Friday, August 05, 2005

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட 'மை'யைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர் பெரு'மை'யிலும், சிலர் தற்பெரு'மை'யிலும், வேறு சிலர் பொறா'மை'யிலும், சிலர் பழ'மை'யிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
ஆனால், தொடக்க்கூடாத 'மை'கள், மடமை; கயமை; பொய்மை; வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை, ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை; ஏழ்மை; கல்லாமை; மடமை; அறியாமை.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும், உரிமையாகவும் கொள்ள வேண்டும்.
-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

3 comments:

tt_giant said...

Nice quotes. No wonder he was called kalaivaanar.
BTW, I have linked you.

(Mis)Chief Editor said...

டிடி,

ரொம்ப தாங்க்ஸ். உங்க blog-க்கு வர்லேன்னு கோச்சுக்காதீங்க. அதுக்கு காரணம் உங்களுக்கு ரெண்டு நாள்ல தெரியும்!

tt_giant said...

ennavo podi vechhu solreenga.. onnum vizhangala!