Saturday, July 14, 2012

பில்லா 2 – வருத்தப் பார்வை

அமரன் 1992-ல் ரிலீஸான படம்.  வைரமுத்து வரிகளில், ஆதித்யன் இசையில் பாட்டுக்கள் வெளியானவுடன் சூப்பர் ஹிட் ஆகிவிட, படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்திற்கு எகிறி விட்டது.  நடிகர் கார்த்திக் சொந்தக்குரலில் பாடிய ‘நான் வெத்தல போட்ட சோக்குல’ பாடலைப் பாடாத ஆள் கிடையாது. 


அமரன் அமர்க்களமாய் ரிலீஸானதோடு சரி.  மிதமிஞ்சிய வன்முறை, ஏமாற்றமளித்த திரைக்கதையில் கார்த்திக் தோல்விகளின் முதன்மையாய் அமைந்தது.

அதே கதிதான் இப்போது அஜீத்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது.  மூன்று நாட்களில் சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் வெளியிட்டுக் காசு பார்த்தாலும், அஜீத்குமாருக்கு மிக மோசமான படமாக பில்லா-2 கண்டிப்பாயிருக்கும்.

சலங்கை ஒலி படத்தில் சக்ரி ஃபோட்டோ ஷுட் எடுப்பதாய் காட்சி வரும்.  கமல்ஹாசன் வித விதமாய் அபிநயிக்க, க்ளிக்-கி கொண்டே போவார் சக்ரி.  படச்சுருளை புகைப்படமாய் மாற்றும்போதுதான் தெரிய வரும்.  ‘ஒன்று கூட சரியாய் வந்திருக்காது!’

சக்ரி இயக்கத்திலும் இப்படி நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்டம்.


-ஜி ஆர் ஷங்கருடன் சேர்ந்து எழுதியது

No comments: