Tuesday, November 15, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 34

மென்மைக் குரலோன் யேசுதாஸ் அவர்கள் பாடத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. என்னால் முடிந்த காணிக்கை இது.


யேசுதாஸ் அவர்களின் குரல் தனித்துவம் வாய்ந்தது. இன்றும் இளமையுடன், பொலிவுடன் திகழ்வதற்குக் காரணம் முறையான சங்கீதப் பயிற்சி என்பதை மறக்கவும் முடியாது; மறுக்கவும் இயலாது. ஆக்ரோஷத்துடன் அவருடைய 'தர்பார்' துவங்குகிறது!



எம் எஸ் வி இசையில், யேசுதாஸ் மெல்லிய மெட்டுடன் துவங்கி, அற்புதமான கருத்துகளை எளிமைத் தமிழில் போகிற போக்கில் சொல்லி, கண்ணதாசனின் வரிகளைச் சிந்திக்கவைத்து...அம்மாடி! இன்றும் பசுமையாய் நம் நினைவில் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!'



இளையராஜா இசை, பாலு மகேந்திரா ஒளிப்பதிவு, யேசுதாஸ் அவர்களின் 'பொன் நிலாவே' பாட்டு - இப்படிப் பாட எஸ் பி பி வேண்டாம், என்னாலும் முடியும் என் உரக்க உரைத்த - ஆர்ப்பாட்ட மெலடி பாடல்! எழுதியது வைரமுத்து என்று நினைத்தால் ... தப்பு .. கங்கை அமரன்!



பாடல் 'ரீச்' என்றளவில், இன்றும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வரும், 'அம்மா' பாடலை பாடியது அட நம்ம யேசுதாஸ் - என்றுமே 'மேன்மை குரலுக்கு' மன்னன்தானே...!




ஏ ஆர் ஆர் இசை, வைரமுத்து வரிகளில் 'பச்சைக் கிளிகள்' யேசுதாஸ் அவர்களின் அற்புதக் குரலில் எப்போது கேட்டாலும் 'ஆனந்த'ம்தானே!



கடோசி - 1

மொழியுடன் ஒன்றிப் போய், இப்படியும் பாட முடியுமா என என்னை வியக்க வைத்த பாடல். சிட்சோர் படத்தில், இயற்கையாய் அமைத்த சூழலில், ரவீந்திர ஜெயின் எழுத்தில், இசையில் யேசுதாஸ் 'என்றும் பசுமை'ப் பாடல் இதோ!




யேசுதாஸ் அவர்கள் நீடு வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்!

No comments: