Monday, August 15, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 12

நாடு சுதந்திரம் பெற்ற இந் நன்னாளில் என் மனதில் தோன்றியவைகளைத் தொகுத்திருக்கிறேன்

ஒரு பசுமையான பாடலுடன் துவங்குவோமே...


சுதந்திரம் பெற்று விட்டாலும் என்றும் எத்துணை விஷயங்களில் 'அடிமை'ப்பட்டுக் கிடக்கிறோம்...? நம்மைச் சுற்றி நாமே போட்டுக்கொண்ட வேலிகள், பிணைத்துக் கொண்ட சங்கிலிகள்.....ஆக 'தொட்டி மீன்' போல வாழ்வதா வாழ்க்கை...? சுயநலத்தின் உச்சியில் இருந்து கொண்டு, சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டு...தனிமையில் யோசித்தால் நான் சொல்ல வந்தது நன்றாகப் புரியும்! பாட்டுக்கவி பாரதி அவர்களின் 'அடிமையின் மோகம்' நம்மைப் போன்றோரை மனதில் வைத்துதான் எழுதப்பட்டது அய்யா!


நாட்டு நடப்பை விமர்சிக்கும் பலர் வெறும் காகிதப் புலிகளாகவே இருப்பது மானக்கேடு. நம்மால் முடிந்ததை நாட்டுக்குச் செய்ய வேண்டும். நம் வீட்டை எவ்வளவுச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாட்டைச் சுத்தமாகுவதில் காட்ட வேண்டும். குப்பையைத் தொட்டியில் போடு, தெருவில் துப்பாதே, வரிசையில் செல், மனிதனை மதி, தன்னலம் குறை...போன்ற சின்னச் செயல்கள் நாட்டை மாற்றும் நாளை! அன்னா ஹசாரே, நாராயண் கிருஷ்ணன் போன்றோரின் வாழ்வில் நாம் நெறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.


சிறுமை அதிகரித்து வரும் இந்நாளில், அதில் பெருமை கொள்ளாது...நம்மை மேம்படுத்தும் செயல்களைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும். காந்தியின் எளிமையையும், சுபாஷின் வலிமையையும் உன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால் போதும்...இந்தியா வல்லரசாகி விடும்.


ஆக, எவ்வளவு வேண்டும்கள்? வேண்டியதைத் துணிவுடன், பணிவுடன், மகிழ்ச்சியுடன், நேர்மையுடன் வேண்டி நின்றால்...'வேண்டும்'கள் வேண்டி நம் காலடிகளில் வராது போய் விடுமா என்ன?


சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

2 comments:

mohan said...

அருமையான கருத்துக்கள்..அப்படியே பள்ளி நாட்களில் நான் சுதந்திர தின பேச்சு போட்டிகளுக்கு நான் தயார் செய்த சில வரிகளை உங்கள் ஆதங்கம் ஞாபகப் படுத்தியது.
இந்த பாடல்களுடன் பாம்பே திரைபடத்தில் வரும் மலரோடு மலராக பாடலை இனைதுரின்தீர்கள் என்றால், அருமையாக இருந்திருக்கும். அதில் வரும் அணைத்து வரியும் தேன் போல் இனிக்கும் குறிப்பாக "மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் , " புத்தன் அவதாரம் செய்த திருமண்ணில் புத்தன் நம்மோடு ஏனில்லை? " போன்ற வரிகள் சுஜாதாவின் மெல்லிய குரலில் தேசத் தாயின் கண்ணீரை நம்மேல் தெளிக்கும்.

Anonymous said...

இப்படி ஒரு துதிபாடல் தேவையா?
http://charuonline.com/blog/?p=2427

Shankar