60 வயதான கணவன் படுக்கையறையில் என்ன பாட்டு பாடுவார்?!
ரொம்ப சிம்பிள்
யோசித்துப் பார்க்கையில் நான் சுயநலமாய் இருக்கிறேனோ என்கிற சந்தேகம் கொஞ்ச நாளாய் தலை காட்டுகிறது. தினமும் செய்கின்ற/செய்யாத அலுவலக வேலை கொஞ்சம்கூட பிடிக்காவிட்டாலும், மா/மாமி/மக்கள் நலன்களுக்காக அழுத்தமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறோனோ என்கிற எண்ணம் அடிக்கடி தோன்றுகிறது. 'என்ன வேண்டும்' என்று தெரியாததில், 'ஏன் இப்படி இருக்கிறேன்' எனச் சேர்ந்து கொண்டதில், மன அழுத்தம் சில சமயங்களில் எகிறுகிறது.
என் தந்தை இப்படி இருந்திருக்கிறார்! வேலைக்கே போகாது, மூன்று மாதமாய் வீட்டில்! எழுந்து, குளித்து, பூஜையை முடித்து, சாப்பிட்டு விட்டு, 'கொஞ்சம் தூங்கறேனே!' எனத் தூங்கப் போய் விடுவாராம்! நானே சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். சர்க்கார் வேலையானதில், லீவு இருந்ததில் சம்பளம் வந்து கொண்டிருந்தது. இத்தகைய தருணங்களில் அவரது எண்ணம் எதுவாயிருந்திருக்கும்? யாரிடம் விவரித்திருப்பார்? கண்ணுக்குத் தெரியாத எதனுடன் போராடியிருப்பார்? (திடீரென எல்லாம் சரியாகி(?!) அலுவலகம் செல்லத் துவங்கிவிட்டார்!)
ஏன் நலம் விரும்பி மற்றும் சென்னை வாசகர் சுரேஷ¤டன் பகிர்ந்து கொண்டதில் ஒரே வரி பதில் வந்தது
'எல்லாம் attitudeதான்! சந்தோஷமா துக்கமா, உன் மனதில், உன் விருப்பப்படிதான் இருக்கிறது!'
உண்மைதானோ?! 'ஸ்வல்ப adjust மாடி'னால் எல்லாம் சரியாய்ப் போய்விடுமோ?!
நண்பர் மற்றும் சென்னை வாசகர் தியாகராஜனுடன் செல் பேசியபோது மணி நிச்சயம் இரவு 10-ஐத் தாண்டியிருக்கும். அவ்வப்போது இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் நிறைய்ய பேசினோம்! மஹா பெரியவர், சுஜாதா, ஒரு புதன்கிழமை, அலுவலக பளு என விரிந்தது. அலுவலகத்தின் நீ......ண்........ட நாளுக்குப் பின் இந்த மாதிரியான கருத்துப் பரிமாற்றல்கள் / பேச்சுக்கள் நிச்சயம் புத்துணர்ச்சியைத் தந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. நன்றி தியாகு!
இதே போன்று, ஒரு இரவில் (பத்து மணிதான்!) நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது 'அய்யா! நான் தூங்க வேண்டும். என்னைத் தொந்தரவு செய்யாதே'யில், பேசாமல் வைத்துவிட்டேன். நம்மைவிட தூக்கத்தைக் காதலிக்கும் அவரை நாம் கெடுக்கக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில்!
Picture Courtesy: http://tdistler.com