Saturday, July 30, 2005

வில்லியம் ஆர்ச்சிபால்டு ஸ்பூனர் என்னும் பாதிரியார் (1844-1930) பேசும்போது பல தவறுகள் செய்வாராம். Take a shower என்பதற்கு shake a tower என்பாராம். இதை 'டிப் ஆ·ப் தி ஸ்லங்'...ஸாரி.."ஸ்லிப் ஆ·ப் தி டங்' என்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உண்டு. I came by the down train என்பதற்குப் பதில், I came by the town drain என்பது ஓர் அடிக்கடி உதாரணம்.

இந்த ஸ்பூனரிசம் (Spoonerism) தமிழில் இருக்கிறது என்று ஹ்யூமர் கிளப் சீதாராமன் இரண்டு உதாரணங்கள் கொடுத்தார். வண்ண உடை என்பதற்கு உண்ண வடை என்று சொல்வடு. தம்பி கடை என்பதற்கு கம்பி தடை என்பதும் ஸ்பூனரிசம்தான்.

வசந்த் சொன்ன இரண்டு உதாரணங்களை சீதாராமன் ரசித்திருக்க மாட்டார். "பாஸ்! 'மக்கள் குடிக்கக் கஞ்சியில்லாமல் தவிக்கிறார்கள்' என்று ஒரு சொற்பொழிவாளர் பேசியபோது, ஏன் சிரித்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை.

விழா முடிந்து, பந்தியில் சாப்பிட உட்கார்ந்தார். பாயசம் பரிமாறும்போது, அது இலையில் சொட்டுவதைக் கண்டு, 'ஆப்பை ஓட்டையா?' என்று கேட்டபோது, சர்வர் ஏன் கன்னத்தில் அறைந்தார் என்பதும் அவருக்குப் புரியவில்லை' என்றான்.
-கற்றதும் பெற்றதும், சுஜாதா, விகடன்.காம்

3 comments:

Chakra said...

First time here.. i hav read your words in CM's blog & at Teakada. You hav an excellent blog here.

jack said...

dude...
2 much man... sujatha quoted these??

(Mis)Chief Editor said...

சக்ரா அவர்களுக்கு,

நம் இல்லத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!
பிடித்த முறையில் விருந்து இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்!

செந்தில் அவர்களுக்கு,

இவ்வார விகடனில் வந்திருந்த மேட்டர் இது!