Friday, November 20, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 5

நேற்று சொன்னது போல பொறுமை, பொறுமை, பொறுமை-களோடு ஆடி இந்தியா, இலங்கையை வெறுப்பேற்றியிருக்கிறது!

கம்பீர், கம்பீரமாக ஆடி 114 ஓட்டங்கள் குவிக்க, தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் கொண்டு வந்து சச்சின் சதமடிக்க, எப்போதும் போல ஆபத்துக்கு உதவும் தோழனாய் லக்ஷ்மண் (51) கை கொடுக்க, டல்லாய் முடிந்தது முதல் டெஸ்ட்!

அதிகம் பேச ஒன்றுமில்லை, ஜெண்டில்மேன்! இந்தியா தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டபோது, எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 412!

அடுத்தது நாக்பூர்!!

1 comment:

அன்புடன் நான் said...

ஆட்டம் தொடரட்டும்... வருகிறேன்....

அந்த சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்க.... கருத்துரை எழுத சிரமமாக உள்ளது.