Saturday, September 26, 2009

சிலரைத் திட்டும்போது 'போக்கிரிப் பயலே' எனக் கடிந்து வசை கூறுவர்.

போக்கிலி என்பதே போக்கிரி ஆகிவிட்டது. அது பேச்சில் ஏற்பட்ட திரிபு; தப்பு. போக்கிடம் இல்லாதவன், புகலிடமின்றிப் போனவன், தீங்கு செய்யவும் திருடவும் முரட்டுத்தனம் செய்யவும் துணிந்ததால், போக்கிலி, ஒரு கலகக்காரனைக் குறிக்கலானது; தீயவனைச் சுட்டியது.

அனாதையை 'ஏதிலி' என்பார்கள். 'ஏதுமிலித் தனியனேற்கே' என்பார் மாணிக்கவாசகர். போக்கிலிகளும், ஏதிலிகளும் இல்லா நாடே நல்ல நாடாகும்.

-பிழை திருத்தும் மனப்பழக்கம், தமிழண்ணல், மீனாட்சி பதிப்பகம்

No comments: