Thursday, July 21, 2005

வெங்கிட்டு ஸார், ராம், ஜுனியர் கண்ணதாசன் கவிதைகளைப் படித்த போது 'நானும் எழுதினால் என்ன?'

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...

'ஏன், எதற்கு, எப்படி' என
வியப்பூட்டும் நட்சத்திரங்கள்...

பரந்த விரிந்த உலகின்மேல்
உயர்ந்திருக்கும் நட்சத்திரங்கள்...

வெல்வெட்-ல் பதித்த வைரம்போல்
வானில் மின்னும் நட்சத்திரங்கள்..

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...

பி.கு: இது நம் எல்லோருக்கும் அறிமுகமான பாட்டுதான்:-)

4 comments:

Pavals said...

twinkle twinkle lil star. :-)

'அந்நியன்' கிட்ட கத்துக்கடீங்களா??

Narayanan Venkitu said...

நட்சத்திரக் கவிதையில்
தொடங்கிய பயணம்

அவைகளைப் போலவே
'மின்ன' என் வாழ்த்துக்கள்

மனம் இருந்தால் - மார்க்கம் உண்டு

'நெஞ்சை' தொட்டு விட்டீர்கள்
Twinkle Twinkle மூலமாக!

Ram C said...

good start, ranga.

வெங்கி / Venki said...

அருமை. அருமையான ஒரு தொடக்கம். நலமாய் தொடர வாழ்த்துக்கள்.