Showing posts with label வி தா வ. Show all posts
Showing posts with label வி தா வ. Show all posts

Sunday, February 28, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?!

கௌதம் மேனன் படங்களின் பக்கபலம் 'அனாவசிய நகைச்சுவை'-களைச் சாராமல் இருப்பதும், பலவீனம் 'நெடும்படம்' எடுப்பதும்தான். விண்ணைத்தாண்டி வருவாயா-விலும் இது தொடர்கிறது.
படத்தில் ஒளிப்பதிவு/இசை உயர்தரத்தோடு பாராட்டப் படவேண்டியவை இதோ.
1. கிராமம், காதல், வன்முறை, அனாவசிய ஹீரோயிஸம், ஸ்பூ·ப் எனத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.
2. சிலம்பரசன் - ஆச்சரியம். பாத்திரத்தோடு கச்சிதமாய்ப் பொருந்தும் உண்மை.
3. த்ரிஷா - தழையத் தழைய புடவையில் வளைய வளைய வருவது பாங்கு/அழகு.
4. கிருஷ்ணன் - சிலம்பரசனுக்குப் பக்கபலமாய் வரும் மனிதர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாயிருக்கின்றன.
5. நளினி ஸ்ரீராம் - உடைகளைத் தேர்ந்தெடுத்த விதம்!
6. இறுதிக் காட்சி - தமிழ் சினிமாவுக்கே உரித்தான முடிவிலிருந்து சற்றே விலகி, வித்தியாசமாய்க் கொடுக்கும்போது இயக்குநர் தெரிகிறார்.

சொட்டச் சொட்ட, திகட்டாத, காதல் கதையை இரண்டு மணி நேரத்தில் 'சிக்' என்று எடுத்திருக்க வேண்டாமோ? இழு-இழுவென்று இழுத்ததில், பின் பாதி வறண்டு போய்விட்டது.

இருந்தாலும், நம் உலகில் நமக்குத் 'தெரிந்து, தெரியாமல்' / 'சொல்லப்பட்ட, சொல்லப்படாமல்' இயங்கிக் கொண்டிருக்கும் காதல்களை நிச்சயமாக 'விண்ணைத் தாண்டி வருவாயா?'வில் பார்க்க முடியும்.