Showing posts with label பில்லா-2. Show all posts
Showing posts with label பில்லா-2. Show all posts

Sunday, October 21, 2012

மாற்றான் - பார்வை 2

இனி மாற்றான் பற்றிய பார்வை.. (முதலாவதை விட்டாலும், படிக்கலாம்!)
 
 

Saturday, July 14, 2012

பில்லா 2 – வருத்தப் பார்வை

அமரன் 1992-ல் ரிலீஸான படம்.  வைரமுத்து வரிகளில், ஆதித்யன் இசையில் பாட்டுக்கள் வெளியானவுடன் சூப்பர் ஹிட் ஆகிவிட, படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்திற்கு எகிறி விட்டது.  நடிகர் கார்த்திக் சொந்தக்குரலில் பாடிய ‘நான் வெத்தல போட்ட சோக்குல’ பாடலைப் பாடாத ஆள் கிடையாது. 


அமரன் அமர்க்களமாய் ரிலீஸானதோடு சரி.  மிதமிஞ்சிய வன்முறை, ஏமாற்றமளித்த திரைக்கதையில் கார்த்திக் தோல்விகளின் முதன்மையாய் அமைந்தது.

அதே கதிதான் இப்போது அஜீத்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது.  மூன்று நாட்களில் சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் வெளியிட்டுக் காசு பார்த்தாலும், அஜீத்குமாருக்கு மிக மோசமான படமாக பில்லா-2 கண்டிப்பாயிருக்கும்.

சலங்கை ஒலி படத்தில் சக்ரி ஃபோட்டோ ஷுட் எடுப்பதாய் காட்சி வரும்.  கமல்ஹாசன் வித விதமாய் அபிநயிக்க, க்ளிக்-கி கொண்டே போவார் சக்ரி.  படச்சுருளை புகைப்படமாய் மாற்றும்போதுதான் தெரிய வரும்.  ‘ஒன்று கூட சரியாய் வந்திருக்காது!’

சக்ரி இயக்கத்திலும் இப்படி நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்டம்.


-ஜி ஆர் ஷங்கருடன் சேர்ந்து எழுதியது

பில்லா 2 – இரண்டாம் பார்வை

ஹாலிவுட் படங்களில் வகைகள் (genre) உண்டு. 


காதல்/காமெடி/ஆக்‌ஷன்/ஹாரர் போன்ற படங்கள் genre-லிருந்து இம்மியும் பிசகாது நேர்க்கோடாய் எடுத்து, நம்மை சுவாரஸ்யத்துடன் பார்க்க வைத்துவிடுவார்கள்.


இந்திய சினிமாக்கள் அப்படியல்ல.  எல்லாவற்றையும் கலந்து, உட்டாலக்கடி உருண்டையாய் நம் கையில் கொடுத்துப் பார்க்க வைப்பார்கள். அப்படிப் பார்த்துச் சுவைப்பது நமக்குப் பழக்கமாய்ப் போய்விட்டது.


விதிவிலக்காக ‘நான் ஈ’ போன்ற படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. 


சிலர் genre நினைத்துக்கொண்டு நம் பொறுமையை நிறையவே சோதிப்பார்கள்.  அந்த வகையைச் சேர்ந்த படம்தான் பில்லா-2.


-ஜி ஆர் ஷங்கருடன் சேர்ந்து எழுதியது

Friday, July 13, 2012

பில்லா 2 – முதல் பார்வை

அஜித்குமார் அவர்களின் பில்லா-2 படத்தைக் கணிக்குமுன் அவரது முந்தைய படங்களைப் பற்றிய சிறு முன்னோட்டம்

பில்லா (2007) – ஒரிஜினல் பில்லாவின் நகல்.  உயர்தர ஒளிப்பதிவிலும், வித்தியாசக் காட்சி அமைப்பிலும், நயனதாரா / நமீதா கவர்ச்சியிலும், அஜீத்தை வித்தியாசமாய்க் காண்பித்த படம்.

அசல் (2010) – பில்லா பாதிப்பில் அப்பா-பையன் டான்.  படம் வந்ததும், பெட்டிக்குள் போனதும் தெரியாது.

 

மங்காத்தா (2011) – இன்ஸ்பெக்டராகக் கல்லா கட்டினாலும், எப்பவுமே கெட்டவர்தான்.
பில்லா-2 (2012) – அதே வரிசையில்!

மக்கள் தாங்குவார்களா?

-ஜி ஆர் ஷங்கருடன் சேர்ந்து எழுதியது