நான்கு மாதங்களில் நான் கண்டு ரசித்த/களித்த/சகித்த படங்களைப் பற்றிய 'என் பார்வை' இதோ! (எச்சரிக்கை: இது தொடரும்!)


ந்யூயார்க் (ஹிந்தி) - உலகையே உலுக்க வைத்த 9/11மறுபக்கம்?!! வல்லரசு நாட்டின் புதிய முகத்தை உரித்துக் காட்டும் படம். ஜான் ப்ரகாம் / கத்ரீனா கை·ப் / நீல் என்கிற க்ளாமர் நட்சத்திரங்களை நிசம்மாகவே நடிக்க வைத்ததில் இயக்குநர் கபீர் கானைப் பாராட்ட வேண்டும். இர்·பான் கான் வசன உச்சரிப்பில் நம்மையும் அறியாமல் சிரித்து விடுகிறோம். தீவிரவாதத்தின் காரணமாய் பலியான அப்பாவி இஸ்லாமியர்களை இவ்வளவு அழுத்தமாகக் காட்டி உறைய வைத்திருப்பது கூடுதல் பலம்.
கம்யம் (தெலுகு) பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்... ரம்யம்!

படத்துல அசலா என்ன விசேஷம்?


படத்துல அசலா என்ன விசேஷம்?
ஏழு வருஷமா எனக்குள் ஊறிட்டு இருந்த கதை. ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி (?!) பாலிஷ் பண்ணி, பளபளன்னு மாத்தியாச்சு(?!). உலகத்துல மத்த எந்த விஷயத்தையும் விட நம்பிக்கை துரோகம் ஆறாத ரணத்தையும் அதிர்ச்சியான துயரத்தையும் கொடுக்கும். 'துரோகத்தைத் தாங்க மாட்டேன்'னு வெடிச்சுக்கிளம்பற அஜீத்தின் கதைதான் அசல்!
-இயக்குநர் சரண், ஆனந்த விகடன்
அடப்போய்யா! இன்னும் எத்தனை நாளைக்கு இப்டியே பேசிகிட்டு திரியப்போறீய?!
No comments:
Post a Comment