விஸ்வரூபம் / லட்டு தின்ன ஆசையா?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மீது எனக்கு கொஞ்சூண்டு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அது பாக்யராஜ் ‘இன்று போய் நாளை வா’ என்கிற படத்தின் அங்கீகரிக்கப்படாத திருட்டுக் காப்பி என்றவுடன் அதிர்ச்சியாகிவிட்டது.
திரையுலகில் கோலோச்சிய பாக்யராஜ அவர்களுக்கே இந்த கதி என்றால் புதுக் கதாசிரியர்களுக்கு?
மனசாட்சியே இல்லாமல் தயாரித்த இராம நாராயணன் (ஏற்கெனவே வீட்டுக்கு வீடு
படத்தை காப்பி அடித்தவர்), டைரக்டர் மணிகண்டன், வெளியிடும் ரெட் ஜெயிண்ட்-ஐ
என்னவென்று சொல்வது?
எனக்கு இந்த லட்டு தின்ன ஆசையில்லை...!
கமலின் விஸ்வரூபம் பதினைந்து நாட்கள் தள்ளிப் போய்விட்டதில் ரசிகர்களுக்கு வருத்தம்.
DTH-ல் வெளிவருமா என்கிற கேள்விக்கு மௌனம் காத்த கமலைக் கண்டவுடன், ஆயிரம் கொடுத்த ரசிகர்களின் ஒரே கேள்வி ‘பணம் திரும்ப வருமா?’
400 அரங்குகளுக்காக DTH உபயோகிப்பாளர்களைத் தூக்கிப் போட்ட கமலை என்னவென்று சொல்வது?
ஹீரோவாய் இருப்பவர் இந்நிகழ்வுகளில் ஜீரோவாய் மாறிப் போனது காலத்தின் கொடுமையடா!
No comments:
Post a Comment