Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts
Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts
Wednesday, January 02, 2013
எசமான் காலடி மண்ணெடுத்து...!
Labels:
உதயகுமார்,
என் சொக்கன்,
கிழக்கு பதிப்பகம்,
முத்தொள்ளாயிரம்,
வாலி
Sunday, December 02, 2012
டிசம்பர் இரண்டும், மூன்றும்...
300 அடி அகலத்தில் ஒரு கருமேகம் தொழிற்சாலையில் உருவாகியிருந்தது. அதன் எடை காற்றை விட இரு மடங்கு அதிகமாயிருந்தது. அந்த விஷ மேகத்துக்கு மேல் வேறு சில வாயுக்கள் பல அடுக்குகளில் திரண்டு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. போஸ்ஜீன் இருந்தது. . ஹைட்ரோ சயனேட் ஆசிட் இருந்தது. மோனோமெதிலமைன் இருநதது. பிறகு, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் அமோனியா, எம் ஐ சியைக் காட்டிலும் இந்த வாயுக்கள் எடை குறைவானவை என்பதால் முதலில் இவை பரவ ஆரம்பித்தன.
Friday, April 06, 2012
சஞ்சய் காந்தி!
இந்தத்
தலைமுறைக்குத் தெரியாத காந்தி. இந்தியாவை ரணகளம் செய்தவர். இந்திராவை அடக்கியாண்டவர்! எமர்ஜென்ஸி,
மிசா நாயகன்.
ஆர் முத்துக்குமார் அவர்கள் எழுத்தில், கிழக்கு பதிப்பக வெளியீட்டில் வந்த ‘சஞ்சய் காந்தி’ - மர்ம நாவலுக்கு நிகரான திகில் / கிலி / சுவாரஸ்யம்.
சஞ்சய் காந்தியின் 34 வருட வாழ்க்கை எத்துணை பேரை பதம் பார்த்தது, புரட்டிப் போட்டது – அட! ஒரு நாட்டின் சரித்திரத்தையே அல்லவா இருட்டில் வைத்து விட்டது?
தாயின்
வயிற்றிலிருந்து ’சஞ்சய்’ வெளி வருவதற்குள்
படுத்திய பாட்டில் துவங்குகிற வரலாறு, கடைசி வரை
விறுவிறு / சுறுசுறு.
படிப்பில் நாட்டமில்லை, நண்பர்களுடன் கூட்டு இல்லை, ’அம்மா! அம்மா!’ என்று தலைப்பைப் பிடித்தபடி சுற்றிய சஞ்சய் பின்னர் ‘அம்மா’வையே கைக்குள் போட்டுக்கொண்டது ’விதி’தான்.
ரோல்ஸ்ராய்ஸ்
இங்கிலாந்து தொழிற்கல்வி, மாருதி நிறுவனம் (இன்றைய
மாருதி உத்யோக்!), எமர்ஜென்ஸி, மிசா, வாசக்டெமி, இளைஞர்
காங்கிரஸ் என சஞ்சய் ‘தொட்ட’தெல்லாம் ‘ஆமை புகுந்த வீடு’தான். சும்மா
சொல்லக்கூடாது ‘மனிதர்’ புகுந்து விளையாடி,
பல பேரை மண்ணைக் கவ்வ
வைத்து, பீதியில் உறையச் செய்தது ‘முகமது
பின் துக்ளக்’-ஐ நினைவுக்குக் கொண்டு
வருகிறது!
பிரதமரின் மகன் என்கிற ஒரே அடையாள அட்டையை வைத்துக்கொண்டு 1972-ல் மாருதி நிறுவனம், வங்கிகள் மூலம் பெற்ற கடன் ரூ 7.5 மில்லியன். ரிசர்வ் வங்கி அவசர அவசரமாய் ‘இனி மாருதி நிறுவனத்திற்குக் கடன் கொடுக்க வேண்டாம்’ என்று சுற்றறிக்கை அனுப்பியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது படி, ‘கடன்’ கொடுக்காத அதிகாரி/வங்கிகளுக்கு எமர்ஜென்ஸி / மிசா-வில் ஆப்பு! 6000 ரூபாயில் காரைக் கொடுப்பேன் என்கிற உத்தரவாதம் காற்றில் பறந்து, 12000 ரூபாய் உயர்ந்து, ‘சாலை உருளை’ தயாரிப்பில் தேய்ந்ததைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
முடிசூடா
இளைஞர் காங்கிரஸ் அணித்தலைவராய் பிரகடனம், ஒரு ரூபாயில் காங்கிரஸ்
உறுப்பினர் அட்டை, பிடிக்காத காங்கிரஸ்
நிர்வாகிகளுடன் இளைஞர் காங்கிரஸ் நேரடி
மோதல் – இதற்கெல்லாம் வழக்கம்போல் ‘அன்னை’யின் ஆசி.
மேனகாவை கிட்டத்தட்ட ‘கவர்ந்து’ திருமணம் செய்திருப்பதை போகிற போக்கில் ஆசிரியர் சொல்வது ஓகே.
எமர்ஜென்ஸியில் கிட்டத்தட்ட கொடுங்கோல் ராஜ்ய அராஜகம்தான். மிசா சட்டத்தில், மிச்சம் வைக்காமல் எல்லோரையும் ‘உள்ளே’ வைத்து, பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து, ’துர்க்மான் கேட்’ குப்பத்தை ஜாலியன் வாலா பாக் ரேஞ்சில் நாசம் செய்த ‘சஞ்சய்’-ஐ பயத்துடன்தான் படிக்க வேண்டியிருக்கிறது.
வாசக்டெமி தமாஷ்தான் உச்சம். குடும்பக் கட்டுப்பாடு-க்கு ஒரே வழி வாசக்டெமி அறுவை சிகிச்சை என சஞ்சய் முடிவெடுத்து, டெல்லியில் துவங்கி, இந்தியா முழுவதும் தலைவர்களை கைக்குள் போட்டு ‘அதகளம்’ பண்ணியது – என்ன ஒரு யோசனை?!! – ‘அந்த’க் கால ஆண்பிள்ளைகள் நிலைமை கொஞ்சம் பரிதாபம்தான்
ஜனதா
ஆட்சியில், ஷா கமிஷனை எதிர்கொள்ள
முடியாமல் மாமனார், துணை நிலை ஆளுநரின்
கதைகளை முடித்த பெருமையும் சஞ்சய்க்கு
உண்டு. ஆட்சி
கவிழ்ந்து, காங்கிரஸ் வெற்றியில் ‘ஷா’ கமிஷன் வழக்குகளிலிருந்து
‘விடுபட்ட’ சாமர்த்தியம் (?!) முகஞ்சுளிக்க வைக்கிறது.
இந்திரா
இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ துவக்கும்போது ‘சஞ்சய்’
விமான விபத்தில் மரித்துப் போவது பரிதாபம்தான்.
(மகனைக் கட்டுப்படுத்த முடியாமல் ‘போட்டு விட்டார்’ என்கிற
பழி இந்திரா மேல் உண்டு.
அது ‘உண்மை’யாயிருக்கக் கூடும்
என ‘சஞ்சய் காந்தி’ படித்தபின்
தோன்றுகிறது! இது
என் கருத்துதான், ஆசிரியர் கருத்தல்ல!)
மனைவி
மேனகாவுக்கு வயது 24; மகன் வருண் மூன்று
மாதக் குழந்தை- இவர்களுக்காக
வருத்தப்படுவதை விட்டு, நாடு சஞ்சய் மரணத்தில் நிச்சயம் நிம்மதிப்
பெருமூச்சு விட்டிருக்கும்.
-சஞ்சய் காந்தி,
ஆர் முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ
100
Labels:
ஆர் முத்துக்குமார்,
கிழக்கு பதிப்பகம்,
சஞ்சய் காந்தி
Wednesday, April 04, 2012
பெரியசாமித் தேவர்!
கமலின்
தந்தை பெரியசாமித் தேவர் கேரக்டரில் சிவாஜி
கணேசனை நடிக்க வைப்பதில் சிக்கல்கள்
ஏற்பட்டன.
அக்னி
நட்சத்திரம், கிழக்கு வாசல் என்று
விஜயகுமார் எஸ். வி. ரங்காராவ்
ரேஞ்சுக்கு கம்பீரமும் உருக்கமும் காட்டி ‘புதிதாக’ நின்றார். அவருக்கும்
அதிக ஆதரவு இருந்தது. எஸ் எஸ் ராஜேந்திரன்
மண்ணின் மைந்தர். அவரும்
பரிசீலிக்கப்பட்டார்.
கமல், சிவாஜியை நாடிச் சென்றார். அவரது மேக்-அப் பாக்ஸில் தூசி படிந்திருந்தது. உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் விலகிப் போயிருந்தார்.
‘
பொள்ளாச்சி வரைக்கும்
அப்பாவால வர முடியும்னு தோணலை. ரெஸ்ட்ல
இருக்கார். டாக்டர்ஸ்
அட்வைஸ்படி விசிட்டர்ஸ்கூட குறைச்சிட்டேன். ஃபேன்ஸும்
வர வேண்டாம்னு சொல்லியாச்சி’ – ராம்குமார் நிலைமையைச் சுட்டிக் காட்டினார். கதையைக்
கூறி கணேசனை சம்மதிக்க வைத்துவிட
முடியும் என்று கமலுக்கு தோன்றியது.
கமல்
தேடி வந்ததில் சிவாஜிக்கு மகிழ்ச்சி. ‘சிவாஜி
என்கிற சிங்கத்துக்கு எல்லோரும் தயிர் சாதமே வைத்து
சாகடித்து விட்டார்கள்’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கும் கமல், கொண்டு
வந்திருந்த மதுரை ஸ்ரீ முனியாண்டி
விலாஸ் பிரியாணியைப் பரிமாறினார். கணேசன்
கவனமாகக் கேட்டார்.
‘அடடா! அப்படியா
கதை? ஃபஸ்ட் ஆஃப்ல விட்டுட்டு,
நீ செகண்ட் ஆஃப்ல ஸ்கோர்
அடிக்கப் பாக்குறியா? கெட்டிக்காரன்டா நீ! ’ செல்லமாக கமலைத்
தட்டிக் கொடுத்தார் சிவாஜி.
பொள்ளாச்சியில்
தேவர் மகன் ஷுட்டிங். திருவிழா போல நடைபெற்றது.
ம.வே.சிவகுமார் தேவர்
மகனுக்கு உதவி இயக்குநர். சிவாஜியைக் கண்டு யூனிட் திகைத்தது
‘சிவாஜி இத்தனை சிரமப்படறாரே!’
முதல்
காட்சி பஞ்சாயத்தில் நாசர், கணேசனை அவமானப்
படுத்தும் கட்டம். கணேசன்
மனம் உடைந்து கமலிடம் கோபமாகப்
பேசிக்கொண்டே வேகமாக நடக்க வேண்டிய
ஷாட்.
‘என்னமோ இதும்பாங்களே…எனக்கும் அப்படியொரு வேலை கொடு என்கிறார்ப்போல
வசனம் பேசி ‘மாவாட்டுவது’ மாதிரி
பாவனை காட்டி…ஒரே டேக்.
‘ஆக்ஷன்’ என்றதும் பெரியசாமி தேவர் பிரசன்னமாகி விட்டார். நடிப்பு அகராதியின் அனைத்துப் பக்கங்களும் தெரிந்தன. ம.வே.சிவகுமார் கண் கலங்க நின்றார். சகலரும் வாயடைத்துப் போயினர்.
‘டேய் கமலா
(கமல்ஹாசனை சிவாஜி அழைக்கும் விதம்)
நான் பண்ணுனா ஓவர் ஆக்டிங்
அப்படிம்பீங்க. நாலஞ்சி
விதமா செஞ்சிக் காட்டறேன். எது
வேணுமோ எடுத்துக்க.’
நாற்காலி
தேடினார்கள். பெரியசாமி
தேவர் அமரும் சிம்மாசனம் கிடைக்க
அல்லோலகல்லோலப் பட்டது சிங்காநல்லூர்.
ஏறக்குறைய முக்கால் மணி நேரப் பரபரப்பு. பிறகே
கணேசன் உட்கார்ந்தார். அவரைப்
போன்ற கம்பீரமானதொரு நாற்காலியில்.
மொத்தம்
ஏழு நாட்கள். கணேசன்
பெரியசாமித் தேவராக உலவினார்.
‘தேவர் மகனுடைய
வெற்றிக்கு அதனுடைய மண் வாசனையும்
காரணம். சின்னச்
சின்ன விஷயங்கள் இருக்கும். அப்பா,
பிள்ளையோட பேசற விதம் – இதெல்லாம்
வேரூன்றிப் போன விஷயம். யார் யார் எந்தத்
தொனியிலே, உச்சரிப்பிலே பேசணும்னு எனக்குத் தெரியும். நான்தான்
முடிவு பண்ணினேன். ஒரு
நிர்பந்தத்துல ஏழரை நாள்களில் கதையை
எழுதி, வசனமும் எழுதினேன்.’ – கமல்
தன் நேர்காணல்களில் கூறியவை.
-கமல், பா தீனதயாளன், கிழக்கு பதிப்பகம்
Labels:
கமல்,
கிழக்கு பதிப்பகம்,
சிவாஜி,
சும்மா,
பா தீனதயாளன்
Tuesday, April 03, 2012
அறியப்படாத அண்ணா ஹசாரே...
‘அண்ணா ஹசாரே’ பற்றி அண்ணா சந்திரமௌளீஸ்வரன் எழுதியதைத் தபாலில் வாங்கி, ஒரே மூச்சில் படித்து, முடித்து விட்டேன்.
‘சென்னை போகும்போது, புத்தகத்தை வாங்கி, அண்ணாவிடம் ஆட்டோகிராஃப் பெற்று, பின்னரே படிக்க வேண்டும் என்கிற முடிவில் மாற்றம் ஏற்படக் காரணம் ‘சென்னை’க்கான வாய்ப்பு நிகழாததுதான்.
88 பக்கங்களில் ஒரு ஆவணப் படம் பார்த்த உணர்வு எனக்கு.
சிறிய முன்னுரையில் துவங்கி, பதின்மூன்று அத்தியாயங்கள் ‘ஹசாரே’வைப் பற்றி புட்டு புட்டு வைக்கின்றன. பதினான்காம் அத்தியாயம் ஜன லோக்பால் பற்றி விரிவாகப் பேசுகிறது.
ஊழலின் விஸ்வரூபத்தில் முதல் அத்தியாயம் – 2 ஜி, காமன்வெல்த் ஆய்வு.
1965 இந்திய-பாகிஸ்தான் போரில் ஹசாரேவின் பங்கு கொண்ட இரண்டாம் அத்தியாயம்.
சமூகப் போராளியாய்த் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் ஹசாரேவின் மூன்றாம் அத்தியாயம். மண்டல்/ட்ரஸ்ட்/யோஜனா என ஹசாரே உறுப்பினராயிருக்கும் அமைப்புகளின் வெளியே தெரியாத முறைகேடுகள், ஹசாரேவின் மௌனம், ரொம்பவே ஆச்சரியம். காந்தியின் ”கணக்கு சீராக இல்லாவிட்டால், உண்மையை அதன் தூய்மையான பொருளில் பேண முடியாது” வார்த்தைகளை ஹசாரே கடைபிடித்ததாகத் தெரியவில்லை.
‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ பற்றி விரிவாய் எடுத்துரைக்கும் நான்காம் அத்தியாயம்.
’ஹசாரே குழு’ உறுப்பினர்களின் அறிமுகம் கொண்ட ஐந்தாம் அத்தியாயம்.
லோக்பால் சட்டத்தின் வரலாறு பதியும் ஆறாம் அத்தியாயம்.
இந்திய அரசியலமைப்பை மாற்றக்கூடிய சிக்கல் நிறைந்த ஜன லோக்பால் பற்றி ஆராயத் துவங்கும் ஏழாம் அத்தியாயம்.
ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பேசும் எட்டாம் அத்தியாயம். ஹசாரேவின் உண்ணாவிரதம் - ஊடக வியாபாரப் பசிக்குத் தீனி, இளைஞர்களின் வியப்பு, மக்களின் உணர்ச்சிகளோடு விளையாட்டு - என அழுத்தமாய் உணர வைக்கிறது.
அரசுத் தரப்பு/ஹசாரே தரப்புக் குழு உருவானது, அதன் கூட்டங்கள் கொண்ட ஒன்பதாம் அத்தியாயம். அரசியலமைப்பின் சட்டத்தோடு முரண்பட்டிருப்பதால் சட்டச்சிக்கல்கள், அரசின் இயலாமை, அரசு மீது ஹசாரே குழுவின் நம்பிக்கையின்மை / நடைமுறைச் சிக்கல்களை ஏற்றுக் கொள்ளாமை/ வலுவான வாதங்களை முன் வைக்கத் தெரியாமை பற்றிய விவரங்கள் உண்டு. ‘எத்தனை பணியாளர்கள் தேவைப்படுவார்கள்?’ என்கிற எளிய கேள்விக்குக் கூட ஹசாரே குழுவினரின் புள்ளி விவரங்கள் அடங்கிய பதில் இல்லை எனும்போது ஆயாசம்தான்.
ஹசாரேவின் இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம், பிரதமர் / ராஜ் தீப் சர்தேசாய் கடிதம், காந்தியடிகள் உண்ணாநோன்புடன் ஒப்பீடு, ஹசாரே கோரிக்கைகளோடு கூடிய பத்தாம் அத்தியாயம்.
ஊடகங்களின் பெரிதான பங்கு, புற உலகத்துடனான ஹசாரேவின் தொடர்பு, உணர்ச்சிக்குவியலான மக்கள் – இதற்கெல்லாம் மாறுபட்ட காந்தியடிகளின் (சுளுவான/போற்றத்தக்க) அணுகுமுறை எனப் பேசிப் போகும் பதினொன்றாம் அத்தியாயம்.
ஹசாரேவுக்குச் ‘செக்’ வைக்கும் பன்னிரெண்டாம் அத்தியாயம். எனக்குப் பிடித்த இரண்டு கேள்விகள் – 1. ஏன் அரசு ஜன் லோக்பாலை அப்படியே ஏற்கத் தயங்குகிறது? அரசுத் தரப்பில் முன் வைக்கும் சட்டச் சிக்கல்கள் என்னென்ன? அந்தச் சிக்கல்களை ஏன் அண்ணா ஹசாரேவால் களைய முடியவில்லை? – 2. அனைத்து ஊடகங்களையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அண்ணா ஹசாரே, அதே ஊடகங்களைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக மாறியிருக்கிறார்? காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒப்பீடு, ’அடேங்கப்பா!’
டீம் ஹசாரே ’நேர்மை’யைக் கேள்விக்குறியாக்கும் பதின்மூன்றாம் அத்தியாய ம். ஆசிரியர் வைக்கும் விமர்சனங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை.
அண்ணா ஹசாரே பற்றிய எனது கருத்துக்களுடன் ஒத்துப் போவதால் என்னால் ரொம்பவே ரசிக்க முடிந்த்து. காந்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஹசாரே எவ்வளவு அந்நியப்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்தது. (இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியத் தாத்தா’ ஒப்பீடு மற்றுமொரு தமாஷ்!) ஆசிரியருக்கு எனது இதயங்கலந்த நன்றி.
’தனிமனித ஒழுக்கம் இல்லை’யெனில் நடைமுறையில் எதுவுமே சாத்தியமில்லை என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். சட்டத்தால் எதையும் சாதித்து விட முடியாது – ஏனெனில், புதிதாக இயற்றப்படும் சட்டத்தோடு, மீறுதலும்/புகுந்து வெளி வருதலும் பிறக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆக, ‘தனிமனித ஒழுக்கம்’ ஒன்றுதான் தீர்வுக்கு வழி.
‘அறியப்படாத அண்ணா ஹசாரே’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் இன்னும் நிறைய பேரால் அறியப்படலாம் என்பது என் அபிப்பிராயம் – சந்திரமௌளி அண்ணாவுக்கு வைக்கும் கோரிக்கையும் கூட.
-அறியப்படாத அண்ணா ஹசாரே, வி. சந்திரமௌளீஸ்வரன், கிழக்கு பதிப்பகம், ரூ 75/-
Labels:
என் பார்வை,
கிழக்கு பதிப்பகம்,
வி. சந்திரமௌளீஸ்வரன்,
ஹசாரே
Subscribe to:
Posts (Atom)





