Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts

Tuesday, October 11, 2011

அமித்ஜி!

அமித்ஜி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!


தங்களின் குரல் வளம் அடடா...வார்த்தைகளில் வருணிக்க இயலாதது...! தங்களுடைய முத்திரை வசனங்கள் சிலவற்றின் தொகுப்பு.


என்னதான் நீங்கள் அம்மணியோடு 'அழுகுணி' ஆட்டம் ஆடினாலும், 'அமித்ஜி' என்பதால் மன்னித்து, ஏற்றுக்கொண்டு ரசிக்கவும் முடிகிறது...!


தங்களுக்கு நீண்ட ஆயளைத் தந்து, தேக ஆரோக்யத்தைத் தந்து, எங்களை என்றென்றும் மகிழ்விக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

கடோசி - 1

Budda hoga tera baap - அமித்ஜி நடித்து, தெலுகு இயக்குனர் பூரி ஜகன்னாத் (போக்கிரி புகழ்) அவர்கள் இயக்கிய படம். கதைதான் கொஞ்சம் வித்தியாசம்(?!) - 'எதிரிகளிடமிருந்து' காப்பாற்றுவது, 'ஹேமமாலினி' மற்றும் 'சைடில் ரவீணா டாண்டன்' ஜோடி, காதலைச் சேர்த்து வைப்பது, எதிரிகளைத் துவம்சம் செய்வது - என எண்பதுகளின் மசாலா அத்தனையும் மகனாகச் செய்ததை, பத்துகளில் அப்பாவாக அமித்ஜி செய்யும் 'அதகளம்' ! இரணடு மணி நேர டைம் பாஸ்! மூளையைக் கழற்றி விட்டுப் பார்த்தால் satisfaction guaranteed!

Friday, June 04, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ் பி பி சார்!


பாடல்களுக்காக ராஜ் ம்யூசிக்ஸ்-ஐத் திருப்பிய போது தெரியவந்தது 'திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள்'!

மிகக் கடினமாய்த் தேர்ந்தெடுத்த எனக்குப் பிடித்த 'தனித்துப் பாடிய' பாடல்கள் இதோ! (இது தொடரலாம்!)

எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும் (எம் எஸ் வி)
வான்நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம் (எம் எஸ் வி)

படைத்தானே பிரம்மதேவன் - எல்லாரும் நல்லவரே (வி குமார்)

இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை (இளையராஜா)
இது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)
மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே (இளையராஜா)
கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள் (இளையராஜா)

ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (ஏ ஆர் ஆர்)
தங்கத் தாமரை மலரே - மின்சார கனவு (ஏ ஆர் ஆர்)

உன்னைப் பார்த்தபின்பு நான் - காதல் மன்னன் (பரத்வாஜ்)