Wednesday, June 15, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 4

மிக முக்கிய முன் குறிப்பு 1:
இவ்வகைச் சமையல் குறிப்புகளைப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது. மீறி 'பழக' முற்படுவோரின் 'பின்' விளைவுகளுக்கு எவ்விதத்திலும் பருப்பு ஆசிரியர் பொறுப்பல்ல.


மிக முக்கிய முன் குறிப்பு 2:
ச. குறிப்புகள் மற்றும் ச. பெயர்கள் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டது. மீறி காப்பி அடிப்பவர்களைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை!



இன்னொஸண்ட் ரஸம்


தேவையான பொருட்கள்

பாத்திரம் - 1 - சிறியது (அதுதான் எங்களிடம் இருக்கிறது)

நீர் - 'சிங்க்'லிருந்து பிடித்துக்கொள்ளலாம் (இது அமெரிக்கா அம்மணிகள்/அண்ணன்மார்களுக்கு மட்டுமே பொருந்தும், இந்திய நாரீமணிகள்/நாயன்மார்கள் 'கேன்' வாட்டர் உபயோகியுங்கள்)

புளி/தக்காளி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் (அமெரிக்காவின் இந்தியக் கடைகளில் கிடைக்கும் அபூர்வப் பொருட்களில் ஒன்று; கையே படாமல் புளி/தக்காளியைத் நீரில் கரைத்து விடலாம்; இந்திய நாரீமணிகள் 'கை' விடுங்கோ ப்ளீஸ்)

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் - (எம் டி ஆரில் சல்லிசாக விற்கிறது)

மசாலா பொடி - 1/2 டீஸ்பூன் (மோப்பம் பிடிக்க மட்டும்)

உப்பு - 1 ஸ்பூன் (சுரணையுள்ளவர்கள் இன்னும் 1 ஸ்பூனைச் சேர்த்துக் கொள்ளவும்)

கடுகு - கடுகளவு

நெய் - 1 ஸ்பூன்

கேஸ், அடுப்பு, தீப்பெட்டி, லைட்டர் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் அத்தியாவசியம் என்பதால் அநாவசியமாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.



செய்(த)முறை

பாத்திரத்தை நன்றாகக் கழுவவும். கழுவியபின், முழுமையாக நீரால் நிரப்பிக்கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கேஸை நினைவாகப் பற்ற வைக்கவும் (சமயத்தில் மறந்து போவதற்கு சரி விகித வாய்ப்பிருக்கிறது)

கொதித்துக்கொண்டிருக்கும் நீரில் புளி/தக்காளி பேஸ்டைப் போடவும். நன்றாக பேஸ்டை நீரில் கலக்கவும்.

சாம்பார் பொடி, மசாலா பொடி, மற்றும் உப்பைப் போட்ட பின் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும் (வேறு வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான விதிமுறை).

நன்றாகக் கொதிக்கத் துவங்குவதைப் பார்த்துப் பரவசப் பட வேண்டாம் (முதல் முறையாகச் செய்பவர்களுக்கான விதிமுறை).

5-7 நிமிடங்கள் கொதித்தபின், கேஸை நினைவாக மூடவும் (மறந்து போனால், மீண்டும் பேஸ்ட் ஆவதற்கான வாய்ப்பு அதிகம்)

சிறிய கப்பில் நெய் மற்றும் கடுகு எடுத்துக்கொண்டு, கேஸ’ல் ஏற்றி, இறக்கி....ரஸத்தில் தாளிக்கவும் (இல்லாவிட்டால் சோற்றுடன் கலந்து சாப்பிட முடியாது)

ஆக...2 நபர்களுக்கான 'இன்னொஸண்ட்' ரஸம் ரெடி.

பெயர்க்காரணம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் மேலே படிக்கவும்....

எவ்வளவு 'பொடி' வைத்தாலும், சாது/நல்லவராக எந்த எஃபெக்டும் இல்லாமல் இருப்பதால் இவருக்கு 'இன்னொஸண்ட்' ரஸம் என்கிற பெயர்!


முக்கியமான பின்குறிப்பு 1:

இன்னொஸண்ட் ரஸத்துடன், மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு, தனியாகச் சோறு சாப்பிடும்போது, இந்தியாவில் மாமி/மம்மி கைகளில் உண்டதெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால்...சாப்பிடுவதே தெரியாது! அப்படியே 'டொய்ங்'னு தொண்டையில் இறங்கிவிடும்.


முக்கியமான பின்குறிப்பு 2:

'எத்தன்' படம் எளமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. 'களவாணி'க்குப் பின் விமல் நடித்த படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்தேன்; ஏமாற்றவில்லை. விமல் என்கிற நடிகரிடம் இருக்கும் வெகுளித்தன்மை/எகத்தாளம்/மாட்டிக்கொண்டு முழிப்பதெல்லாம் பார்க்கும்போது, அந்தக்கால பாக்யராஜ் நினைவுக்கு வந்து, நம்மால் புன்னகைக்க முடிகிறது. மனிதருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

'ஷாகிர்த்' (உருது வார்த்தையின் தமிழ் வடிவம் 'மாணவன்') என்கிற இந்திப் படத்தை நண்பரின் பரிந்துரையால் பார்த்தேன். நானே படேகர் எனும் உன்னத கலைஞனின் மற்றுமொரு வித்தியாசமான படமிது. அவருடன் 'துளியூண்டு' போட்டி போட்டு நடித்திருப்பது 'எள'வயது மோஹ’த்! ஹ“ரோவே இல்லாத படம் என்றும் சொல்லலாம். புது தில்லி முழுவதையும் சுற்றிப்பார்த்த 'ஃபீலிங்'!

முக்கியமான கடைசி பின்குறிப்பு:

நல்ல சமையல் குறிப்புகளுக்கு, கீதா ஆச்சல் மற்றும் Mahi பதிவுகளைப் படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன். தக்குடு தப்பித் தவறிச் செய்த நல்ல காரியம் இவர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது. அதனால், தக்குடுவுக்கு ஒரு சலாம்.


இனி...முற்றும்!

5 comments:

Nilavan said...

DC 'la unga instant rasam anupunga sir..

Mahi said...

இன்னொஸன்ட் ரசம்,சூப்பரா பேர் வைச்சிருக்கீங்க. செய்முறையும் காமெடியா இருக்கிறது.

என் பெயரைக் குறிப்பிட்டமைக்கு மனமார்ந்த நன்றி! :)

GEETHA ACHAL said...

கலக்குறிங்க...ரசம் நல்லா இருக்கே..

என்னை உங்கள் ப்ளாகில் குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி...என்னை அறிமுகம் செய்த தக்குடுவிற்கு நன்றிகள்...

தக்குடு said...

//இந்தியாவில் மாமி/மம்மி கைகளில் உண்டதெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால்...சாப்பிடுவதே தெரியாது! அப்படியே 'டொய்ங்'னு தொண்டையில் இறங்கிவிடும்// lols

..:)))

தக்குடு said...

நல்ல சமையல்னு சொல்லிட்டு மஹியை நக்கல் அடிச்சு இருக்க வேண்டாம். கீதா அக்கா தக்குடு மாதிரியே வெகுளி என்பதால் அவாளுக்கும் உம்முடைய நக்கல் புரியலை...:) ( நாராயண! நாராயண!)