Wednesday, July 20, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 9

'என்னடா இவன், படத்தைத் தவிர எதையுமே பேச மாட்டானா?' என்று அங்கலாய்க்கும் என் இனிய வாசகி(!)ப் பெருமக்களுக்காக இதோ!


West Allis நூலகத்துக்கு அடிக்கடி போவதுண்டு (நண்பர்கள் தயவில்தான்!). அரை மணி மேய்ந்துவிட்டு Fiction எனப்படும் புத்தகங்களை மாத்திரம் எடுத்து வந்து சுவாரஸயமாய் படிப்பதுண்டு...! அப்படிப்பட்ட ஒரு தினத்தில் கிடைத்த புத்தகம்தான் இது....ஆங்கிலத்தில் இதை அப்படியே கொடுத்திருக்கிறேன்... அன்றாட வாழ்வில் எத்துணை அருமையாய்ப் பொருந்துகிறது பாருங்களேன்!


Good Morning, it's 3.57 a.m. and I'm chewing an apple. My name is Emmett, I'm forty four, and I earn a living editing medical textbooks. I have a wife, Claire, and two children. When I made the fire in here yesterday, I clicked on a table lamp in order to see what I was doing. That was a mistake. You have to make the fire in the dark: it much become its own source of light. In fact you have to do as much in the dark as possible, including prepare the coffee, because when you turn on a light, your limbic system is hauled into the waking world, and you don't want that.

இந்த முறையை என் வீட்டுப் பெரியவர்கள் அனுசரிப்பதுண்டு. அதிகாலையில் முழிப்பு வந்தாலும் யாரையும் தொந்தரவுப் படுத்தாது 'அடுக்களை'யில் மட்டும் பல்பை எரியவிட்டு (அந்நாளில் வெளிச்சமே தராது இரவை நள்ளிரவாக்கும் 40 வாட்ஸ்!), filter-ல் காபிப் பொடியை நிரப்பி, சொட்டுச் சொட்டாய் இறங்கும் டிகாக்ஷன் போட்டு, பாலை மொத்தமாக வைக்காது, வேண்டிய அளவு கொதிக்க வைத்துச் 'சுடச் சுட' என் அம்மா/ பெரியம்மா / சித்தி குடிப்பதைப் பார்த்திருக்கிறேன்! அந்த இருட்டில் மெலிதான குரல்களில் அரட்டைக் கச்சேரியும் நடக்கும்.

Good Morning, it's 4.45 a.m., and today after I made the fire I just sat for ten minutes doing nothing. Every so often I yawned, leaning forward in my chair with my elbows on my knees and my hands clasped. Sometimes a yawn will take on a life of its own, becoming larger and more extensive than I could have foretold, forcing me to bow my head and gape until several drops of saliva, fed by stream on the insides of my cheeks, collect at the corners of my mouth and fell to the floor! After a few large down yawns like these, my eyes are lubricated and I can think more clearly. I don't know whether scientific studies of the human yawn have taken into account the way it helps to lubricate the eyeballs.

விளக்கமே தேவையில்லாத மேட்டர்! கண்களில் நீர் வர கொட்டாவி விடாதார்கள் இங்குண்டோ?! அலுவலகத்தில் மதிய உணவுக்குப் பின், வாரக் கடைசி மற்றும் விடுமுறை தினங்களில் அளவுக்கு அதிகமான சாப்பாட்டுக்குப் பின் தூங்க முடியாத கட்டாயத்தில் இருக்கும் அனைவரின் 'கஷ்ட' காலம் இது!

Good Morning, it's 4.52 a.m., and I'm very glad to be conscious when nobody else is conscious. To get to the point, where I am the sole node of wakefulness at the heart of the sleeping world, takes a fair amount of preparatory work. I have to get out of bed carefully, so as not to wake Claire, and I have to put on my bathrobe; I have to cinch snug the flannel sash and come downstairs by the front stairs, so as not to wake my son, whose bedroom is at the top of the back stairs, and I have to make coffee.

அதிகாலையில் எழுந்து ரயில்/பஸ் பிடிக்க வேண்டுமெனில் இதே கதைதான்! அந்நாளில், ஒண்டுகுடித்தனத்தில் யாரையும் தொந்தரவு செய்யாது எழுந்து போவதென்பது மனதை ஒருமுகப் படுத்துவதற்குச் சமம்! அதுவும், joint family என்றால் கேட்கவே வேண்டாம். அதில் ஒரு த்ரில் உண்டு, ஜாலி உண்டு! எங்கள் பெரிய மாமாவும், பெரியம்மாவும் இதில் expert! (youngistaan! உங்களுக்கு அனுபவம் உண்டா?!)

A Box of Matches by Nicholson Baker, Random House, New York - இப்புதினம் ரொம்பவே புதுசாய் இருக்கிறது. Emment என்கிற நபரின் (ஒரு மனைவி, இரு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு வாத்து) அதிகாலை நெனைப்புகளின் தொகுப்பு. ஒவ்வொரு தினமும் அதிகாலையில் எழுவது, காபி போட்டுக் கொள்வது, ஒரு தீக்குச்சியால் நெருப்பை (வெப்பத்திற்கு) பற்ற வைப்பது...அப்புறமா 'நினைப்பது', அவ்ளோதான்! நம் அன்றாட வாழ்வுகளின் அவலங்கள், நிகழ்வுகள், அவஸ்தைகள், புன்னகைகளுடன் நன்றாகப் பொருந்துவதால் Emment-ஐ நமக்கு ரொம்பவே பிடித்து போகிறது...!

படிக்கத் துவங்கியிருக்கிறேன்...! நீங்களும் படித்துதான் பாருங்களேன்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நம் அன்றாட வாழ்வுகளின் அவலங்கள், நிகழ்வுகள், அவஸ்தைகள், புன்னகைகளுடன் நன்றாகப் பொருந்துவதால் Emment-ஐ நமக்கு ரொம்பவே பிடித்து போகிறது...!//

பகிர்வும் ரொம்பவே பிடித்துப் போகிறது. பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

தக்குடு said...

எங்காத்துலையும் இதே கதை தான். காத்தால யாரையும் கஷ்டபடுத்தக் கூடாதுனு கத்ரிக்காய் பல்ப் வெளிச்சத்துலையே எல்லா காரியமும் நடக்கும். :)))