய்! சூர்யாஜி - கொஞ்சம் யோஜிங்கோஜி!

கடோசியா ட்விட்டர்ல போட்டதையே இங்கேயும் போடுறேன் - I+U=V!!!