Monday, August 08, 2005

வணக்கமுங்கோ...

மொத மொதல்ல அவுட்ஸைட் இந்தியா வந்ததுல அறிவு(?!) விசாலமாச்சி; பார்வை விரிஞ்சிருச்சு (வேற காரணமும் உண்டு!).

முக்கியமா நான் எயுதறதுக்கு ரெண்டு பேர் காரணம்........
ஒண்ணு,
ஹேமந்த்............ இன்னொருத்தர், கேப்ரிம்மா!

டீக்கடா ஹேமந்த் 'உங்களுக்காக ஸ்பெஷல் டீ போடறேன்'னு சொல்லிட்டு தமிழ்ல எயுதச் சொன்னாரு. நெறய என்கரேஜ் பண்ணாரு. 'ஒயுங்கா எய்தினா போறும், மத்தபடி ஸ்கைதான் லிமிட்'டுன்னு மொதல்லியே சொன்னதால நமக்கு ப்ராப்ளமே இல்லாம பூடுச்சு. ஆனா நம்ம ராசி, அவரு கடையை மூடிட்டாரு!

என்ன பண்றதுன்னு முழிச்சிகினு இருந்தப்ப
கேப்ரிம்மா வந்தாங்கோ. அவங்களோட மொத தபாவே லடாய்தான்! அவங்க எயுதறது எனக்கு பிடிக்கலேன்னு தெகிரியமா சொல்லிப்போட்டேன். ஆனாலும், அப்பப்போ கேப்ரிம்மா சைட் (site-pa!) போய்கினே இருந்தேன். நம்ம ராசி தொடர்ந்திச்சு..அந்தம்மாவும் கொஞ்ச நாள் காணாம போயிட்டாங்கோ.......அப்பதான் ஐடியா வந்திச்சு!

'என்ன கேப்ரிம்மா! நான் எழுதலாம்மா?'ன்னு வெள்ளாட்டா கேட்டதுல அம்மா 'ஓகே'னுட்டாங்கோ! அந்தம்மா சைட்டு (site!) எப்பவுமே லைட்டாவும் வேடிக்கையாவும் இருக்கும். 'சரி! நாமும் அதே ரூட்ல போயிருவோம்'னு எயுத ஆரம்பிச்சேன்.

அப்பதான்
கேப்ரிம்மா 'நீங்களே ஒரு சைட் இஷ்டார்ட் செஞ்சா என்ன?'ன்னு ஒரு கேள்வி கேட்டாங்கோ. 'என்னடாது......நம்ம ஐடியாவே வேற......இத்துல இறங்கலாமா?'ன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இறங்கிபுட்டேன். 'ரொம்பவே லைட்டாதான் எயுதனும்'னு முடிவு செஞ்சேன்.

இத்துல நெறய பேர் அறிமுகமானங்க..........சில பேர்
காறியும் துப்பினாங்க! அது சரி, 'இங்கே எச்சில் துப்பவும்'னு போர்டு கீதோ என்னமோ?! யாரு கண்டது?!

சில பேரப் பத்தி சொல்லாம போனா எனக்கு 'போற வழிக்கு புண்ணியம் கெடக்காது'ங்கறதால....

டீக்கடா ஹேமந்த்
கேப்ரிம்மா ( கூந்தல்!)
வெங்கிட்டு ஐயா ( ·ப்ரெஞ்ச் தாடி!)
சிங்கப்பூர் ராம்( பால் வடியும் முகம் !)
வெங்கட் கண்ணதாசன் (விரிந்த கண்கள்!)
ஐயய்யோ(எருமை(தானே?!))
விச்சி ஏஞ்சல் (விக்கட் ஏஞ்சலானது)
டிஜே ( ஸ்டைல் போஸ்!)
டிடி ( கறுப்பு வெள்ளை!)
·பெராரி(ஸப்வே ட்ரெயின்!)
ப்ரியம்வதா (சொல்!)
நித்யா(மாறி வரும் எ(வ)ண்ணங்கள்!)
சுபா ( சிரிப்பு!)

இப்படிப்பட்ட ஆளுங்களோட பேசற சான்ஸ் கெடச்சதுல ஹேப்பியோ ஹேப்பி. இவங்க எல்லாரும் நன்னாருக்கணும்னு ஆண்டவன்கிட்ட ஒரு மனுப் போடப் போறேன்.

இத்தன நாள் டொரொன்டோ வயர்லெஸ்ல blog இஷ்டார்ட் பண்ணி கலாய்ச்சாச்சி.........ப்ராஜக்ட் ஓகேயாயி இப்போ வூடு திரும்பணும்...பெங்களூர் போயி ஆ·பீஸ்ல ஜாய்ன் பண்ணப்புறம் தான் தெரியும்......என்னாவும்னு.

அத்தால ஒரு சின்ன ப்ரேக்.......பொறவு ஆண்டவன் தொணையிருந்தா அப்பாலிக்கா மீட் பண்ணுவோம்.

ஓகே? வுடு ஜுட்!

14 comments:

tt_giant said...

Ranga: danks ma.. neenga 2 days la therium nu soneenga.. so edhaana?.

seri.. whats that 26 36 matter?

F e r r a r i said...

Bangalore vareengala?
Vaanga vaanga. BTW adhu enna sir 26 36 matter? Enakkum sollungalen please :-D Naan maami kitta poattu kodukka maaten :-P

WA said...

aaha oorukku poreengala? Good Luck, Bangalorela enjoy maadi. Thanks Ranga.

Ram.C said...

polambi thalineenurukkeenga.. bangalore vanthuthu appaala kalaaingka...

TJ said...

Ranga kalakipottengha!! Naa kooda september kadaseela bengaloorkku 'appeattu' aairalamanu nenachunu irukein..
Anga pudchukalam..[catch you there ;)]

capriciously_me said...

cycle gap-la ennoda koondhal kadhaiya izhuthutteenga...nandri...:)

ippadi ellam neenga farewell post ezhudhina naanga ungaluku idhukku mela mail panna maatomnu u no think thappa :P we will still bug u...naan mudhallaye sonna maadiri ungaloda apdi podu dhayavula dhaan naan en blog-a ottittu iruken :P so, marakkama regular-a enaku anupitte irunga :P appadiye maami-kku en saarbil periya HI!! blore vandha nalla saapadu kidaikuma? ;) ellarthukkum munaadi andha 26 36 matter-a sollidunga sir!!!!

ioiio said...

Adhu Epdi En Oruthana Neenga "Sila Per" nu sollalaaam :((

Irundhaalum nakkal adhigam dhaan ranga..

Blore ellaam ippa hi-tech.. so internet periya prachnaiyaa irukkaaadhu.. Ensoi maadi.. Appa Appa post paadi..

Lol :))

Nithya Swaminathan said...

Thanks for the mention..:D

Bangaloreukku varuga varuga..:D

Narayanan Venkitu said...

Ranganathan, Ennadhidhu..dhideernu oorukku porennu solliteengalae.!

I will definitely miss your comments. After all no one writes for 100% positive comments...not me.

I am so happy that there is someone like you who is open and who also criticizes posts..! Makes the writer think. I had that feeling.!

I am happy that you've included me in your list...thought IMHO...I didn't do anything great.!

You must continue to write please.! I wish you all the best.!

WA said...

Bangalore poi sendhaachaa? settle aana odane ezhudhunga....

வெங்கி / Venki said...

naina, ennabha innum antha 36 26 vishayathai pathi sollavae illaiyea, sikeram sollidipa illana thalai vedithidum polla irruku.

Priya said...

hey
first time here!! Nice!!
romba naal kazhichu ippdi oru tamil kekren!!

Priyamvada_K said...

Madras thamizh padichu evvalavu naaLachu! Thanks for the smiles, and for the mention.

Regards,
Priya.

haroldbrinick2073 said...

i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here