Sunday, October 30, 2005

நேரமின்மை காரணமாய், மனதுக்கு ஒவ்வாமல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி; மழை மற்றும் பலரால் பேசப்படும் கஜினி படங்களை ஓட்டி ஓட்டி (திருட்டு) விசிடியில் பார்க்க நேர்ந்தது.

திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்றுப்போட்டு, வாழ்க்கையில் (என்னைப் போல!) பொறுப்பில்லாமல் அலையும் ஒரு குடும்பத்தலைவனின் கதை. நடப்பைச் சொல்வதால் ரசிக்க முடிகிறது. டுவிஸ்டு/டர்ன் இல்லாத படம். இருந்தாலும், சொல்ல வந்ததைக் காம்ப்ரமைஸ் செய்யாது, சொல்லியதற்காக தங்கர்பச்சானுக்கு ஒரு ஷொட்டு!

தெலுகு 'வர்ஷம்' தமிழில் 'மழை'; ந்திர வர்ஷம் பதித்தது போல தமிழ்நாட்டு மழை முத்திரை பதிக்காததற்கு முக்கிய காரணம் 'ஜெயம்'தான்; ஒரே கதை; ஒரே கதாநாயகன் இரு முறை செய்தால்? 'ஜெயம்' ரவி தெலுகைத் தவிர்ப்பது அவரது வளர்ச்சிக்கு நல்லது. க்ளாமர் 'கை' கொடுத்தாலும் 'நடிப்பு' முக்கியம் என்பது ஸ்ரேயாவுக்கு யாராவது சொன்னால் தேவலை. தெலுகில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் செய்ததைத் தமிழில் கலாபவன் மணி சொதப்பியிருக்கிறார்! விகடனில் குறிப்பிட்டது போல 'நச நச' மழை! (இதைப் பார்த்து விட்டுத்தான் 'சிவாஜி'க்கு ஸ்ரேயாவைப் 'புக்' செய்தார்களாம்!)

திருட்டு சிடி எப்படியிருக்கும்? உதாரணம் கஜினி. படம் தாவுகிறது. நிச்சயமாய்ச் சிடிக்காகச் சென்ஸார் மறுமுறை செய்திருப்பார்கள் போலும்! ஒரு பாட்டு, சில ஸீன்கள் வெட்டப்பட்டிருப்பது தெளிவாய்த் (அல்லது தெளிவில்லாமல்!) தெரிகின்றன. நமக்குத் தெரிந்த கதையை, க்ரிஸ்ப் திரைக்கதையாய்த் தந்து இருக்கையில் உட்கார்த்தி வைத்ததற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்! அஸின் நடிப்பு, சூர்யா ஜ்வலிப்பு, நயனதாரா/வில்லன் சலிப்பு, மொத்தத்தில் படத்தில் ஒரு பிடிப்பு - இருக்கிறது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் - கஜினி மட்டும் வெள்ளித்திரையில் பாருங்கள்!

No comments: