Wednesday, September 23, 2009

பழங்காலப் படங்களைப் பார்த்து 'என் பார்வை'யில் அலசுவதே 'திரும்பிப் பார்'!! பாழாய்ப்போன தமிழ் சினிமா செண்டிமெண்டான 'வெற்றி'யோடு துவங்குகிறேன்!!!

திரைப்படம் வெற்றி

வெளியீடு 1984

தயாரிப்பு பி எஸ் வி பிக்சர்ஸ்

இசை சங்கர் கணேஷ்

இயக்கம் எஸ் ஏ சந்திரசேகரன்

நடிப்பு விஜயகாந்த் , விஜி, எம் என் நம்பியார், பி எஸ் வீரப்பா, மகேந்திரன் மற்றும் இளைய தளபதி விஜய்

நன்றி மோசெர் பேர் டி வி டி ரூபாய் 45

அப்பாவைக் கொன்றவனை பழி வாங்குவது, காலேஜில் சண்டை, கதாநாயகியைக் கடத்திக்கொண்டு போய் duet பாடுவது, அனுராதாவின் belly(?!) dance, பழங்காலத்து வில்லன்கள் கத்தி சண்டை, என 80களுக்கு உண்டான அனைத்து மசாலா items நிறைந்த படம்.

விஜயகாந்த் இளமையாக இருக்கிறார். கண்கள் சிவப்பாகவே இருக்கின்றன. மேக்கப் போட்டிருப்பது நன்றாக தெரிகிறது. துடிப்பாக சண்டை போடுகிறார்.

விஜி...பெயரைப் போல வருகையும் நடிப்பும் சுருக்.
மகேந்திரன் எரிச்சல். கமிஷனராக வரும் நம்பியார் வீண்.

பழைய்ய trademark சிரிப்போடு வில்லனாய் அறிமுகமாகும் வீரப்பா செய்வதெல்லாம் காமெடியாயிருக்கிறது. அது சரி வில்லன் என்றால் அரை குறை ஆடை பெண்களின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு வருவதில் என்ன logicடா சாமி?!

சங்கர் கணேஷ் இசையில் 'ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்', 'காவல் புரிந்தவன்' பாடல்கள் நன்றாக இருக்கின்றன. 'ஆத்தி, ஆத்தி' பாட்டில் 'ஆளானாலும் ஆளு, இவ அழுத்தமான ஆளு' அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரின் மைத்துனர் என்பதால் S N சுரேந்திரனுக்கு அடித்தது chance!

S A சந்திரசேகரின் மற்றுமொரு 'சட்ட' படம். இடைவேளை வரை ஓரளவிற்கு உட்கார வைத்தவர், பின்பகுதியில் ஓட ஓட விரட்டுகிறார். தாங்க முடியலை!

பின்குறிப்பு:
1. விஜய்தான் குட்டி விஜயகாந்த்! அப்பா எரிவதைப் பார்க்கும்போது இன்றைய இளைய தளபதி விஜய் போல் வீறு கொண்டெழுந்து, 'குருவி' சுடுவது போல சுட்டுவிடுவாரோ என்கிற பயத்தைத் தவிர்க்க முடியவில்லை!
2. எதிர்பாராத வகையில் படம் வெற்றிகரமாக ஓடி விஜயகாந்த்/சந்திரசேகர் மார்கெட் உசந்ததாம்!

No comments: