Showing posts with label ஏ ஆர் ரெஹ்மான். Show all posts
Showing posts with label ஏ ஆர் ரெஹ்மான். Show all posts

Friday, October 21, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 29

ஆச்சி...வீக் எண்ட் வந்தாச்சி...சூப்பர் ஸாங்-கோட தொடங்குவோமே... பாட்டோட பெரீய பிளஸ் பாய்ன்ட் அனுஷ்காவோட உயரத்தை சூர்யா சாரோட உயரத்துக்கு மாட்ச் பண்ணதுதான்...இதேல்லாம் பாக்காம , அனுஷ்காவை மட்டும் பாத்துபோட்டு உங்க இதய துடிப்பு 'லப் டப்'னு எகிறிகிச்சின்னா நான் பொறுப்பில்லை...:-)


இந்தப் பாட்டை நம்ம 'வாலி' ஸார்தான் எழுதிருக்கார்னு ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சிது நம்ம தம்பி பா விஜய் தான் எழுதிருக்குதுன்னு... அடடா...என்ன லைன்ஸ்...லிரிக்ஸ் அப்டியே மீசிக்கோட நம்மள எங்கியோ கொண்டு போவுது...இந்தப் பாட்டுக்காகவே நம்ம விஜய் தம்பிய ஏத்துக்கலாம்னு தோணுது...நம்ம வீக் எண்டோட ரெண்டாவது சாங்...என்சாய் பண்ணுங்க...!


எல்லாருக்குமே பிடிச்ச பாட்டு...நம்ம 'தல'க்கும் 'த்ரிசா'வுக்கும் அப்படி ஒரு ஹிஸ்டரி, இல்லப்பா பிசிக்ஸ்..சேச்சே...எதோ ஒரு சப்ஜக்ட்..மென்மையான, ஆழமான வரிகளைக் கொண்ட பாடலை இரவில் விளக்கணைத்துக் கேட்டுப் பாருங்கள், முடிந்தவர்கள் கட்டிக் கொண்டு பாருங்கள்...அவ்வளவு இனிமை...ஒரு ஒத்துமை இருக்கு எனக்கும் பாட்டுக்கும் 'அக்கம் பக்கம் யாருமில்லை!' -

Saturday, August 20, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 14

நண்பர் திரு தியாகராஜன் அவர்களோடு பேசும்பொழுது, காஃபி பற்றிய பேச்சு எழுந்தது. 'நான் லியோ காஃபி-தான் குடிப்பேனாக்கும்' என்றார்! 'அடடா...!" என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். லியோ-வும் நரசுஸ்-ம் நம்மை ஆண்ட காலத்தை மறக்க முடியுமா?

தமிழை உலகம் முழுதும் அறிய வைத்த 'காலத்தை வென்ற ரசனை இதுவே' ரஹ்மானை யாரால் மறக்க இயலும்? லியோ காஃபியின் விளம்பரங்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம்!


இன்று இதைப் பார்க்கும்போது இவர் என்ன நினைத்துக் கொள்வார்? 'எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்?!' அட! நம்ம அர்விந்த் சாமிங்கோ அம்மணி!


என்னதான் வருடங்கள் உருண்டாலும் அதே பின்னணியில் இன்றைய 'காலத்தை வென்ற ரசனை'யைப் பாருங்கள்!




'பேஷ்! பேஷ்! காஃபி-னா அது நரசுஸ் காஃபிதான்...பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லாருக்கே' என்று சம்பந்தி உசிலைமணி ஆடியதை மறக்கத்தான் முடியுமா? (எழுத மறந்துட்டேனே, மறந்துட்டேனே!)


'பேஷ்..பேஷ்'-ஐத் தூக்கிச் சாப்பிடுவது போல வந்தது 'தேங்காய்' சுனாமி. பிராமணத் தம்பதிகளாய்த் தேங்காய் மற்றும் மனோரமா. விடுவாரா தேங்காய்?! இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு உங்களால் சிரிப்பை அடக்க முடியவே முடியாது!


இதே 'நரசுஸ்' நிறுவனத்தின் இன்றைய விளம்பரத்தைப் பார்க்கும்போது....அடடா...எல்லாம் மாறினாலும் 'பேஷ்..பேஷ்' மட்டும் அப்படியே!