Saturday, August 20, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 14

நண்பர் திரு தியாகராஜன் அவர்களோடு பேசும்பொழுது, காஃபி பற்றிய பேச்சு எழுந்தது. 'நான் லியோ காஃபி-தான் குடிப்பேனாக்கும்' என்றார்! 'அடடா...!" என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். லியோ-வும் நரசுஸ்-ம் நம்மை ஆண்ட காலத்தை மறக்க முடியுமா?

தமிழை உலகம் முழுதும் அறிய வைத்த 'காலத்தை வென்ற ரசனை இதுவே' ரஹ்மானை யாரால் மறக்க இயலும்? லியோ காஃபியின் விளம்பரங்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம்!


இன்று இதைப் பார்க்கும்போது இவர் என்ன நினைத்துக் கொள்வார்? 'எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்?!' அட! நம்ம அர்விந்த் சாமிங்கோ அம்மணி!


என்னதான் வருடங்கள் உருண்டாலும் அதே பின்னணியில் இன்றைய 'காலத்தை வென்ற ரசனை'யைப் பாருங்கள்!




'பேஷ்! பேஷ்! காஃபி-னா அது நரசுஸ் காஃபிதான்...பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லாருக்கே' என்று சம்பந்தி உசிலைமணி ஆடியதை மறக்கத்தான் முடியுமா? (எழுத மறந்துட்டேனே, மறந்துட்டேனே!)


'பேஷ்..பேஷ்'-ஐத் தூக்கிச் சாப்பிடுவது போல வந்தது 'தேங்காய்' சுனாமி. பிராமணத் தம்பதிகளாய்த் தேங்காய் மற்றும் மனோரமா. விடுவாரா தேங்காய்?! இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு உங்களால் சிரிப்பை அடக்க முடியவே முடியாது!


இதே 'நரசுஸ்' நிறுவனத்தின் இன்றைய விளம்பரத்தைப் பார்க்கும்போது....அடடா...எல்லாம் மாறினாலும் 'பேஷ்..பேஷ்' மட்டும் அப்படியே!

1 comment:

JK said...

காப்பிக்கு ஒரு மகோன்னத வசிகரம் இருக்கிறது, போதைன்னு கூட சொல்லலாம்
இந்த அட் எல்லாம் கூட அப்படியே

அதுவும் ஊர் விட்டு ஊர் போய்ட்டோம்னா இல்லாத இந்த காபி நம்மை படுத்தற பாடு காபி பிரியர்கள் மட்டுமே அறிந்த ஒன்று

நல்லா (காபி) போட்டிருக்கே பா

ஜேகே