Showing posts with label டுடே’ஸ் ஸ்பெஷல். Show all posts
Showing posts with label டுடே’ஸ் ஸ்பெஷல். Show all posts

Sunday, August 19, 2012

பரதேசி டைரிக் குறிப்பு - 38

சிவாஜி அவர்கள் தயாரிச்சு, நடிச்ச ’ஆனந்தக் கண்ணீர்’ படத்துக்குக் ‘கண்ணீர்’னு பேர் வெச்சிருக்கலாம்...







‘ஆனந்தமே’ இல்லாத படம்...ட்ராமாவை அப்டியே உருவி படமாக்கிருப்பாங்க போல... ஒரு அழுவாச்சி காவியம்...



படத்தோட ஆனந்தமே ‘கல்யாணராமன்’ காரெக்டர்ல வ...ர்ற சிவாஜி மாமாவும், மடிசார் கட்டிண்டு மனசை கவ்விண்டு போற எளமை லட்சுமி மாமிதான்.



அதுவும் சிவாஜி மாமாவோட எக்ஸ்ப்ரஷன்ஸ், உடல் அசைவுகள், வசன உச்சரிப்புகள், ஒப்பனை செம ரகளை. அப்பப்போ பஞ்சகச்சம், போரடிச்சா வேட்டிக் கட்டிக்கும் கல்யாண ராம சிவாஜி மாமா சூப்பர்!



மிடில் கிளாஸ், ஜாயிண்ட் ஃபேமலியைப் பிரிக்கும் முதல் மருமகள், ஜாதி மாறி கிறித்துவப் பெண்ணை கைபிடிக்கும் இரண்டாவது மகன், வரதட்சிணை கேட்டு நெருக்கும் சம்பந்தி (மகள்)...எனக் கதை ஏகத்துக்கும் மெலோடிராமா. எல்லாரும் கடோசியா திருந்திடறா...அடடா!



ஆனா, அந்தக்காலத்துல இப்படி நடந்திருக்க சாத்தியம் அதிகம்!





போன சனிக்கிழமை அன்னிக்கு எதுவுமே ஓடாம, நெட் ஃப்ளிக்ஸை நோண்டிண்டு இருந்தேன்.




இந்தப் படம் பாக்கலாமா, அந்தப்படம் பாக்கலாமான்னு ஓட்டம். கடோசியா பொறுமை இழந்த ரூமி ‘இதைப் பாக்கலாம்’னான்.



அப்படிப் பாத்து கட்டிப்போட்ட படம்தான் ‘டுடேஸ் ஸ்பெஷல்’.

...

நியூயார்க் நகரின் ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை பார்க்கும் ஸமீர் வேலையிலிருந்து நீக்கப்பட, தந்தையின் ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் ஓட்டலை நிர்வகிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட,

அக்பருடையதான அவனது சந்திப்பு, வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. நடுவில் தென்றலாய் ‘குழந்தை’யுடன் அவனுடைய ஆங்கிலேயக் காதலி கேர்ரி. ஒன்றரை மணி நேரம் மனம் ஒன்றிப் போகிறது.



அக்பராக நஸ்ருதீன் ஷா. செம ஆட்டம் போடுகிறார். மசாலா தயார் செய்யும் நேர்த்தி என்ன, மசாலாவுடன் பொருத்தும் பேர்கள் என்ன, ஸமீருடைய தாயாரிடம் பழகும் விதம் என்ன...என அவ்வளவு என்ன என்ன போடலாம்...அட்டஹாச நடிப்பு...



நாயகன் ஆஸீஃப் மாண்ட்வி நடிப்பு இயல்பு. கேர்ரியாக வரும் நாயகி ஜெஸ் வெக்ஸ்லர்..அடடா! என்ன அழகு?!



இவர்கள் தவிர படத்தில் உலாவும் ஒவ்வொரு பாத்திரத் தேர்வும், நடிப்பும் உயர்தரம்.



நியூயார்க் என மனதிற்கு ரொம்பவும் பிடித்த நகரம். நகரத்தினூடே பயணிக்கும் திரைக்கதை அபாரம்.



இந்தப் படத்தை அனைவரும் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன்.