Tuesday, July 26, 2005

காந்தி இளவயதில் உடல் வலுவில்லாதவராய்த்தான் வளர்ந்தார். அவரது பயந்தாங்கொள்ளித்தனமே பின்னால் அஹிம்சையாய் வளர்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல.

காந்தி எழுதுகிறார் தனது சுயசரிதத்தில்: "நான் என் அண்ணனின் தங்கக் காப்பிலிருந்து சிறிது தங்கத்தை வெட்டி எடுத்தேன். கடைசியில் என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து எனக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தேன். நோய்ப் படுக்கையில் இருந்த என் தந்தை, கடிதத்தைப் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையைக் காண முடிந்தது. அஹிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்கு சரியானதொரு பாடம் ஆயிற்று. அத்தகைய அஹிம்சை எல்லாவற்றிலும் வியாபிக்கப்படும்போது அது தொட்டதை எல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை."

அனுபவங்கள்தான் நம் வாழ்வை அமைக்கின்றன. அந்த அனுபவங்களுக்கு நாம் கொடுக்கும் விளக்கம், அதை நாம் பயன்படுத்தும் முறை இவை நமது குணநலங்களின் பிரதிபலிப்பு.

-தலைவன் ஒரு சிந்தனை, டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி, கங்கை புத்தக நிலையம்

2 comments:

Saravana said...

hmm I was using this template for some time before ... I thought I landed up in my own blog ... Thanks for blogrolling me ...

TJ said...

Nice post!!
Mahathma vaazhai anecdotesa kettale, thaana nermai manasula vandudum