ரா கி ரங்கராஜன் மறைந்து விட்டார் என்பதைப் படித்த போது மனது கனத்தது.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்? குமுதம் என்கிற பத்திரிகையைப் பிரபலப்படுத்தியதில் அவரது பங்கு நிறைய உண்டு.
என்னைப் போன்ற அரைகுறை ஆங்கில ஞானம் உள்ளவர்கள் அவர் எழுதிய ‘ஜெனிஃபர்’,...‘தாரகை’ படித்துத்தானே ஸிட்னி ஷெல்டனைப் புரிந்து கொண்டோம்?
கிருஷ்ணகுமார் என்கிற புனைபெயரில் எழுதிய ‘கோஸ்ட்’, ‘க்ரைம்’ அமானுஷ்யக் கதைகளை எப்படி மறக்க முடியும்?
ஆனந்த விகடனில் எழுதிய ‘நான், கிருஷ்ணதேவரயன்’ சரித்திரக் கதையின் புதுமையைப் படித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடுகளான அவரது ‘ஹாஸ்யக் கதைகள்’, ‘குடும்பக் கதைகள்’, ‘க்ரைம் கதைகள்’, ‘திக் திக் கதைகள்’ படித்துப் பாருங்கள். சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து போகும்.
‘எப்படி சிறுகதை எழுத வேண்டும்’ என்கிற புத்தகத்தையும், கோச்சிங் கிளாஸும் அவர் செய்திருக்கிறார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
3 comments:
ரா கி ரங்கராஜன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் !
இன்னொமொரு எழுத்தாளர் புத்தக வடிவில் மட்டும் இருப்பார் என்பது சற்றே மனதை கனக்கத்தான் வைக்கிறது...அவரின் ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்
பன்முக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் இரு கட்டுரைகள் இங்கே:
http://s-pasupathy.blogspot.ca/2012/08/1_19.html
http://s-pasupathy.blogspot.ca/2012/08/2_3701.html
Post a Comment