Monday, October 03, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 25

ஜுலை 1947ல் காந்திஜி கல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவரின் ஆசிரமத்திலும் சில நாட்கள் தங்கியிருந்தார். வங்காளத்தின் பிரதமராக இருந்த சோராவதி என்பவரை அழைத்து தன்னோடு சேர்ந்து ஒற்றுமைக்கு வழிவகுக்க உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். முஸ்லிம்கள் வந்து இந்துக்களைப் பற்றிக் குறை சொல்லிவிட்டுப் போவார்கள். இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி குறை சொல்லிச் செல்வார்கள். காந்திஜி அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இது தொடர்ந்தது. அவருக்கு ஓய்வே இல்லை.

ஒருநாள் மதிய வேளையில் காந்திஜி இயற்கை உபாதையைக் தணிப்பற்காக கழிவறைக்குச் சென்றிருந்தார். அவர் வரும்போது அவரது செயலாளர் எதிரே சென்று, ‘எனக்கு எந்த வேலையுமில்லை. சும்மாவே இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றார். உடனே காந்திஜிக்கு கோபம் வந்து விட்டது.

என்னது வேலையில்லையா, எத்தனையோ வேலைகள் இருக்கின்றனவே! இப்போதுதான் நான் கழிவறைக்குப் போய் வந்தேன். போ, அதைப் போய் சுத்தம் செய், போ’ என்று கூறினார். செயலாளரும் உடன் அந்த வேலையைச் செய்யச் சென்றார்.

காந்திஜி அந்த அளவுக்கு சமத்துவம் பேணுபவராக இருந்தார். ஸ்வீப்பர் வந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவரே பலமுறை அவ்வாறு பல கழிப்பிடங்களைச் சுத்தம் செய்திருக்கிறார். பலரது கழிவுகளைத் துப்புரவு செய்திருக்கிறார். அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக பல சேரிப்பகுதிகளுக்குச் சென்று அவ்வேலையை, எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் மகாத்மா.

-http://ramanans.wordpress.com

கடோசி - 1
'மாமூ! உனக்கு வேண்டாதவங்களை நான் 'முடிக்கறேன்'! எனக்கு வேண்டாத அப்பனை நீ முடிச்சிரு' என போகிற போக்கில், பேசுகிற பேச்சில், நெடுஞ்சாலையில் காரில் 'லிப்ட்' கொடுத்த ந(ண்)பர் உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும்? ஹிட்ச்காக் 'strangers in the train' பார்த்தது போலத்தான் இருக்கும்! இருந்தாலும் 'ஜிவ்'வெனத் துவங்கும் முதல் 30 நிமிடங்கள் படு சுவாரசியம். நகைச்சுவை கலாட்டாக்கள் இல்லாமல் சீராய்ப் போகும் கதை அழகு. அனுமானிக்ககூடிய படத்தின் பின் பாதி, இறுதிக் காட்சிகள். தமிழ் சினிமா யு டிவி தயாரிப்பின் தயவில், கொஞ்சம் விதயாசக் களத்தில் இறங்குவது ஆறுதல்.



கடோசி - 2

எதிர்ப்பார்த்தபடி வில்லன் ஆட்கள், எதிர்பார்த்தபடி ஹீரோவைப் போட்டுப் பார்க்க நினைப்பது, எதிர்பார்த்தபடி ஹீரோ பந்தாடுவது, எதிர்பார்த்தபடி வறண்ட காமெடி, எதிர்பார்த்தபடி ஹீரோயின் அறிமுகம்....'வெடி' தாங்கலடா ஸாமி! 5 நிமிட்ஸ், அப்பாலிக்கா அபீட்டு!

அது சரி, திருட்டு பிரிண்ட் பாத்து போட்டு இப்டில்லாம் பேசக்கூடாதுங்ணா!
என் அண்ணா சொன்னது போல 'விஷால் படம், பெயர் நடுவில் ஒரு 'ட்' விட்டுப் போச்சு!'

No comments: