Showing posts with label மருதன். Show all posts
Showing posts with label மருதன். Show all posts

Sunday, December 02, 2012

டிசம்பர் இரண்டும், மூன்றும்...


300 அடி அகலத்தில் ஒரு கருமேகம் தொழிற்சாலையில் உருவாகியிருந்தது. அதன் எடை காற்றை விட இரு மடங்கு அதிகமாயிருந்தது. அந்த விஷ மேகத்துக்கு மேல் வேறு சில வாயுக்கள் பல அடுக்குகளில் திரண்டு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. போஸ்ஜீன் இருந்தது. . ஹைட்ரோ சயனேட் ஆசிட் இருந்தது. மோனோமெதிலமைன் இருநதது. பிறகு, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் அமோனியா, எம் ஐ சியைக் காட்டிலும் இந்த வாயுக்கள் எடை குறைவானவை என்பதால் முதலில் இவை பரவ ஆரம்பித்தன.

Photo: 300 அடி அகலத்தில் ஒரு கருமேகம் தொழிற்சாலையில் உருவாகியிருந்தது.  அதன் எடை காற்றை விட இரு மடங்கு அதிகமாயிருந்தது.  அந்த விஷ மேகத்துக்கு மேல் வேறு சில வாயுக்கள் பல அடுக்குகளில் திரண்டு வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  போஸ்ஜீன் இருந்தது. .  ஹைட்ரோசயனேட் ஆசிட் இருந்தது.  மோனோமெதிலமைன் இருநதது.  பிறகு, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் அமோனியா, எம் ஐ சியைக் காட்டிலும் இந்த வாயுக்கள் எடை குறைவானவை என்பதால் முதலில் இவை பரவ ஆரம்பித்தன.

முதலில் பரவியது அமோனியா.  முட்டைகோஸின் வாசமும் அப்போதுதான் வெட்டப்பட்ட பயிரின் வாசமும் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்தது.  பிறகு, மற்ற வாயுக்கள் தொடர்ந்தன.  குடிசைகளுக்கு வெளியே மயக் கம்பளம் போல் கரும்புகை பரவிக்கொண்டிருந்தது.  மூச்சுத் திணறலுக்குக்கூட அவகாசம் கொடுக்காமல் பலரை அமைதியாக்கியது இந்தக் கம்பளம்.

அலறுவதற்கும், அழுவதற்கும் ஒருவருக்கும் திராணி இல்லாமல் போய்விட்டது.  அமைதியாக விழுந்து இறந்தார்கள்.  இறந்து விழுபவர்களை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.  நுரையீரல் அடைத்துக்கொண்டது.  முகத்தில் இருந்து தெரித்து விழுந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க வகையில் விழிகள் பெருத்துப்போயின.

ஓடுவதற்கும், ஒளிவதற்கும், மறைவதற்கும், அழுவதற்கும், அலறுவதற்கும் முயற்சி செய்த பலருக்குக் கூடுதல் பிராணவாயு தேவைப்பட்டதால், அவர்களே முதலில் இறந்து போனார்கள்.  வலி மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகே குழந்தைகளையும் முதியவர்களையும் மரணம் தழுவிக்கொண்டது.  அசைவுகள் அதிகமின்றி முடங்கிக் கிடக்க முயன்றவர்களே உயிர் பிழைத்தார்கள்.  ஆனால், கண் முன்னால் பெற்றோரும் குழந்தைகளும் நண்பர்களும் துடிதுடித்து விழுந்து மடியும்போதும், அசைவுகளின்றி முடங்கிக் கிடப்பது சாத்தியமா?

1984 - டிசம்பர் 2 நள்ளிரவு, 3 அதிகாலை - லட்சக் கணக்கான மக்களோடு சேர்த்து நீதியும் மெதில் ஐசோ சயனேட்டைச் சுவாசித்து, மூச்சுத் திண்றி இறந்து விட்டது.  

ஜூன் 7, 2010 அன்று வெளியான ‘கண் துடைப்பு’ தீர்ப்பு, வாரன் ஆண்டர்சனைத் தீண்டவில்லை.  கேஷுப் மஹிந்த்ரா உள்ளிட்ட இந்தியக் குற்றவாளிகளைத் தீண்டவில்லை.  யுசிசி அமெரிக்கா, யுசிஐஎல் இந்தியா இரண்டையும் தீண்டவில்லை. 


கிழக்கு வெளியீடான, மருதன் அவர்கள் எழுதிய‘போபால், அழிவின் அரசியல்’ புத்தகத்தின் சில துளிகளைத்தான் இதுவரை படித்தோம்.  மனதைப் பிசையும் மனிதம், அதையும் விழுங்கும் அரசியல் இரண்டும் சிந்திக்கத் தூண்டுவன.


மரணித்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.  சமுதாயத்தைத் தூய்மையானதாக்க நம்மால் முடிந்த முயற்சிகளைத் தொடருவோம்.