Showing posts with label லக்ஷ்மி கடாக்ஷம். Show all posts
Showing posts with label லக்ஷ்மி கடாக்ஷம். Show all posts

Friday, January 15, 2010

லக்ஷ்மி கடாக்ஷம்!

கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு லக்ஷ்மி கடாக்ஷம் இருப்பதன் மர்மம் எனக்கு இப்போது தெரியும். சொல்லட்டுமா? சொல்லிவிடட்டுமா?

அவர் மனதைத் தாரளமாக வைத்துக் கொண்டிருக்கிறார். பகை, பொறாமை ஒன்றும் கிடையாது, ஒன்று. இரண்டாவது, தமக்கு என்று பண்டம், பணம் வீண்டும் என்று தனிப்பட ஆசைப்படவில்லை. எல்லாருக்கும் கொடுப்போம், எல்லாரும் சந்தோஷமாக அனுபவிக்கட்டும் என்று அள்ளிக் கொடுக்கிறார்.

பார்க்கிறபோதே "அடடே! பாங்கில் பணம் அத்தனையும் சரித்துவிட்டாரே! பெட்டியைக் கவிழ்த்து விடுகிறாரே!" என்று பயமாகக் கூட இருக்கிறது. மறுபடி அவர் நிமிர்த்தினால், பெட்டி நிறைய பணம் குவிந்து கிடக்கிறது! அதுதான் லக்ஷ்மி கடாக்ஷம்! தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை சொரிந்துவிடுகிறாள்.

'லக்ஷ்மி கடாக்ஷம்' என்றால், இரும்புப் பெட்டியில் கத்தை கத்தையாக நோட்டை அடுக்கி வைப்பது அல்லது பாங்கியில் வைர நகைகளை குவிப்பது என்று இல்லை. அள்ளி அள்ளி கொடு! கொடு! கொடு! கொடு! கடவுள் உனக்கும் கை ஓயாமல் கொடுப்பார். நமக்கெல்லாம் இரண்டே கைகள் வைத்து, சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் நாலு, நாலு, பன்னிரண்டு கைகளையும் கொடுத்திருக்கிறார்களே! அதற்காகத்தான்!

-லக்ஷ்மி கடாக்ஷம், தேவன், அல்லையன்ஸ் பதிப்பகம் / யுனியன் பப்ளிஷிங் ஹவுஸ் / கிழக்கு பதிப்பகம்