Tuesday, April 11, 2006

பசங்களுக்கு பரீட்சை வந்தா நம்ம பாடு திண்டாட்டந்தேன்; டி.வி., சாப்பாடு எல்லாம் இரண்டு, மூன்றாம் பட்சமாகியதில், சினிமாவைப் பார்க்க முடியாமலே போய்விட்டது! சிவா படித்தது (கவனிக்கவும்!) வகுப்பு மூன்று என்றாலும் பெற்றோருக்கே உரிய டென்ஷனில் எதுவுமே பிடிக்கவில்லை (இத பாருடா! என்னாமா வுடறான் ரீலு!). ஒரு வழியாய் சிவா எக்ஸாம் முடிந்ததில் (எனக்கு) ரொம்ப சந்தோஷம். (இருக்காதா பின்னே, திருட்டு சிடியில் படம் பாக்கலாமே!)

சரவணா
'ஜோ'வுக்குகாகப் பார்த்த படம். அதென்னமோ தெரியவில்லை, சிம்பு-ஜோ பொருத்தம் திரையில் அம்சமாக இருக்கிறது. மனுஷி இளமை + ஸ்லிம் (ஹி...ஹி..!). சிம்புவுக்கு நடிப்பும் காமெடியும் நன்றாக வருகிறது (நடிப்பே காமெடிதான் என்ற தவறான வதந்தியும் உண்டு!). அடிதடி, ரத்தக் களறியில் வந்த தெலுகு இறக்குமதியில் 'ஜோ'வைத் தவிர வேறு எதுவுமே இல்லை இயக்குனர் கே எஸ் ரவிகுமார். அப்டியா?

சங்கமம் (விஜய், ஞாயிறு காலை 09.30 மணி)

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் வித்தியாசமாயும் சுவாரஸ்யமாயும் இருப்பதாக அவ்வப்போது காதில் விழுவதுண்டு. அந்த வகையில் பின்னணி பாடகி மாதங்கி அவர்கள் நடத்தும் 'சங்கம'த்தில் பத்மஸ்ரீ எஸ் பி பி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று.

'ஆயிரம் நிலவே வா', 'இயற்கை என்னும்', 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்', 'வான் நிலா, நிலா அல்ல', 'பொட்டு வைத்த முகமோ', 'என்னடி மீனாக்ஷ¢', 'நலம் வாழ', 'இது ஒரு பொன்மாலைப் பொழுது', 'பனி விழும் மலர்வனம்', 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' என எனக்குப் பிடித்த பாடல்களையே பாடியதில் டபுள் சந்தோஷம்!

எஸ் பி பி அவர்கள் பாடும் 'நிலா' பாட்டுக்கள் ஹிட் ஆவது பற்றி கங்கை அமரனின் காமெண்ட்; 'நிலாவும் ரவுண்ட்; எஸ் பி பியும் ரவுண்ட்!'

எஸ் பி பி அவர்கள் பேசும்போது தென்பட்ட பணிவு 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' பணிவு. ஒரு anchor எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாதங்கி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

வரும் வாரமும் தொடர்கிறதாம்....பார்க்க வேண்டும்...பாருங்கள்!

Hard Target(தமிழ்)(விஜய், ஞாயிறு காலை 11.00 மணி)

கதைக் கருவும், துவக்கக் காட்சியும் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் superb! னால், படம் நெடுக breath taking stuntதான்; அதுவும் climax காட்சிகளின் வன்முறை நம்மை உறைய வைக்கிறது; சமயத்தில் போரடிக்கவும் செய்கிறது. வான் டாமே படங்களின் பலமே ஸ்டண்ட்/வன்முறை காட்சிகள்தாம். னால், அதையே நம்பி எடுத்தால்?
‘விஜய்’ டப்பிங்-ல் கண்ணியம் இருக்கிறது; அனாவசிய வார்த்தை ஒன்றுகூட இல்லை. சந்தர், நீங்கள் இனி ‘விஜய்’ தமிழாக்க ங்கிலப் படங்களைப் பார்க்கத் துவங்கலாம்.

மெர்க்குரி பூக்கள்

நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட அவலங்கள்தான் கதை. ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஒரு துள்ளல் தெரிகிறது (மாமனார் வீட்டுக்கு வரும் ஸ்ரீகாந்த்-ன் நடிப்பைப் பாருங்கள்!) அப்பாவாக வரும் டெல்லி கணேஷ் பட்டையைக் கிளப்புகிறார். காமெடி கருணாஸ் கடைசியில் சீரியஸாய் அட்வைஸ் கொடுப்பது நிச்சயம் சினிமாவில்தான் வரும்! பாலச்சந்தர் படங்களில் டெலி•போன் நடிப்பது போல, இதில் மொபட்-டையும் நடிக்க வைத்திருப்பது சுவாரஸ்யம். சண்டைக் காட்சியையும், இரண்டு பாடல்களையும் (ஒரு பாடலில் சமிக்ஷா ரொமபவே ஓவர்!) ட்ரிம் செய்திருந்தால் படம் 'ஓஹோ'. னாலும் ஹீரோயிஸம், பஞ்ச் டயலாக் இல்லாமல் கதை பண்ணியிருக்கும் ஸ்டான்லிக்கு 'தில்' ஜாஸ்தி!

No comments: