Tuesday, June 22, 2010

யார் குற்றம்?

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

சினிமா தலைப்பு, கடைகளின் பெயர்கள் போன்றவற்றை 'தமிழ்' பண்ணி அடிப்படை கல்வியையும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் தரத்தையும் அதிகரிக்காமல், ஏற்கெனவே செம்மையான மொழிக்கு 'செம்மை'யான அடைமொழி கொடுப்போம்!

குட்டிப் பாப்பாக்கள் தொலைக்காட்சியில் பாடுவதையும், ஆடுவதையும் பார்த்து, ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளை அதிக அளவில் extra curricular activities-ல் ஈடுபடுத்தி பந்தயத்தில் முந்த வைக்க நினைப்போம்!

பக்கத்து வீட்டில் கொஞ்சம் சண்டை சத்தம் கேட்டாலே கதவு, ஜன்னல்களை சாத்திவிட்டு, மெகா மகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்! பக்கத்து நாடு 'நம்ம மக்கள்' எப்படி போனால் நமக்கென்ன?!

ஆற்றுத் தண்ணீர்...இல்லை...கிணற்றுத் தண்ணீர்...மெட்ரோ வாட்டர்...இல்லை...போர்வெல் சமையலுக்கும், குடிப்பதற்கும் உபயோகித்தோம். அதற்கும் வழியில்லையென்றபோது உடனே கேன் வாட்டர் குடிக்கும் கேனையர்களானோம்! கொஞ்ச நாள் கழித்து, குளிப்பதற்கும் உபயோகப்படுத்துவோம்!

பெட்ரோல் விலை ஏறினால் என்ன? நாம் அனாவசியமாக வண்டியை எடுக்காமல் இருக்கப்போகிறோமா என்ன?!

முந்தியெல்லாம் வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருப்பதே அபூர்வம். இப்போ என்னடான்னா, "எனக்கே எனக்கு" (நமக்கே நமக்கு என்று போட்டால் அர்த்தம் சரியாக வராது!) செல்பேசி, மடி கணினி, ப்ளாஸ்டிக் அட்டை இத்யாதிகள்...பணத்துக்கோ, பொழுது போக்க, பேசவோ யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லாமல் தீவுகளானோம்!

முட்டை வெஜ்-ஆ நான்வெஜ்-ஆ கேட்பது ஓல்ட் பேஷன். இப்போ drinker, social drinker, party drinker, addicted for drinking-னு வெவ்வேறு தலைப்பு கண்டுபிடித்தோம்! (நிரம்ப படிச்சவங்கதான் இப்படியெல்லாம் தலைப்பு கண்டு பிடிக்கிறார்களா?!)

இன்னும் எத்தனையோ...

ஒரு சாதா BPO-வில் கூட விடுப்பு எடுக்க வேண்டுமென்றால், அவன் செய்ய வேண்டிய வேலைக்கு backup தயார் செய்ய வேண்டும். அதே போல,

ஏதேனும் மாற்று ஏற்பாடு, positive approach-ல, நாம் என்ன செய்கிறோம் - என்ன செய்யலாம் - என்ன செய்தால் நல்லாயிருக்கும் - அதைச் செயல்படுத்த முடியுமா - அப்படி என்றால் எப்படிச் செய்யலாம் - எல்லாவற்றையும் நீங்கள் யோசித்து எங்களுக்கு எழுதலாமே?!

No comments: