Showing posts with label வித்யாசாகர். Show all posts
Showing posts with label வித்யாசாகர். Show all posts

Thursday, October 13, 2011

சதுரங்கம்

ப திருப்பதிசாமி என்கிற புலனாய்வுப் பத்திரிகையாளர்-ஆய் அறிமுகமாகி, எல்லோரையும் தோலுரித்துக் காட்டுகிறார் 'திசைகள்' ஸ்ரீகாந்த். அங்கங்கே தென்படும் சோனியா-வைக் காதலிக்கிறார். திருமணம் கூடி வரும் நேரத்தில், சோனியா கடத்தப்பட, 'இடைவேளை' விட்டு ஸ்ரீகாந்தின் தேடும் படலம் துவங்குகிறது. கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.

சதுரங்கத்தின் மிகப் பெரிய பலம் நேர்க்கோட்டில் செல்லும் கதை. இயல்பாய் அறிமுகமாகி, இயல்பாய் காதலைச் சொல்லி, இயல்பாய் நெருக்கமாகும் காதல். படத்தின் கடைசி அரை மணி தவிர, நுனி இருக்கையில், உட்கார்ந்து நகத்தைக் கடிக்க வைக்கும் சஸ்பென்ஸ்.

மிகப் பெரிய பலவீனம் - அறிமுகக் காட்சி / எல்லா மசாலாக்களும், எதிர்பார்க்கக் கூடிய முடிவும், பூச் சுற்றல்களும் நிறைந்த - பலத்தையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் கடைசி முப்பது நிமிடங்கள்.


கரு பழனியப்பனின் வசனங்கள் எளிமையாகவும், வலிமையாகவும் இருப்பது சிறப்பு. வித்யாசாகர் இசை அற்புதம்.

கடைசி அரை மணியைத் தவிர்த்தால் சதுரங்கம் 'செம' ரகம்!

கடோசி 1

ப திருப்பதிசாமி ஆனந்த விகடனில் 'இளைஞர் பத்திரிகையாளர்'-ஆக அறிமுகமாகி, ஜூவி-யில் பின்னாளில் பிரபலமான புலனாய்வுப் பத்திரிகையாளனாக மின்னியவர். தெலுகு சூப் ஹிட் ஆசாத்' (வேலாயுதம், அதேதான்!) இயக்கியவரை, காப்டன் தமிழுக்கு கூட்டியாந்து 'நரசிமமா' (சிமமா, சிமமா, நரசிம்மா பாட்டு வருமே அதேதான்!)வை இயக்க வைத்தார். இஷா கோபிகருடன் கிசு-கிசுக்கப்பட்ட நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக மிக இள வயதில் விபத்தில் காலமானார் திருப்பதிசாமி.