Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

No comments: