
அமரன் அமர்க்களமாய் ரிலீஸானதோடு சரி. மிதமிஞ்சிய வன்முறை, ஏமாற்றமளித்த திரைக்கதையில்
கார்த்திக் தோல்விகளின் முதன்மையாய் அமைந்தது.
அதே கதிதான் இப்போது
அஜீத்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. மூன்று
நாட்களில் சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் வெளியிட்டுக் காசு பார்த்தாலும், அஜீத்குமாருக்கு
மிக மோசமான படமாக பில்லா-2 கண்டிப்பாயிருக்கும்.
சலங்கை ஒலி படத்தில்
சக்ரி ஃபோட்டோ ஷுட் எடுப்பதாய் காட்சி வரும்.
கமல்ஹாசன் வித விதமாய் அபிநயிக்க, க்ளிக்-கி கொண்டே போவார் சக்ரி. படச்சுருளை புகைப்படமாய் மாற்றும்போதுதான் தெரிய
வரும். ‘ஒன்று கூட சரியாய் வந்திருக்காது!’
சக்ரி இயக்கத்திலும் இப்படி நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்டம்.
-ஜி ஆர் ஷங்கருடன் சேர்ந்து எழுதியது
No comments:
Post a Comment