Friday, July 22, 2005

பொதுவாகப் பாடல்களை ரசிப்பது கொஞ்சம்; அதுவும் 'கானா' பாடல்கள்..ஊஹ¤ம்!
இந்தியா சென்றிருந்த சமயம். தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட். மெடிகல் காலேஜ் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த போது ஒலித்த பாடல் 'நச்' என மனதில் பதிந்தது. மிக எளிமையான, ஆனால் லாவகமான, அதே சமயத்தில் அசிங்கமில்லாமல் விழுந்திருந்த வரிகள் என் புருவத்தை உயர்த்தி சிரிக்க வைத்தன. இறுதியில் சொல்லாமல் சொல்லும் 'மெஸேஜ்' ஸிம்ப்ளி சூபர்ப்!
தங்கையிடம் விசாரித்ததில் 'ஆமாம்! இந்தப் பாட்டு நல்லாருக்கும்' என்றாள்; என் மாமிக்கும் கூட பாட்டு பிடித்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
'ஜெயசூர்யா' படத்தில், 'டப்பாங்குத்து' புகழ் தேவா இசையில், அர்ஜுன், வடிவேலு, ஜயலஷ்மி பாடிய பாடல் கட்டுனா அவள கட்டணும்டா உங்களையும் புன்னகைக்க வைத்துத் தாளம் போட வைக்கும்.

1 comment:

capriciously_me said...

neenga sonneengannu oru crappy paatu kettaachu...worst....