Showing posts with label பரதேசி. Show all posts
Showing posts with label பரதேசி. Show all posts

Monday, May 23, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு -2

சமீபத்தில் நான் பார்த்த இரு படங்களைப் பற்றி....

மனக்கணக்கு (1986)

விஜயகாந்த்/கமலஹாசன் இணைந்து நடித்த படம் என்பதால் பார்த்த படம். ஆனால், ரெண்டு பேருமே இண்டர்வெல்லுக்கு அப்பாலதான் எண்ட்ரி!

ஆர் சி சக்தி இயக்கத்தில் உருவான படத்தின் முதல் பாதி 'ஆஹா'! பின் பாதியின் முதல் அரை மணி 'ஓஹோ'! அப்புறம் 'சொத்தைக் கடலையை'ச் சாப்பிட்ட ஃபீலிங்! இருந்தும், கதை நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் போலத்தான் இருக்கிறது.

படிப்பு / காதல் / விவாகரத்து/ விட்டுக்கொடுத்தல் / கணவன் - மனைவி உறவு என காட்சிகள் எல்லாமே இயல்பு எனப் பாராட்ட நினைத்தால்...ஸாரி! கடைசி அரை மணி நேரத்தில் எல்லாமே தலைகீழ். இயக்குநருக்கு யார் மேல் என்ன கோபமோ, இப்படி எடுத்தால் எடுபடாதோ என்கிற சந்தேகமோ, சத்தியமாகத் தெரியவில்லை...! அந்த அரைமணியில் படம் பப்படம்!

முதல் பாதியில் நம் மனதை அள்ளி எடுப்பவர்கள் ராஜேஷ்/ராதா/செந்தாமரைதான். ராதா என்கிற கதாநாயகி படம் முழுதும் உடுத்தும் உடை/முகபாவனை/நடிப்பு அசத்தல். கூடவே ராஜேஷ். கூடவே அம்பிகா. கூடவே விஜயகாந்த் (அட நம்புங்க, பாஸ”!). கமல்ஹாசனின் காமெடி படத்தின் ஹைலைட். ஒரு இயக்குநர் படும் அவஸ்தையை அட்டஹாசமாய் ஹைலைட் செய்திருப்பது கமல் 'பெசல்'!

மொத்தத்தில், முதல் பாதியில் இயக்குநர் 'bold', பின் பாதியிலோ 'clean bowled'!


அடுக்குமல்லி (1979)

கே எஸ் ஜி என்கிற குடும்ப இயக்குநர் எடுத்த படம்.

நாடகம் பார்க்கிற உணர்வு படம் நெடுகத் தெரிந்தாலும், platonic relationship என்கிற உறவை மிக மேன்மையாகக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது.

குடும்பத் தலைவியாக, மனைவியாக, விதவையாக என அடித்தது சான்ஸ் சுஜாதாவிற்கு! விடுவாரா, அதகளம் செய்திருக்கிறார். அதுவும் விதவையாக மனதில் மட்டும் துக்கத்தை வைத்துக்கொண்டு, இயல்பாய் நடமாடுகிறாரே, அது டாப் க்ளாஸ்! (எப்படியெல்லாம் பெண்களுக்குத் திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அந்தக் காலத்தில்! நிம்பவே ஆச்சரியம்!).

குடும்ப நண்பராக வந்து, குடும்பத்தில் ஒருவராய் மாறி, தலைவன் மறைந்த பின் தாங்குவதாய் அமைந்த தேங்காய் žனிவாசன் பாத்திரம் படத்தின் ஹைலைட். நகைச்சுவை நடிகரை, குணச்சித்திரமாக்கி உலா வைத்திருப்பது சில இடங்களில் 'ரிஸ்க்' பல இடங்களில் 'ரஸ்க்'! (டேங்ஸ”, வடிவேலு!) விஜயகுமார்/மகேந்திரன் நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது.

வெற்றிடத்தை நிரப்ப பல பாடல்கள் இருந்தாலும் வாணி ஜெயராமின் தேன் குரலில் ஒலிக்கும் 'ஆயிரம் ஆண்டுகள்' பாடல் க்ளாஸ்! அண்ணா! பாட்டு எழுதியது யாருங்கோ?!

சில காட்சிகள் செயற்கையாய் அமைந்திருந்தாலும், ஒரு நல்ல குடும்பத்தைப் பார்த்த திருப்தி, இந்தப் படத்தைப் பார்த்தால் வரும்!

Monday, April 25, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு -1

தாய்நாடு விட்டுச் செல்லும் அனைத்து அன்பர்களும் 'பர தேசி' வகைகளைச் சார்ந்தவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. அந்த வகையில் என்னுடைய பதிவுகள் அனைத்தும் இனி 'டைரிக் குறிப்பு'-ல் பதிவாகும்.

நம்மாளுங்க இந்தியாவை விட்டு அமெரிக்காவுல கால வெச்சவுடனே மொத மொதல்ல தேடுறது நிச்சயம் இதுல ஏதாச்சும் ஒண்ணா / இல்ல எல்லாமா இருக்கும்.

1. இந்தியன் ஸ்டோர்ஸ்
2. கிரிக்கெட் லைவ்
3. மூவி டவுன்லோட்
4. இஷ்மார்ட் டீல்ஸ்

முக்கியமான மேட்டர் 'காரு'- விட்டுப்போட்டேன் நெனக்காதீங்க அப்பு! அது உடனே வாங்கிடுவாங்க டோய்!

விஸ்கான்ஸ’ன் - பிவாக்கி ஹ’ந்து கோயிலில் அலுவலக நண்பர்களுடன்

ஸ’ங்களா இருந்தாங்கட்டி ப்ராப்ளம்தான் - வீக் டேய்ஸ் ஓடிப்போயிரும், வீக் எண்ட் வரும் பாரு, அப்போதான் 'போரு' வந்து 'சர்-சர்'னு அடிச்சுட்டுப் போய்கிட்டேயிருக்கும். அதுக்குத்தான் மூவி டவுன்லோட்..அதாம்பா இணையதள இறக்கம்! இந்தியாவுல 'திருட்டு சிடி'ன்னா இங்க...'இறக்கம்' -அப்பப்பா! இதுக்குத்தான் கீது மவுசு!

'ராங்கு/ரைட்டு'னு பாக்காம அப்படி 'இறக்கி' பாப்பானுங்க பாரு...அடடா! நானும் அப்படி பாத்த சொகத்துல சொல்லுதேன்...'லார்ஜ்'-ல கூட இவ்வளவு கிக்கு வராது ஸாமி!

அப்படி பாத்த படம்தான் 'கோ'...

ஜ“வா, கிருத்திகா (ராதா பொண்ணாமே?!), அஜ்மல், பிரகாஷ்ராஜ், கோட்டி நடிச்சு, சுபா கதை எழுதி, கே வி ஆனந்த் 'டைரக்ட்' பண்ண படம்.

கதை? - மெனக்கிடாம 'அண்ணாசாலை'யில் 'அரை விலை'க்கு ஸேல்-ஆவும் க்ரைம் நாவல்ஸை ஜோடிச்சு 'பூ' வெச்சு எடுத்திருக்காக!


படம் எடுக்குற போட்டாகிராபரு ஜ“வன், அரசியல் பாக்கும் வாதிஸ் ப்ரகாஷ்ராஜ்/கோட்டி, நடுவுல நாட்டைத் திருத்த 'ஷாப்' ஓப்பன் பண்ணும் அஜ்மல், தொட்டுக்க 'கிருத்திகா', விட்டுக்க ' பியா' என நட்சத்திரங்களை அள்ளித் தெளிச்சிருக்காங்கப்பூ!

'அயன்' தந்த எதிர்பார்ப்புல படத்தைப் பாக்க உக்காந்தா' -மொத ஸ“ன்லியே வெக்குறாங்க ஆப்பு! இந்த அளவுக்கு ஸ’ல்லியா ஒரு பாங்க் ராபெரிய நடத்த முடியுமா?! ஹ“ரோவாச்சா, அகஸ்மாத்தா (மெய்யாலும்பா!) அங்க வர்றாராம், போட்டோ புடிக்குறாராம், போலீஸ”ல மாட்டிக் குடுக்குறாராம்...அடேங்கப்பா!

இப்டியே போவுற கதையை க்ளைமாக்ஸ்-ஐ மட்டும் வெட்டிப்போட்டு, ஒரு பத்து மினிட் (அப்ப ஒரு இன்ட்ரெஸ்டிங் ட்விஸ்ட் கீது!) முன்னாடியே முடிச்சிருந்தாங்க்ன்னு வையேன் - படம் கொஞ்சமாவது ஒயுங்கா இருந்திருக்கும்!

இதே போல, டைரடக்கரு இன்னொரு டுவிஸ்டுக்காக ரொம்ப பெரிய காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிதா கீது...அத்தோட அபத்தமும் படம் பாத்தா உங்களுக்குத் தெரியும்!



ஒரு உண்மையையும் சொல்லிப்போடணும்...அப்பப்போ, 80-ஸ் தெலுகு டப்பிங் பாக்குற 'எஃபெக்ட்'-ம் இந்தப் படத்துல கெடைக்குது...ஸோ...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

ரெண்டு விஷயத்தைப் பாராட்டி ஆவணும்...பாட்டுங்க எல்லாம் ஸ•ப்பரா போட்டு, நல்லா எடுத்திருக்காக...(மொத பாட்டுல மட்டும் 'அயன்' கடோசிப் பாட்டு சாயல் தெரியுது!) அதே போல காமிராமேனும் நல்லா வேல பாத்திருக்காரு!

மூணு பேரால படம் புட்டுக்க சான்ஸ’ருக்கு...கே வி ஆனந்த், சுரேஷ்-பாலா (சுபா!)...கதை, திரைக்கதை, வசன-த்துல ரொம்ப நல்லாவே சொதப்பியிருக்காங்க!

நாலு பேரு நல்லா நடிச்சிருக்காங்க...அஜ்மல், பிரகாஷ்ராஜ், ஸோனா ஹைதென் மற்றும் பியா! அதுவும் அந்த 'தேர்தல் பிரச்சாரம்' ஸ“ன்ல வூடு கட்டி அடிக்கிறாங்க ஸோனா!; அதே போல 'மேக்கப்' ஸ“ன்ல மின்னுது பியா அம்மணி!

நம்ம நண்பரு ஒத்தரு ஃபேஸ்புக்-ல மெஸேஜ் வுட்டாரு 'KO' - OK!' - ஆனா, என்னிய கேட்டீங்கன்னா 'கோ' - 'கோட்ட வுட்ட ஆனந்த்!'

அம்புட்டுதேன், வுடு ஜூட்!


பின் குறிப்பு:

1. ஆக்ஸ’டெண்ட் (கன்னடம், 1985) - இந்தப் படத்தை அனைவரும் பார்க்க சிபாரிசு செய்கிறேன். கன்னட ஸ’னிமா எவ்வள்வு ஆரோக்கியமாய் இருந்தது என பார்த்தபின் அனைவருக்கும் தெரியும். பெங்களூரை விரிவாயும், அழகாயும், மூர்க்கமாயும் காட்டும் ஆக்ஸ’டெண்ட் விருதுகளைக் குவித்த படம். ஷங்கர் நாக் எனும் கலைஞன் இயக்கிய சிறந்த படங்களின் ஒன்று. இவர் 36 வயதில் விபத்தில் மறைந்தது கன்னட ஸ’னிமாவின் துர்பாக்கியம்.


2. 'கோ' பார்க்கும்போது எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் 'பதவிக்காக' நாவல் நினைவுக்கு வந்தது. அதையும் படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன். 'கோ'வைக் கொண்டாடும் கோமான்கள் யோசிப்பார்களாக!

கிடைக்குமிடம் - பதவிக்காக, சுஜாதா, விலை ரூ 200 (இந்தியாவில் மட்டும்), உயிர்மை பதிப்பகம், www.uyirmmai.com