என் பதிவுகளைப் படித்துவிட்டு அலசி ஆராய்பவர்களில் சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.
முன்னிரவு நேரங்களில் துவங்கி, நள்ளிரவு வரை நீளும் உரையாடல் - நேற்று சகுனி பக்கம் திரும்பியது. ’என்ன காலை ஏழு மணி ஷோவா?’ என்று நக்கலடித்தார். ‘அதெல்லாம் இல்லை ஷங்கர், படத்தைப் பத்தி எனக்கு சந்தேகம் இருக்கு, ஓடுமா?’ என்றேன்.
‘தமிழ் சினிமா தேக்க நிலைல இருக்கு ஸார். பொங்கல் ரீலீஸான வேட்டை/நண்பனுக்கு அப்புறமா வந்த அரவான் / முப்போழுதும் உன் கற்பனைகள் / காதலில் சொதப்புவது எப்படி / 3 படங்கள் அவ்வளவு சொல்லிக்கும்படியா இல்லை. ஓ கே ஓ கே ஹிட் எல்லாருக்கும் ஆச்சரியம். கலகலப்பு கலகலத்துப் போச்சி. பெரிய ஹீரோக்களோட படம் எதுவும் வெளி வரலை. இடைவெளி விழுந்திருச்சி. அப்படியிருக்கும்போது இந்தப் படம் ரிலீஸாவுது. சாந்தி, உட்லண்ட்ஸ், சத்யம்/சாந்தம், உதயம், கமலா, அபிராமின்னு சகட்டு மேனிக்கு ரிலீஸ் பண்ணி, முதல் மூணு நாள் ஹவுஸ் ஃபுல் போட்டு பணம் பாத்துடறாங்க. அதனால ஓடும்னு நெனக்கிறேன்’ என்றார்.
விடாமல் ‘நாளைக்கு போயிருவீங்கல்ல?’ என்றார் மீண்டும்! நானும் விடாமல் ‘போனா சொல்றேன்!’
இனி…என் பார்வை!
’ஒரு நாள்’ முதல்வன் சாத்தியமாகும்போது, ’ஒரு நாள்’ கிங் மேக்கர் சாத்தியம்தானே?! – இவ்வளவுதான் சகுனி!
படத்தின் சுவாரஸ்யமே பாத்திரப் படைப்புகளும், தெரிவு செய்யப்பட்ட நடிகர்களும்தான், பேசப்படும் வசனங்களும்.
ப்ரகாஷ் ராஜ், ராதிகா, நாஸர், சித்ரா லட்சுமணன், மனோபாலா, கிரண், கோட்டா ராவ் என்று பார்த்துப் பார்த்துப் போட்டு, ரசிக்கும்படி செய்திருக்கிறார்கள். இவர்களோடு கார்த்தி/சந்தானம் செய்யும் அலம்பல்ஸில் தியேட்டர் அதிருகிறது.
கார்த்தியை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பையனைப் பார்த்த ஃபீலிங்ஸ். முக பாவனைகள் மட்டும் வைத்து மனிதர் செய்யும் அதகளம், அமர்க்களம்!

இந்த மாதிரி படத்துக்கு ஹீரோயின் தேவைதானா? ஸ்ரீதேவி என்றெல்லாம் பெயர் வைத்து, அம்மாவாக ரோஜாவைப் பிடித்து இருவரையும் ரொம்பவே வீணடித்திருக்கிறார்கள்.
ஜி வி ப்ரகாஷ் இசையாம்…பாடல்கள் ’நீங்கள் கேட்டவை’தான்… ’என்ன பாட்டாயிருக்கும்?’ என்று மரமண்டையைத் தட்டுவதற்குள் பாட்டை முடித்த பெருமை மட்டும் ஜி வி-க்கு!
டூயட் பாட்டுக்கள் எடுக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவை வியக்க வைக்கிறது. தெகிரியமாக தமிழக அரசியலைப் படம் பிடித்தமைக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
ரொம்ப கடுப்பாக இருக்கிறதா? ஜாலியான, மணக்க மணக்க மசாலா பதத்தில் ‘சகுனி’ ரெடி!
4 comments:
MOKKA PADATTUKKU IPPADIUM REVIEW ELUTHALAMA?
பதிவை விட முன்குறிப்பு பெருசா இருக்கே...
Padam semma mokkai boss...
ஆக மொத்தம் படத்தில் சொதப்புவது எப்படின்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்...
அது சரி, ஒரு நாள் முதல்வர் ஒரு நாள் கிங்மேக்கர் ன்னு மாத்தி மாத்தி மசாலாத்தான் விடிவுகாலம்னு ஆயிடுச்சு நல்ல கதை களமே இல்லையா... முழுசா அழகா சீனெல்லாம் சொல்லுவியே ஒண்ணுமே சொல்லலியே சொல்ற மாதிரி எதுவுமே இல்லையா
ஜேகே
Post a Comment