Sunday, September 25, 2005

சானியாவுக்கு டென்னிஸ் லட்சியத்தை ஒன்றும் அவருடைய அப்பா அம்மா ஐந்து வயதிலிருந்தே வெறியூட்டி ஏற்படுத்தவில்லை என்ற தகவல்தான் எனக்கு முக்கியமான தகவலாகப் படுகிறது.

சிறுமி சானியாவை டென்னிஸ் ஆடச் சொன்னபோது, அவருடைய பெற்றோர் சொன்ன ஒரே நோக்கம் 'உன் சந்தோஷத்துக்காக விளையாடு. இதற்குப் பதில் வேறு விளையாட்டு விளையாடினாலும் உன் சந்தோஷத்துக்காக விளையாடு. நீச்சலடிக்கிறாயா? உன் சந்தோஷத்துக்காக நீந்து!"

நீ செய்யும் வேலை உனக்கு சந்தோஷத்தைத் தர வேண்டும். இல்லாவிட்டால் அதைச் செய்யாதே என்பது ஓர் அற்புதமான வாழ்க்கைத் தத்துவம். டென்னிஸ் ஆட ஆட, அதில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தினால்தான் இன்று சானியா அதை விட சிறிய சந்தோஷங்களை (பிரியாணியைத் துறந்து, காபியை மறந்து, கேக்கைப் பிரிந்து!) தேவையில்லை என்று உதற முடிகிறது.

எதில் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது ஒரு வரம். சானியாவின் சந்தோஷங்கள் டென்னிஸ் வெற்றி, விளம்பர வருமானம் முதலியவற்றில் இருந்து மட்டும் வரவில்லை. போலியோ சொட்டு மருந்துக்குப் பிரசாரம், சுனாமி பாதிப்பு நிவாரண நிதி திரட்டுதல் என்று சின்னச் சின்ன சமூக அக்கறைகளிலிருந்தும் கிடைக்கிறது என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது!

-ஓ...பக்கங்கள், ஞானி, ஆனந்த விகடன்

No comments: