Tuesday, October 05, 2010

எந்திரனும் சாரு ஸாரும் - 2

குரு§க்ஷத்திரப் போர் துவங்குமுன் தருமன் கௌரவ சேனைத் தலைவர்கள், மூத்தவர்கள் அனைவரிடமும் போய் 'போரில் வெற்றி பெற எனக்கு ஆசி வழங்குங்கள்!' என்றானாம்! அதே போல, சாரு ஸார் கருத்துக்களை முதன் முறையாக மறுக்கத் துவங்கி எழுதுவதற்கு அவரிடமே ஆசி கேட்டு 'ஏகலைவன்' போலத் துவங்குகிறேன்!


கோபமான இரண்டு பேர் என்கிற தலைப்பில் 'எந்திரன்' விமர்சனத்தைத் துவக்கியிருக்கும் சாரு ஸார், 'மீதியை வெண்திரையில் காண்க' ஸ்டைலில், விமர்சனத்தை முழுமையாக வாசிக்க 'உயிர்மை, நவம்பர் 2010' இதழைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிச்சயம் வாங்கிப் பார்ப்போம், படிப்போம் ஸார்!


முதல் பாரா இப்படிப் போகிறது...

..இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா.

'சக போட்டியாளரான' என்கிற வார்த்தைகளின் மூலம் என்ன சொல்கிறார்?

கமல்/ரஜினி நடுவில் போட்டி இருப்பதையா? எந்தக் காலத்தில்?

சிவாஜி/எம் ஜி ஆர் காலத்தில் 'கேம்ப்' என்று நடிகர்களையும், ரசிகர்களையும் பிரித்து வைத்து 'சிலர்' குளிர் காய்ந்தது எல்லோருக்கும் தெரியும். இதைத் தெரிந்து தெளிந்த, கமல் ரஜினி என்றோ ஒன்றாகிவிட்டனர். கமல் படம் வரும்போது ரஜினி காணாமல் போவதும், ரஜினியின் படம் ரிலீஸாகும்போது கமல் கமுக்கமாய் இருப்பதும் இதனால்தான்!

இரண்டு பேர் என்கிறதில் தன்னையும், கமலையும் இணைத்துக் கொள்கிறார். எதற்கு? எந்திரனையும், ரஜினியையும் விமர்சிப்பதில்! இல்லையென்றால், கமலைப் பிரித்துப் பிரித்து மேய்ந்து எழுதுவது வழக்கம்தானே?!

உயிர்மை படித்தபின் மீண்டும் எழுதுகிறேன்.

No comments: