1987-88-ல் மத்திய வர்க்கப் பிரதிநிதியால் INR என அழைக்கப்படும் இந்திய ரூபாயில் தயாரிக்கப்பட்ட வருமான வரிக்கான கணக்கு இதோ:
Basic 28680 DA 2581 CCA 1200 HRA 5400 Honararium 290
Salary Income (including arrears) 38151
Less: Exempt HRA 3132
Less: Standard Deduction 10000
Gross Total Income 25019
Deduction u/s 80C
G.P.F 15000
L.I.C 294
Group Insurance 240
Deduction Admissible 10414
Taxable Income 14605
Income Tax upto 18,000/- NIL
ஏன்? எதற்கு? எப்படி? என புருவம் உயர்த்துவது புரிகிறது.
இரண்டு மகன்கள், ஒரு மகள், இல்லத்தரசி கொண்ட சராசரி குடும்பத் தலைவனின் வருடாந்திர வருமானம்தான் இது. இவர் வேறு யாருமில்லை. எனது தந்தைதான்!
'இத்துணூண்டு' வருமானத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்தினார் என எனக்குப் புரியவே இல்லை.முகம் சுளிக்காது, எப்போதும் புன்னகையுடன் எங்களது வேண்டுகோள்களை (முறையாய் இருந்தால்) அங்கீகரித்து 'கரையேற்றி'யது எப்படி?!
யோசித்துப் பார்த்தால்... தேவைகளைக் குறைத்துக்கொண்டு, ஆடம்பரமில்லாது, போதுமென்ற மனத்துடன் இருந்ததால்தானோ?
பி.கு.
1. எனது ஒரு மாதத்திய சிலவு என் தந்தையின் ரூ 14605-ஐ விட அதிகம்!
2. என்னைத் 'தெரிந்த'வர்களுக்கு என் தந்தையின் ஆன்மீக நாட்டம் புரியும்; ஆன்மீகத் தொடர்பான புத்தகங்களின் நாட்டம் புரியும். அப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்த ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்தபோது கிடைத்ததுதான் இது.
No comments:
Post a Comment