Saturday, November 05, 2005

மிஸ் சீ•ப் எடிட்டர்: வணக்கம்.

பரதேசி: அய்யா வணக்கமுங்கோ..

மி.எ: என்ன மேட்டரு? ரொம்ப நாளா இந்தப்பக்கமே காணுமே?

பரதேசி: அது ஒண்ணுமில்ல...தீவாளிக்கு கண்டுகினு இனாம் வாங்கிகினு போலாம்னு வந்தேன்..ஹி.ஹி..

மி.எ: அது சரி, ஏதாவது படம் பாத்தியா?

பரதேசி: (சோகத்துடன்) அத்தையேன் கேக்கறீய...பாத்தேனே சிவகாசி

மி.எ: என்னங்க இப்டி சோகமாயிட்டீங்க...திருப்பாச்சி தங்கை சென்டிமெண்ட், இதுல அம்மா சென்டிமெண்ட் வெச்சிருக்காமில்ல?

பரதேசி: (கடுப்புடன்) அட போய்யா! அதுல ட்டோக்ராப் மல்லிகாவ வீணடிச்சீக...இதுல பாவம் கீதாவுக்கு அம்மா வேசம் கட்டிவுட்டு நாலு ஸீன்ல வரவுட்டு வேடிக்கை காட்டுறீய...

மி.எ: அத்த வுட்டுப்போடு...கதை எப்படி?

பரதேசி: ரெண்டு கதை...இன்டர்வெல்லுக்கு முன்னால ஒண்ணு அப்பால வேறொண்ணு...முத்தப்பாங்கற சின்னப்பையன் ஏன் பட்ணத்துக்கு ஓடியாந்து சிவகாசியா வுறாரு? அப்பால ஏன் ரீப்பீட்ல முத்தப்பாவா மாறாம சிவகாசியா மோதுறாரு? இவ்ளோதான் மேட்டரு. பஸ்ட் ஹா•ப் •புல்லா ‘ரங்கநாதன் தெரு’ ஸெட்ல ஓடுது; ஸெகண்ட் ஹா•ப் நாட்டரசன் கோட்டைல அபீட்டு வுது; மொத்தத்துல படம் பூரா ‘பூ’ வாசனைதான் போ!

மி.எ: என்னது?!

பரதேசி: பின்ன...காதாண்ட பூ வெச்சா மூக்குகாண்ட வாசனை வராதா என்ன?!

மி.எ: சரி, இளைய தளபதி எப்படி?

பரதேசி: சும்மா சொல்லக்கூடாதுய்யா...தம்மாத்தூண்டு கதைய வெச்சிகினு மனுசன் போடற ட்டம் கீதே..கொஞ்சம் ஓவர்தான்..விக்ரம் ரெமோவா வர்றாரு..சூர்யா கஜினியா மார்றாரு..இவ்ரு என்னடான்னா அரைச்சு வுட்ட மசாலாவே போறுங்கறாரு..இதுக்கு எவ்ளோ தில்லு வேணும்?!

மி.எ: (ஜொள்ளுடன்) அசினைப் பத்தி சொல்லேன்..

பரதேசி: (கோபம் தோய்ந்த குரலில்) தோ பாரு..அந்தம்மாவ நாற அடிச்சுட்டாங்க. அவ்ளோதான் சொல்வேன். அதுக்கு மேல கேக்காத போ!

மி.எ: மத்த விஷயம்?

பரதேசி :ஏற்கெனவே திருப்பாச்சில நீதான் ‘மத்த விஷய’த்தையெல்லாம் பத்தி விலாவரியா புட்டு புட்டு வெச்சிருக்கியே...அத்தே எடுத்து வுடு. இத தவுர, படம் •புல்லா ஹீரோ ஒர்ஷிப்தான்..அத்தயாவது கொஞ்சம் ஒயுங்கா பண்ணிருக்கலாம்! புடவ கட்டினாதான் பொம்பளைக்கு நல்லாருக்கும்னு டயலாக் வுட்டுட்டு டூயட்ல கண்டபடி ட வுடறாங்கப்பா! கதை கந்தல்னு தெரிஞ்ச பொறவு ப்ரகாஷ்ராஜை இட்டாந்து கேப்பை •பில் பண்றாங்கோ! நயனதாராவுக்கு ஒரு ஐட்டம் நம்பர்! தாங்கல போ!

மி.எ: பேரரசு?

பரதேசி: என்னத்தைச் சொல்ல? மொத ஸீன்லேந்து, கடோசி ஸீன் வரைக்கும் தேடிப் பாக்குறேன்! லாஜிக்கை காணவே காணும்பா! ஒரு வேளை இத்தான் பேரரசோ?! (கிளம்ப யத்தனம்)

மி.எ: என்ன கெளம்பிட்டீங்க? கடைசியா ஏதாவது சொல்லிட்டு போங்க..

பரதேசி: இவருதான் அஜீத்துக்கி ரீ என்ட்ரி ‘திருப்பதி’ல தரப்போறாராம். தேவுடா! அஜீத்தைக் காப்பாத்த யாருமேயில்லையா?! இது எல்லாத்துக்கும் மேலே திருப்பாச்சி கண்டுகின பின்னாடியும் புத்தி வராம விசிலடிச்சான் குஞ்சுகளோட சிவகாசி போயி குந்திகினேன் பாரு! என்னை ஜோட்டால அடிக்கணும்யா!

மி.எ: என் செருப்பு பழசாதான் இருக்கு!

பரதேசி: வுட்டா நீயே பின்னிடுவ போலருக்கே? வேண்டாம்பா வம்பு! (ஓடுகிறான்!)

1 comment:

Narayanan Venkitu said...

Ranganathan - Kalakkals. Probably the best review on Sivakasi.!!

Ellam ok dhaan...kanavu kannai Nayan patthi oru varthai kooda pesa villaya..rendu makkalum?? Umm..!!