Showing posts with label வேர்கள். Show all posts
Showing posts with label வேர்கள். Show all posts

Sunday, September 13, 2009

வேர்கள் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ஆனந்த விகடன் பொன்விழாவின் சிறந்த சமூக நாவலாக அங்கீகரிக்கப்பட்டு ரூ 20,000 பரிசு பெற்ற புதினம்.

கிருஷ்ணமணி-யில் 'பி.வி.ஆர்' சாயல் தெரிந்தாலும், முத்திரையாய் விழும் எழுத்துக்களால் நம்மை அயர வைக்கிறார். வெங்கடேசன், முத்துசாமி, பேங்கர் சீனு, வித்யாதரன், சியாமளி, பாட்டி, சதீஷ் என வெவ்வேறு பாத்திரங்கள் தங்கள் தனித்தன்மையோடு வலம் வருவதுதான் நாவலின் பலம். ஓரிரு அத்தியாயங்களில் எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு, அழகாய் உலாவவிட்டு, கச்சிதமாய் முடித்திருப்பது அழகு.

தொடர்கதையை 'பைண்ட்' செய்து படிப்பது வழக்கொழிந்து போன இந்நாளில், கையில் கிட்டிய 'பைண்ட்' புத்தகம் இது! 'மாருதி' ஓவியங்களால் மெருகேறி களை கட்டுகிறது.

வேர்கள், கிருஷ்ணமணி, ஆனந்த விகடன்
(கொசுறு: ஆனந்த விகடனின் விலை 1981-ல் 75 பைசா!)

Sunday, September 06, 2009

தாம்பத்யம்கிறது மனுஷ வாழ்க்கையிலேதான், அதைப் புரிஞ்சிக்க சரியான வழி, ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சிண்டு போகணும். ரெண்டு கண்ல எது ஒசத்தி? இதை ஞாபகம் வச்சிக்கோங்க. உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும், சுயமா சம்பாதிக்கணும். பணம்தான் வாழ்க்கை இல்லே. ஆனா, அது இல்லாமலும் வாழ்க்கையை நடத்த முடியாது. தர்மமா, நம்ம திறமையால நல்லா சம்பாதிக்கணும். முடிஞ்ச அளவுக்கு மத்தவாளுக்கு உபகாரம் பண்ணணும். நம்ம வம்சத்தோட வேர் இந்த தர்மத்தைத்தான் அடி மண்ணா கௌவிப் பிடிச்சிண்டிருக்கு.

டம்பால, அதனோட உறவால ஏற்படற பந்தம் மட்டும் ரெண்டு பேரை ரொம்ப நாளைக்கு ஒண்ணாப் பிணைக்காது. உள்ளத்தால, உணர்ச்சியால, புரிஞ்சிக்கிற தன்மையினாலதான் நெருங்கி வர முடியும். இதை நீங்க புரிஞ்சிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. பெண் என்கிறவளும் மனுஷ ஜென்மம்தான். அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கு. உடம்போட அவஸ்தையைத் தீர்த்துக்கற சாதனம் மட்டும் இல்ல அவ என்கிறதையும் புரிஞ்சுக்கணும்.

ழையாகப் பிறப்பது குற்றமல்ல. ஆனால் முயற்சியின்றி, உழைப்பின்றி, திட்டமின்றி ஏழையாக வாழ்வது முட்டாள்தனம்.

புருஷன்கிறவன் தாம்பத்தியத்துக்கு அவசியமாக இருக்கிற ஓர் ஆடவன். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவினால ஏற்படக்கூடிய பாந்தவ்யம், பிணைப்பு, குழந்தைகள் பிறந்த பிறகுதான் வலுவடையறது. பயலாஜிகல் நெஸஸிடியினால்தான் நாம் இணைய வேண்டியிருக்கு. இதுல பெண்ணுக்கு ஆண் எந்த விதத்திலே உசத்தின்னு எனக்குப் புரியல்லே. கௌரவப் பிரச்னைக்கே இதிலே இடமில்லே. ரெண்டு பேரும் மத்தவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்து அனுசரிச்சிண்டு போறதுலதான் சௌஜன்யம் ஏற்பட முடியும்.

ணுக்குப் பெண் சற்றுக் குறைவுதான்னு தீர்மானத்தில நீங்க இருக்கீங்க. இது போன தலைமுறையினோட கருத்துன்னு சொல்லி, கடந்து போன காலத்தினோட துணையை நீங்க பார்க்கறீங்க. நம்ம நாட்டிலே அந்நியர்களோட ஆட்சியாலே ஏற்பட்ட அவக்கேடுகளிலே இதுவும் ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். வீட்டுப் பெண்களுக்கு உரிய மரியாதையையும் அந்தஸ்தையும் தர மறுக்கிற சமுதாயம் முன்னேற முடியாது. சம உரிமைங்கற பேரில பெண்கள் முறைகேடா நடக்கிறதையும் பண்பு கெட்டு வாழறதையும் நான் ஆதரிக்கலே. நம்ம திருமணச் சடங்கின்போதே நுகத்தடியை மணமக்கள் இரண்டு பேர் கழுத்திலேயும் சில விநாடிகள் வச்சு மந்திரம் ஜெபிக்கிறா. அதை வெறும் சடங்கா நெனக்கக்கூடாது. வாழ்க்கைங்கற வண்டியினோட ஓட்டத்துக்கு வண்டி மாடுகளைப் போல ஒருங்கிணைந்து செயலாற்றணும்கிறதுதான் அதனோட தாத்பர்யம். அந்த மாடுகளிலே எது உயர்த்தி?

கான்பிடன்ஸ் வேணும்தான். அது தொழில் செய்யும்போது. ஆனா ஆசானிடத்திலே?....சந்தேகம் கேட்கலாம். தெளிவு கிடைக்கிற வரைக்கும் அவருடைய அனுபவ அறிவைத் துணையா எடுத்துண்டு வழி நடக்கணும்.

சார்ந்து வாழறதுன்னா என்னடா அம்பி? எனக்குப் புரியல்லே....தாலிகட்டற புருஷனோட வாழறதா? அப்படிப் பார்த்தா இவ(ள்) இருக்கற உத்தியோகத்துல மேலதிகாரியா இருக்கற ஆம்பிளைக்கு இவ பதில் சொல்லும்படியா வராதோ? மனித வாழ்க்கையிலே எல்லாருமே எதையானா சார்ந்துதாண்டா வாழ்ந்தாகணும். எல்லாத்தையும் துறந்துட்டு ஈஸ்வரனோட பாதமே துணைன்னு போறாளே, இந்த மனித வாழ்க்கையை அல்பமா நினைச்சு உதறியெறிஞ்சிட்டு, சத்தியமானதைத் தேடிண்டு போறாளே, அவாளுக்குத்தாண்டா அந்தச் சுதந்திரம். நமக்கெல்லாம் இல்ல.

-வேர்கள், கிருஷ்ணமணி, ஆனந்த விகடன் பொன்விழா (1981) போட்டியில் ரூ 20,000/- பரிசு பெற்ற சமூக நாவல்