Showing posts with label ஜி வி பிரகாஷ் குமார். Show all posts
Showing posts with label ஜி வி பிரகாஷ் குமார். Show all posts

Friday, October 21, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 29

ஆச்சி...வீக் எண்ட் வந்தாச்சி...சூப்பர் ஸாங்-கோட தொடங்குவோமே... பாட்டோட பெரீய பிளஸ் பாய்ன்ட் அனுஷ்காவோட உயரத்தை சூர்யா சாரோட உயரத்துக்கு மாட்ச் பண்ணதுதான்...இதேல்லாம் பாக்காம , அனுஷ்காவை மட்டும் பாத்துபோட்டு உங்க இதய துடிப்பு 'லப் டப்'னு எகிறிகிச்சின்னா நான் பொறுப்பில்லை...:-)


இந்தப் பாட்டை நம்ம 'வாலி' ஸார்தான் எழுதிருக்கார்னு ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சிது நம்ம தம்பி பா விஜய் தான் எழுதிருக்குதுன்னு... அடடா...என்ன லைன்ஸ்...லிரிக்ஸ் அப்டியே மீசிக்கோட நம்மள எங்கியோ கொண்டு போவுது...இந்தப் பாட்டுக்காகவே நம்ம விஜய் தம்பிய ஏத்துக்கலாம்னு தோணுது...நம்ம வீக் எண்டோட ரெண்டாவது சாங்...என்சாய் பண்ணுங்க...!


எல்லாருக்குமே பிடிச்ச பாட்டு...நம்ம 'தல'க்கும் 'த்ரிசா'வுக்கும் அப்படி ஒரு ஹிஸ்டரி, இல்லப்பா பிசிக்ஸ்..சேச்சே...எதோ ஒரு சப்ஜக்ட்..மென்மையான, ஆழமான வரிகளைக் கொண்ட பாடலை இரவில் விளக்கணைத்துக் கேட்டுப் பாருங்கள், முடிந்தவர்கள் கட்டிக் கொண்டு பாருங்கள்...அவ்வளவு இனிமை...ஒரு ஒத்துமை இருக்கு எனக்கும் பாட்டுக்கும் 'அக்கம் பக்கம் யாருமில்லை!' -

Friday, September 30, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 23

சமீபத்திய ஆச்சர்யம்...'மயக்கம் என்ன?' பாடல்கள்...

மாதிரிக்கு ஒன்று, வரிகளுடன்...

பாடல் 'என்னென்ன செய்தோம் இங்கு'
பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா
பாடலாசிரியர் நடிகர் தனுஷ்
இசை ஜி வி பிரகாஷ் குமார்

என்னென்ன செய்தோம் இங்கு,
இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் ,
விதி என்னும் பேரிலே ..
காணாத துயரம் கண்ணிலே ..
ஓயாத சலனம் நெஞ்சிலே...

இறைவா, சில நேரம் எண்ணியது உண்டு..
உன்னை தேடி வந்ததும் உண்டு...
சன்னதியில் சலனம் வெல்லுமா ..?
இறைவா ..!

அன்பான புன்னகை செய்வாய்...
அழகான பார்வையில் கொல்வாய்...
நீ என்பது நான் அல்லவா?
விடை சொல்கிறாய்...

கல்லாக இருப்பவன் நீயா?
கண்ணீரை துடைப்பவன் பொய்யா?
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்...!

வாழ்கையின் பொருள்தான் என்ன?
வாழ்த்துதான் பாத்தால் என்ன?
கதை சொல்கிறாய்,
பயம் கொல்கிறாய்...

காலை சூரியனின் ஆதிக்கமா ..?
பாடும் பறவைகளும் போதிக்குமா?
காலை சூரியனின் ஆதிக்கமா ..?
பாடும் பறவைகளும் போதிக்குமா?

உனது அரசாங்கம் பெரும் காடு,
உலகம் அதிலே ஒரு சிறு கூடு,
உன்னை அணைத்துக்கொண்டு,
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்!

இறைவா, சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா..?
இறைவா ..!

உள்ளிருக்கும் உன்னை தேடி ,
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா, நீ கடல் அலையா?

மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்,
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் ..
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்,
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் ..

என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம் .
கண்ணை பார்க்க வைத்த, கல்லை பேச வைத்த,
பெருந்தாயின் கருணை மறக்கிறோம் ..!

இறைவா, சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா ..?
இறைவா ..!

அன்பான புன்னைகை செய்வாய்,
அழகான பார்வையில் கொல்வாய்,
நீ என்பது நான் அல்லவா ..
விடை சொல்கிறாய்!

கல்லாக இருப்பவன் நீயா?
கண்ணீரை துடைப்பவன் பொய்யா?
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்....!

கடோசி 1


இந்தப் படத்தின் மூன்று பாடல்களை தனுஷ் அவர்களும், இரணடு பாடல்கள் செல்வராகவன் அவர்களும் எழுதியிருப்பதாகத் தகவல். எல்லாமே வித்தியாசமாயும், சுவாரஸ்யமாயும் இருப்பது வியப்பு. மாதிரிக்கு இந்த 'பிட்டு' பாட்ட கேளுங்க...தானா சிரிப்பு வரும்...!

ஓட ஓட ஓட தூரம் கொறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல!

ப்ரீயா சுத்தும்போது பிகரு இல்லையே...
புடிச்ச பிகரும் இப்போ ப்ரீயா இல்லையே!

....

உலகமே ஸ்பீடா ஓடி போகுது...
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது!
மொக்க பீஸ்’சு கூட கிண்டல் பண்ணுது..!
சாமி என்ன பங்கம் பண்ணுது..!

கஸ்தூரிராசா செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்!