Saturday, May 20, 2006

மத்தியானம் டி·பன் பாக்ஸை தொறந்தா, வழக்கம்போல 4 ரொட்டி; கூடவே தொட்டுக்க உருளைக்கிழங்கு கார கறி. இன்னிக்கு என்னமோ தெரியலை, உ கிழங்கு கறி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருந்தது. மெதுவா சாப்ட ஆரம்பிச்சேன்.

ரொட்டியோட சாப்டும்போது காரம் தெரியல, கறியைத் தனியா சாப்டா காரம் தூக்குது!! 4 ரொட்டி காலியாச்சு; ஆனா கறி ஆவேல்ல; கொஞ்சம் நெறயா இருந்தது! (கறிய விட்டு வெச்சா மாமி விட்டு வெக்க மாட்டாளேன்னு) மிச்சத்த சாப்டு வெப்போம்னு காலி பண்ணா.....'யப்பா! நாக்கு எரிஞ்சு, நெஞ்சு எரிஞ்சு நார்மலா எரியற வயிறும் சேந்து எரிய ஆரம்பிச்சது!'

அப்டி இப்டின்னு 'cat in the hot tin roof' மாறி அலைஞ்சேன். சேஞ்சுக்குப் பதிலா கொடுக்கற சாக்லேட் கூட இன்னிக்குனு கவுண்டர்ல இல்ல! மெனுல போட்ருந்த எக்ஸ்ட்ரா ஸ்வீட் (5 ரூவா!) வாங்கிப் பாப்பம்னு சேமியா பாயசத்தை கிண்ணத்துல எடுத்தாந்து 'லபக், லபக்'.

பாதி கிண்ணம் காலியானப்றமா தெகட்ட ஆரம்பிச்சது! சாப்டவே முடியல! என்ன பண்றது? திராட்சை, முந்திரினு போட்டு வெர்மிஸெல்லி(?!) சேமியால அம்சமா பண்ணிருக்கான்; இதை எறிஞ்சா பண்ணவன்(?!) வருத்தப்படுவானேன்னு தெகட்ட தெகட்ட சாப்டு முடிச்சேன். 'அய்யயோ! ரொம்ப தித்திக்குதே!'

after food 'ஸீரா'வை உள்ள தள்னப்பறமாதான் நார்மலுக்கு வந்தேன் போங்கோ!
இதுலேந்து என்ன தெரியறது?

1. மாமிகிட்ட ஸ்ட்ராங்கா காரத்தை கம்மி பண்ண சொல்லணும்! (ஹவுஸ்காரி சமையல குத்தம் சொல்ற தெகிரியம் லோகத்துல எந்த ஹஸ்பெண்டுக்காவது உண்டா?!)

2. 'moral of the matter' என்னன்னா, வாழ்க்கை ரொம்ப ஸ்வீட்டா இருந்தாலும் கஷ்டம்; ரொம்ப காரமா இருந்தாலும்.

இப்டில்லாம் சொல்லி போரடிக்க போறதில்ல. ஒத்தை வரில எல்லாம் ஓவர்.

நேக்கு ரொம்ப காரமும் ஆகாது; ரொம்ப ஸ்வீட்டும் ஆகாது! அவ்ளோதான்!!

2 comments:

Priyamvada_K said...

idhukkudhaan solradhu, east or west, thayir saadam is best-nu! :)

adhu mattum irundhirundhaa, indha uruLaikkizhangu oorugai (?!) saapida kashtappadavEndaame?

Priya.

Barani said...

funny :))!! Got in from NV..

cheers,
Barani